திருநிலாத் திங்கள் துண்டம் கோவில்
Page 1 of 1
திருநிலாத் திங்கள் துண்டம் கோவில்
ஸ்தல வரலாறு...
பெரிய காஞ்சீபுரத்திலுள்ள ஏகாம்பரேஸ்வர் கோவில் உட்பிராகாரத்தில் அமைந்திருக்கும் சிறிய சந்நிதி இது. மூலவர், நிலாத்திங்கள் துண்டத்தான், நின்ற திருக்கோலமாக மேற்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். தாயார் திருநாமம் நேர் ஒருவரில்லாவல்லி. தவமிருந்த பார்வதிக்குத் தமையனான பெருமாள் உதவிய தலம் இது.
சிவன் கோவிலில் பெருமாளுக்குச் சந்நிதி இருப்பது, ஒருமைப்பாட்டை உணர்த்துகிறது. வைணவம், சைவம் இவ்விரண்டு சமயங்களும் ஒன்றோடொன்று உறவு கொண்டிருக்கின்றன. திருப்பாற்கடலிலிருந்து அமிர்தம் கடைந்த காலத்தில் நஞ்சின் வெப்பம் பட்டுப் பிணிபட்டதால் அதன் கடுமை தீரும் பொருட்டுச் சிவபிரான் சடைமுடியில் அணிந்துள்ள நிலாவின் அமிர்த தாரைகள் பட்டு அப்பிணி நீங்கிச் சாந்தம் நிலவிற்று என்பது புராண வரலாறு.
அதாவது சிவபெருமான் தலையில் இருக்கும் சந்திர ஒளி-திருமால் மீது பட்டதும் திருமாலுக்கு வெப்பம் நீங்கியது. இதனால் பெருமாளுக்கு நிலாத்திங்கள் துண்ட பெருமாள் என்று பெயர் வழங்கலாயிற்று. சிவபெருமானின் சடையில் அணிந்துள்ள பிறைத் துண்டத்தின் குளிர்ந்த ஒளி, திருமால் மீது பட்டதால், திருமாலின் நோய் தீர்ந்தது.
அதனால்தான் நிலாத்திங்கள் துண்டப் பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்கிறார்கள். ஒரு மாமரத்தின் கீழே பார்வதிதேவி தவம் செய்யும் பொழுது, இந்தத் தவத்தை சோதிக்க சிவன் அந்த மாமரத்தை எரித்ததாகவும் அப்பொழுது பெருமாள் தனது அம்ருத கிரணங்களைக் கொண்டு எரிந்துபோன மாமரத்தை தம் தழைக்கச் செய்து குளிர்ச்சியை உண்டு பண்ணியதாகவும் மற்றொரு வரலாறு. இந்தக் கோவிலில் பார்வதியின் அருகே வாமனர் இருக்கிறார்.
அந்த வாமணர் தான் மாமரத்தைத் தழைக்க வைத்த பெருமாள் என்று புராணச் செய்தி கூறுகிறது. கோபத்தால் செய்த பாவங்கள் எதுவாக இருந்தாலும் அத்தகைய பாவங்களைப் போக்க இந்த தலத்திற்கு வந்து பெருமாளை வணங்கினால் பாவங்கள் விலகிவிடும்.
நெருப்பினால் ஆபத்து ஏற்படாமல் இருக்கவும் வியாபார நஷ்டம் ஏற்படாமல் தடுக்கவும் பெரும்பதவியில் இருப்பவர்களின் கோபத்திற்கு ஆளாகி பாதிக்கப்பட்டிருந்தால் அந்த பாதிப்பு நீங்கவும் இங்குள்ள பெருமாளை வேண்டி பிரார்த்தனை செய்தால் கை மேல் பலன் உண்டு.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திருநிலாத் திங்கள் துண்டம் கோயில்(காஞ்சீபுரம்)
» தமிழ் திங்கள் (மாதம்)
» நவராத்திரி கோலங்கள்: திங்கள்
» ஸ்ரீவனதுர்கையம்மன் கோவில்
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum