தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

kaluthavalai murukan kovil களுதாவளை திருநீற்றுக்கேணி சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலயம்

Go down

kaluthavalai murukan kovil களுதாவளை திருநீற்றுக்கேணி சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலயம்  Empty kaluthavalai murukan kovil களுதாவளை திருநீற்றுக்கேணி சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலயம்

Post  ishwarya Wed May 22, 2013 4:35 pm

அமைவிடம் தட்சன கைலாயம் என புராண இதிகாசங்களில் வர்ணிக்கப்படும் புகழ்பெற்று விளங்கும் இலங்கைத் தீவின் கிழக்கு மாகாணத்தில் மட்டு மாநகரில் தெற்கே கல்முனை வீதியில் 23 கிலோ மீற்றர் தூரத்துக்கு அப்பால் நீர் வளமும் நில வளமும் ஒருங்கே அமையப் பெற்று விளங்கும் வெற்றிலை செய்கையும் செந்நெல்லும் பயிர்களும் விளைகின்ற பரந்து விரிந்துள்ள மிகவும் பழம் பெரும் கிராமம் களுதாவளை ஆகும். இங்கு களுதாவளைப் பிள்ளையாரும் களுதாவளையின் பிரதான வீதியில் இருந்து கிழக்கு நோக்கி 1/2 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்து திருநீற்றுக்கேணி என்னும் தீர்த்தக் குளத்தின் முன்பாக குடிமனைகள் சூழ்ந்த இடத்தில் வீதியில் வேம்பு அரசு ஆல் தென்னை பனை நாவல் முதலிய மரங்கள் சூழ்ந்திருக்கும் புண்ணிய பூமியில் மூர்த்தி தலம் தீர்த்தம் என்னும் முச்சிறப்புகளுடன் திருநீர்ருக்கேணி சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலயத்தின் அமைந்துள்ளது ஆலய முன்றலில் அமைந்துள்ள தீர்த்தக்கேணியில் சிவசின்னங்களில் ஒன்றான திருநீறு கிடைப்பதால் திரு நீற்றுக்கேணி என்ற காரணப் பெயருடன் இக் கோவில் திருநீர்ருக்கேணி சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலயம் எனவும் சிறப்பாக அழைக்கப்படுகிறது வரலாறு களுதாவளைக் கிராமத்தின் தென் பகுதியில் 7ம் கண்டத்தில் காணிகளை கி பி 1886 ம் ஆண்டில் இலங்கையை ஆட்சி செய்த வேலைக்காரத்துரைமார் விற்றனர் இதில் அமரர் கதிரேசர்என்பவர் முகாமையாளராக நின்று 40 ஏக்கர் காணியை வாங்கினார் 9 பேருக்கு 4ஏக்கர் படி கொடுத்து அவரும் ஒரு பங்கை எடுத்துக் கொண்டார் கதிரேசன் காணி வாங்கும் போது திருமணம் ஆகவில்லை பின்பு பெரிய பிள்ளை என்பவரை திருமணம் செய்தார் இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன கந்தப்பர் சின்னத்தம்பி வல்லியம்மை ஆகிய குழந்தைகளாகும் பின்பு கதிரேசன் அமரத்துவம் அடைந்துவிட்டார் பின்பு கந்தப்பர் சின்னத்தம்பி ஆகிய இருவரும் கூலித்தொழில் மூலம் குடும்பத்தை வழிநடத்தி வந்தார் கந்தப்பர் திருமணம் முடிக்காமல் பிரமச்சாரியாகவே வாழ்ந்து வந்தார் கந்தப்பர் கொம்பனிக்காரர்களுக்கு யானை வண்டி வேலைக் காரனாக சேவை செய்து வந்தார் . மேலும் கந்தப்பர் அக்கால கட்டத்தில் கதிர்காமத் தலத்திற்கு அடிக்கடி யாத்திரை செய்து வந்தார் கதிர்காமக் கந்தனின் அருள் அவருக்கு கிடைத்தது ஒரு இரவில் முருகன் கனவில் தோன்றி கந்தப்பா நீ அடிக்கடி கதிர்காமம் வந்து தொல்லைப்படுத்தாதே நீ வேலை செய்யும் தோட்டத்தில் நான் விக்கிரகமாக குறிப்பிட்ட இடத்தில் விக்கிரகமாக புதையுண்டு இருக்கின்றேன் அந்த விக்கிரகத்தை எடுத்து அங்கே பூசை செய்து எனது அருளைப் பெற்றுக்கொள் என்று முருகப் பெருமான் கூறினார் அவர் வேலை செய்த திலானத்தொட்டத்தில் குறிப்பிட்ட இடத்தில் தோண்டிப் பார்த்த போது அந்த விக்கிரகம்தெரிந்தது அன்றைய நாளில் இருந்து பந்தல் போட்டு வணங்கி வந்தார் தனது தம்பி சின்னத்தம்பி என்பவர் திருமணம் முடித்து ஒரு பெண் குழந்தைக்கு தகப்பன் ஆனார் சின்னத்தம்பிஎன்பவரின் மனைவி சில வருடங்களின் பின் இறந்து விட இருவரும் கடவுளுக்கு தொண்டு செய்வதிலேயே ஈடுபட்டு வந்தனர் கந்தப்பர் வணங்கி வந்த தொட்டத்துக்காணிகள் விற்கப்பட்டு வந்தன சுவாமியை வைத்து வணங்கி வந்த இடத்தை மாற்ற வேண்டி ஏற்பட்டது இதன் பின்பு தந்தையார் கதிரேசன் என்பவரால் வாங்கியிருந்த 4 ஏக்கர் காணியில் ஆலயம் அமைத்தனர் என்று பெரும் ஆலயத்துடன் புண்ணிய தளமாக விளங்கிக் கொண்டு இருக்கிறது இந்த திருநீற்றுக் கங்கையில் தீர்த்தம் ஆடுகின்ற போது மலர்கள் தூவி தீர்த்தம் ஆடுகின்ற முறைமை காணப்படுகிறது


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum