தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உற்சாகமான உடற்பயிற்சி உயிருக்கு பாதுகாப்பு

Go down

உற்சாகமான உடற்பயிற்சி உயிருக்கு பாதுகாப்பு Empty உற்சாகமான உடற்பயிற்சி உயிருக்கு பாதுகாப்பு

Post  ishwarya Wed May 22, 2013 11:54 am

தாம்பத்ய உறவின் மூலம் உடலிலுள்ள அத்தனை நரம்புகளும், அணுக்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன என்றும், புற்று நோய் வரும் வாய்ப்பைக் கூட அது குறைக்கிறது என்றும் சிலிர்ப்பூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தம்பதியரை உற்சாகமூட்டியிருக்கின்றனர் பாலியல் தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட நிபுணர்கள்.

இதயநோய் தடுக்கப்படுகிறது:

உறவின் போது உச்சத்தில் வெளியாகும் எண்டோர்பின் உணவின் செரிமானத்துக்கும், உடலிலுள்ள சுருக்கங்களை விலக்கி தோல் இளமையடையவும் உதவுகிறது என்றும் அவர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். தாம்பத்ய உறவின் மூலம் உடல் வலிமையடையவதோடு இதய நோய்கள் வரும் வாய்ப்பும் குறைவதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.



இந்தியா மட்டுமல்ல உலகில் உள்ள பெரும்பான்மையான நாடுகளில் வாழும் மக்கள் இதயத்துக்கும் உடலுறவுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி தவறான கருத்துகளைக் கொண்டுள்ளனர். ஆனால் இது பற்றி ஆய்வு நிகழ்த்திய வல்லுநர்கள் உடலுறவால் எந்த ஆரோக்கியமான இதயமும் பாதிக்கப்படுவதில்லை என்று உறுதியாகக் கூறுகின்றனர். உண்மையில் ஒத்த மனத்துடன் உடலுறவில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவதால் மாரடைப்பு ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும். அந்த வகையில் உடலுறவு என்பது நமக்கான பாதுகாப்புக் கவசமாகவே செயல்படுகிறது. எப்படி என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

உறவின் நிலைகள்

உறவின் நிகழ்வுகளை எழுச்சி நிலை, கிளர்ச்சி நிலை, உச்ச நிலை, மீள் நிலை என ஆய்வாளர்கள் பிரித்துள்ளனர். இந்த நான்கு நிலைகனிலும், இதயமானது பலவகையான ஆரோக்கியமான மாற்றங்களை அடைவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாரடைப்புக்கான காரணங்களை ஆராய்ந்த இதய மருத்துவர்கள் அவற்றை மூன்று வகையாகப் பிரித்துள்ளனர். அதாவது இதயத்துக்குப் போதுமான உடற்பயிற்சி இல்லாதது, உடலின் எடை அதிகமாதல், மன இறுக்கம் ஆகியவைதான் அடிப்படையான காரணங்கள். இந்த மூன்று காரணங்களையும் வெல்லக்கூடிய ஆற்றல், உடலுறவுக்கு உண்டு என ஆணித்தரமாகக் கூறுகிறார்கள்.

தம்பதிகளின் வயதுக்கும், அவர்களின் உடலில் ஏற்படும் உடலியல் மாற்றங்களுக்கு மிகவும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தாம்பத்யத்தின் போது ஏற்படும் உடலியல் மாற்றங்கள் யாவும் ஒரே மாதிரியாக இருந்தாலும் இதற்காக எடுத்துக் கொண்ட நேரம் உறவின் தன்மை போன்றவை ஒவ்வொருவருக்கும் மாறுபடக்கூடும்.

உடலியல் மாற்றங்கள்

தம்பதியர்களின் வயது இருபதாக இருந்தால் அவர்களின் உடலில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் மற்ற தம்பதியர்களைவிட அதிகமாக இருக்கும். இளமையின் விளிம்பில் இருப்பதால் உடலில் உள்ள பரிவு நரம்பு அமைப்பு அளவுக்கு அதிகமாகச் செயல்பட்டு ரத்த அழுத்தத்தின் அளவு உயர்வதோடு அல்லாமல் இதயத்துடிப்பின் அளவும் பன்மடங்கு அதிகமாகிறது.

உச்சக்கட்ட உறவின் போது ரத்த அழுத்தத்தின் அளவானது 220/110 என்ற அளவுக்கு உயரும். இவ்வாறு உச்ச நிலைக்குச் சென்ற ஓரிரு நிமிடங்களில் மறுபடியும் சாதாரண ரத்த அழுத்த நிலைக்கு மீள்கிறது. இதுபோல் உடலுறவின் உச்சநிலையில் ஒரு நிமிடத்துககு இதயம் சுமார் 180 என்ற அளவுக்கு மிகவும் வேகமாகத்துடிக்கும். ஆனால் உச்ச நிலையில் இருந்து மீண்ட ஒரு நிமிடத்துக்குள் இதயத்துடிப்பானது பழைய நிலைக்கு திரும்பிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

வயதானவர்கள் தாம்பத்ய உறவில் ஈடுபடும்போது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் இளம் வயது தம்பதிகள் ஈடுபடும்போது ஏற்படும் உடலியல் மாற்றங்களைவிடக் குறைவானவே இருக்கும்.

உற்சாகமான உடற்பயிற்சி

பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள், தாம்பத்ய உறவு என்பது உடலுக்கு பல நன்மைகளைத் தரக்கூடிய மிகச்சிறந்த உடற்பயிற்சி என்றே கூறுகின்றன. உறவின் போது ஏற்படும் அசைவுகளினால் அந்தப் பகுதியில் உள்ள தசைகள் மட்டுமல்லாமல் முதுகுத்தண்டுவடப் பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறுகின்றன. அதோடு முதுகுத் தண்டுவடப் பகுதியில் உள்ள சிறிய முட்கள்போன்ற எலும்பு அமைப்புகளும் சிதைவு மாற்றங்களுக்கு ஆளாகாமல் தடுக்கப்படுகின்றன.

இவை நிரூபிக்கப்பட்ட உண்மைகளே என நிபுணர்கள் தெரிவித்துள்ளதோடு உடலுறவினால் ஜலதோஷம், உடல்வலி போன்ற சிறு சிறு பலவீனங்கள் வரும் வாய்ப்பும் குறைகிறதாம். எலும்புகளுக்கும், தசைகளுக்கும் கூட வலிமை கூடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதிக கலோரிகள் கரைக்கப்படுவதால் தேவையற்ற கொழுப்புகள் எரிக்கப்பட்டு உடல் குண்டாவதும் தடுக்கப்படுகிறது. எது எப்படியோ, இந்த உற்சாகமான இந்த உடற்பயிற்சியினை காதலர்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum