தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சூரியன் சுட்டெரிக்கும் தோஷ காலம்

Go down

சூரியன் சுட்டெரிக்கும் தோஷ காலம் Empty சூரியன் சுட்டெரிக்கும் தோஷ காலம்

Post  ishwarya Thu May 23, 2013 12:20 pm

இந்தியாவில் சடங்கு, சம்பிரதாயங்கள், வழிபாடுகள், விரதங்கள் ஆகியவை பன்னெடுங்காலமாக தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இவை எல்லாம் சித்தர்கள் முனிவர்கள், ரிஷிகள் ஏற்படுத்தி தந்த வழிமுறையாகும். இதை ஆராய்ந்து பார்க்கும்போது ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு காரணமும், அறிவியல் முக்கியத்துவமும் உள்ளது.

இந்து மதத்தில் வரும் முக்கிய நிகழ்ச்சிகள் எல்லாம் பஞ்சாங்கம் பார்த்து தீர்மானிக்கப்படுபவை. பஞ்சாங்கம் என்பது இந்துமத கால அட்டவணை. வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களே பஞ்ச அங்கம் எனப்படுகிறது. இந்த பஞ்சாங்க கணக்கின்படியே அக்னி நட்சத்திர காலம் கணக்கிடப்படுகிறது. அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் காலகட்டம் சூரியனின் சஞ்சாரத்தை மையமாக வைத்து கணக்கிடப்பட்டுள்ளது.

சூரியன் சித்திரை மாதம் மேஷ ராசியில் நுழைந்து, ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசி வீட்டில் இருப்பவர். சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் நுழைந்தவுடன் கோடை காலத்தின் ஆரம்பமாக சூரியனின் கதிர்கள் நம்மை சுட்டெரிக்கிறது. மேஷ ராசி செவ்வாயின் வீடாக இருப்பதாலும், செவ்வாய் நெருப்புக்கோள் என்பதாலும் உஷ்ணம் உருவாகிறது. சூரியன் பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் நுழையும் காலம் முதல் ரோகிணி நட்சத்திரம் இரண்டாம் பாதம் முடியும் வரை உள்ள காலம் அக்னி நட்சத்திர காலமாகும்.

இதில் கிருத்திகை நட்சத்திரத்தில் செல்லும் காலத்தில் அதாவது சித்திரை கடைசி வாரம் தொடங்கி வைகாசி முதல் வாரம் வரை உள்ள காலகட்டமே மிக அதிக வெப்பம் உள்ள காலமான ‘கத்திரி வெயில்’ எனப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரியன், அதிதேவதை அக்னி. ஆகவேதான் நெருப்புக்கு இணையான வெப்பத்தை கக்குகிறது. வெயில் கொளுத்தி எடுக்கும் இந்த காலத்துக்கு அக்னி நட்சத்திரம் என்று பெயர் வர இதுவே காரணம். அக்னி நட்சத்திரத்தை முன் ஏழு, பின் ஏழு என இரு பிரிவாக பிரித்து கூறுகிறது ஜோதிட சாஸ்திரம்.

நமது கலாசாரப்படி ஆடி மாதத்தில் புதுமண தம்பதிக்கு ஆடி சீர் வைப்பது வழக்கம். சீர் வைத்து புதுப்பெண்ணை தாய் வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவார்கள். ஆடி மாதத்தில் கருத்தரித்தால் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும். சித்திரை கடும் வெப்ப காலம் என்பதால் வியர்வை, புழுக்கத்தால் குழந்தையும், தாயும் மிகவும் சிரமப்படுவார்கள். மேலும் கடும் வெயில் காலம் என்பதால் அவர்களுக்கு உடல் உபாதைகள், நோய் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பும் அதிகம். இதை தவிர்க்கும் நோக்கிலேயே ஆடியில் பெண்கள் கருத்தரிப்பதை தவிர்ப்பதற்காக புதுமண தம்பதிகளை பிரித்து வைக்கும் வழக்கம் உருவானது.

கடும் வெப்பம் நிலவும் காலம் என்பதால் அக்னி நட்சத்திர காலம் தோஷ காலமாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் நல்ல காரியங்கள் செய்யலாமா என்ற சந்தேகம் எல்லோருக்கும் உண்டு. அக்னி நட்சத்திர காலத்தில் திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம், பெண் பார்த்தல், உபநயனம் ஆகியவை செய்வதில் தவறு இல்லை. சுபவிசேஷங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தலாம். அதற்கான ஏற்பாடுகளை செய்யலாம்.மற்றபடி ஏற்கனவே வேண்டிக்கொண்டு நிறைவேற்றும் நேர்த்திக் கடன்கள், விசேஷ பூஜைகள், முடி இறக்குதல், காது குத்துதல், புது வீட்டுக்கு குடிபோய் பால் காய்ச்சுதல், கிரகப்பிரவேசம் செய்தல், பூமி பூஜை செய்வது, கிணறு வெட்டுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

கோள்கள் பெயர்ச்சியால் உருவாகும் கிரகணம் போன்றவற்றை தோஷமாக குறிப்பிட்டுள்ளார்கள் நம் முன்னோர்கள். அந்த காலகட்டத்தில் வெளியே செல்வது, கிரகணம் நடப்பதை வெறும் கண்களால் பார்ப்பது ஆகியவை உடல்நலத்துக்கு, பார்வைக்கு கேடு என்று அறிவியலாளர்களும் கூறுகிறார்கள். அந்த வகையில், அக்னி நட்சத்திர காலமும் நம் ஜோதிட சாஸ்திரப்படி தோஷ காலமாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் சூரியன் பார்வையில் படும்படி அதிகம் வெளியே சுற்றுவதை குறைத்துக் கொண்டு கோடை காலத்துக்கு ஏற்ற உணவு வகைகளை உட்கொண்டு, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கிலேயே இவ்வாறு சொல்லி வைத்திருக்கிறார்கள். அக்னி நட்சத்திர காலம் முடிந்த பிறகு தோஷம் நீங்குகிறது. அன்றைய தினம் கோயில்களில் விசேஷ வழிபாடுகள், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வறுமையால் கள்ளி பால் கொடுப்பது அந்த காலம்… கள்ள காதல் உல்லாசத்துக்காக விஷம் கொடுப்பது இந்த காலம்!
» சுட்டெரிக்கும் வெயிலில் வறண்டு போன சருமத்தை பொலிவாக்குவது எப்படி
»  சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க டிப்ஸ்
» சுட்டெரிக்கும் வெயிலில் சருமம் வறண்டுவிட்டதா???
» சுட்டெரிக்கும் வெயில்: பாதுகாப்பு முறை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum