தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குருவின் பார்வை!

Go down

குருவின் பார்வை!                      Empty குருவின் பார்வை!

Post  ishwarya Wed May 22, 2013 5:49 pm

அகில உலகிற்கு காரணகர்த்தாவாக விளங்கும் எம்பெருமான் நால்வேதங்களை

தேவர்க்கும் மூவருக்கும் முனிவர்களுக்கும் உரைத்து உணர வைக்கவென தெட்ணா மூர்த்தியாக கல்லால் மரத்தின் கீழ் இளம் குருவாக வீற்றிருந்து சீடர்களுக்கு வேண்டிய உபதேசம் அருளினார். அவரது உபதேசம் இந்து சமயம் இன்று வரை மாறாது மங்காது ஒளி தந்து மக்களை நல்வழி செல்ல உறுதுணை புரிகிறது.

ஆக இறைபரம்பொருளிற்கு இணையான பெருமையைக் கொண்ட வியாழ குரு பகவான் இப்பொழுது இடப் பெயர்ச்சி அடைவதால் மனிதர்களாகிய எமக்கு பன்னிருராசிகளிலும் அவர் பார்வை எப்படி அமையப்போகிறது என்பதை குரு என்ன பலனை அளிக்கப் போகிறார் என்பதையும் சொல்ல முன்பு குருவைப் பற்றிச் சிறிது பார்க்கலாம்.

சதுர்யுகங்கள் என்று சொல்லப் படும் யுகங்கள் கிருதாயுகம், துவாபரயுகம், திரேதாயுகம் கலியுகம் எனும் நான்கு வகை உண்டு. இதில் இப்பொழுது நடந்துகொண்டிருப்பது கலியுகம் ஆகும். கலியுகத்திற்கு முந்திய திரேதாயுகத்தில் தேவர்கள் தலைவனான தேவேந்திரன் தேவலோகத்தில் தேவர்களுடன் மகிழ்ச்சியில் திளைத்து தன்நிலை மறந்து இருந்தான். அந்நேரம் தேவர்களுக்கு குருவாக இருந்த பிரகஸ்பதியாகிய வியாழபகவான் அங்கு வருகை புரிந்தார். அவர் வருவது தெரிந்து எழுந்து குருவை வணங்கி மரியாதை செய்யாது மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி இருந்தான்.

தேவர்கோன் தன்னை அலட்சியம் செய்து மதிமயக்கத்தில் இருந்ததை பார்த்த குருவானவர் அவ்விடத்தை விட்டு கோபத்துடன் வெளியேறினார். அவர் சென்றதும் அமராபதித் தலைவனின் ஐஸ்வர்யம் குறையத் தொடங்கியதோடு தேவர் உலகமும் மங்கி அதன் பெருமையை இழக்கத் தொடங்கியது. இந்திரன் மங்கையரின் ஆடல் பாடல்களில் மூழ்கி மதி இழந்து அகந்தை குடிகொள்ள குருநிந்தை செய்தான். அவனைப் பாராது வியாழகுரு மறைந்து விட்டார்.

இந்திரன் குருவை மதிக்காததால் பெரும் பாவம் சூழும் என அவரை தேடுகிறார் மன்னிப்பு கேட்க முடியவில்லை. சத்தியலோகத்தில் எங்கு தேடியும் கிடைக்காது பிரம்ம தேவரிடம் வணங்கி தன் தவறுக்கு வருந்தினான். பிரம்மனுக்கோ அவனுக்கு பெரும் பாவம் சூழ்ந்து அவஸ்தை அடையப் போகிறான் என்பது தெரியும். இந்திரனே நீ செய்த தவறால் குருவை இழந்துள்ளாய். அவரை காணும் வரை அசுர குலத்தில் மூன்று தலைகளை உடையவரும் அறிவு ஞானத்தில் சிறந்தவரும் துவஸ்டாவின் மகனுமாகிய விஸ்வருபனை குருவாக ஏற்று அவர் வழியில் செல் எனக்கூறி சென்றார்.

அதன் பின் விஸ்பரூபனை தேவர் குருவாக்கி ஒரு யாகம் செய்யும் போது அவர் தேவர்குலம் அழிந்து அசுரர் குலம் வாழவேண்டும் என யாகம் செய்வதை ஞான திருஷ்டியில் அறிந்த இந்திரன் அசுரன் விஸ்வரூபவனை அழித்தான்.

இதனால் பிரம்மஹத்தி தோஷம் அவனைப்பற்றியது. இந்திரனின் பிரம்மஹத்தி தோஷத்தை பூமியும் மரங்களும் நீரும் பெண்களும் ஏற்றுக் கொண்டதும். அவன் தோஷம் நீங்கப்பெற்றான். ஆனாலும் பழிவாங்க விஸ்வரூபனின் தந்தை துவஷ்டா கடும் கோபத்துடன் கொடிய யாகத்தை செய்து விருத்திகாசுரன் எனும் கொடிய அசுரனை இந்திரனுடன் போரிட்டு அழிக்க ஏவி விடுகிறான்.

இந்திரனும் கடும் போர் புரிந்து அசுரனை அழிக்க மீண்டும் பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொள்ள பெரும் துன்பத்தை அடைந்து அல்லுறுகின்றான். ஈற்றில் தாமரைத்தண்டில் ஒளிந்து கொண்டு தன்நிலைக்கு வருந்தினான். அவன் இல்லாமல் தேவருலகம் இருண்டு போய் இருந்தது. செய்வதறியாது திகைத்த தேவர்கள் மீண்டும் தமது தேவகுருவான வியாழபகவானை வணங்கி தேவேந்திரன் தோஷம் நீங்கி பழைய நிலைக்கு வர வழிசொல்லுமாறு இரந்து வணங்கி நின்றனர். அவரும் பூவுலகம் சென்று அங்கு உன்பாவம் போக்கி நன்நிலை அடையலாம், என்று ஆசிகூறினார்.

குருவின் சொல்லை மதித்து வணங்கி பூவுலகம் வந்த தேவேந்திரன் காசி காஞ்சி இமயமலை எங்கும் தரிசனம் செய்து கங்கையில் நீராடி புண்ணிய தலங்கள் என்று போற்றி வழிபட்டு சிவஸ்தலங்கள் எங்கும் அலைந்து திரிகிறான். அவன் தோஷம் தீரவில்லை நாளுக்குநாள் பொலிவு குறைந்து கொண்டே வந்தது. இறுதியில் கடம்பவனம் எனும் பதிக்கு அருகில் வந்து சேர்கிறான்.

அங்கு வந்ததும் அவனப்பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கி புதுப்பொலிவு பெற்றுவிடுகிறான். உடனே வியாழபகவானுக்கு தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தான். தேவகுருவும் உலகிலேயே சிறந்தபுண்ணிய தலமும் புண்ணிய தீர்த்தமும் உள்ளன அவற்றை நாம் கண்டு கொள்ளவேண்டும். அதை அறிந்து வழிபட்டு உடனே திரும்பி தேவலோகம் வந்து விடு என ஆணையிடுகிறார்.

தேவேந்திரன் கடம்பவனத்தில் அழகிய பொற்றாமரைக்குளத்தில் நீராடி மூலகாரணனாகி தானே முளைத்தெழுந்த சுயம்புலிங்கத்தைக்கண்டு பாவங்களைப் போக்கியருளிய சோமசுந்தரப் பெருமானை பலவாறு துதி செய்கிறான். மாணிக்க விமானம் அமைத்து அதை சிவனார்க்கு சாத்தி அபிஷேகம் செய்து பொற்றாமரையால் அர்ச்சித்து வழிபட சிவன் 'வேண்டும் வரம் யாது' என்கிறார்.

எப்போதும் தங்களை பூஜிக்க வேண்டும் என இந்திரன் வேண்டவும் 'ஒவ்வொரு சித்திரா பெளர்ணமி நாளிலும் நீ இங்கு வந்து பூஜிப்பாயாக, வருடம் முழுதும் பூஜை செய்த பலன் கிடைக்கும்', என்று ஆசிர்வதித்து தேவருலகம் சென்று சகல இன்பங்களையும் பெற்று வாழ்வாயாக. என வாழ்த்தினார்.

தேவர் மனிதர் இப்படி தலைமைபதவியில் இருப்பவர் முதல் சாதரண மானிடர் வரை எவாராயினும் கிரக பாதிப்புகள் அவர்கள் மீது தமது தாக்கத்தை ஏற்படுத்திச் செல்கின்றன. அவ்வேளை நாம் எமது கடமையிலிருந்து வழுவாது குருவை நிந்திக்காது, எல்லாமும் எப்போதூம் கிடைக்க அருள்தரும் இறைவனை மறவாது வழிபட்டால் இத்துன்பங்களில் இருந்து விடுபட இறைவழிகாட்டுவார். ஆகவே குருபெயர்சி பன்னிருராசியினருக்கும் எப்படி பலன்தருவார் அவர் பார்வை எமக்கு எப்படி நன்மை செய்யப்போகிறது எனப் பார்போம்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum