தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

செல்லிடத் தொலைபேசி கதிர்வீச்சு; பாதுகாத்துக்கொள்ள எட்டு வழிகள்

Go down

செல்லிடத் தொலைபேசி கதிர்வீச்சு; பாதுகாத்துக்கொள்ள எட்டு வழிகள் Empty செல்லிடத் தொலைபேசி கதிர்வீச்சு; பாதுகாத்துக்கொள்ள எட்டு வழிகள்

Post  ishwarya Tue May 21, 2013 5:46 pm

செல்லிடத் தொலைபேசிகளின் கதிர்வீச்சின் அளவினால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றது என உலக சுகாதார அமைப்பினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



எவ்வாறெனினும் இக்கதிர்வீச்சின் தாக்கத்தை குறைத்துக்கொள்வதற்கும் பல வழிகள் உண்டு. அவற்றை கடைப்பிடித்தால் இவ் ஆபத்திலிருந்து தப்பிவிடலாம்.

அமெரிக்காவில் பிரபல அரசசார்பற்ற நிறுவனமான சூழல் பணிக் குழு, அல்லது ஈ.டபிள்யூ.எஸ். எனும் அமைப்பு தொலைபேசி பாவனையாளர்கள் செல்லிடத் தொலைபேசிகளிலிருந்து வெளிவெளியிடப்படும் கதிர்வீச்சு மற்றும் மின்காந்தக் கதிர்களின் தாக்கங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு பின்வரும் ஆலோசனைகளை முன்வைத்துள்ளது. அவற்றை பின்பற்ற முயற்சி செய்யுங்களேன்.

1) கதிர்வீச்சு குறைவாக காணப்படும் தொலைபேசிகளை பயன்படுத்துங்கள்

செல்லிடத் தொலைபேசிகளை வாங்குவதற்கு முன் செல்லிடத் தொலைபேசி வாங்குபவர்களுக்கான வழிகாட்டிகள், இணையத்தளங்கள் அல்லது தொலைபேசி நிபுணர்களின் மூலம் உங்களிடமுள்ள தொலைபேசி மற்றும் நீங்கள் வாங்க விரும்பும் தொலைபேசியின் கதிர்வீச்சு மட்டத்தை அளவினை அறிந்துகொள்ள முயற்சியுங்கள்.

அதிகமான தொலைபேசி மொடல்களின் இலக்கங்கள் பற்றரியின் கீழ் பொறிக்கப்பட்டிருக்கும். அதன்மூலம் உங்கள் தொலைபேசியின் கதிர்வீச்சுக் குறித்து அறிந்துகொண்டு, அடுத்தமுறை அதை குறைவான கதிர்வீச்சு கொண்ட அதேவேளை உங்கள் தேவைக்கும் ஏற்ற தொலைபேசியை வாங்கலாம்.

2) ஹெட் செட் அல்லது ஸ்பீக்கரை உபயோகியுங்கள்

தொலைபேசிகளைவிட ஹெட்செட்கள் (வயர், புளூடூத் அடிப்படையிலானவை) குறைந்த கதிர்வீச்சையே வெளியிடுகின்றன. எனவே உங்கள் வசதிக்கேற்ற ஹெட் செட் ஒன்றை தெரிவு செய்யலாம்.



எப்படியிருப்பினும், ஹெட்செட்டுகள் ஓரளவு கதிர்வீச்சை வெளியிடுவதால் அதிகளவான நேரம் ஹெட் செட்டுகளை அணிந்திருப்பது புத்திசாலித்தனமானதல்ல. அதனால் தொலைபேசி அழைப்புகள் இல்லாத பட்சத்தில் காதிலிருந்து ஹெட் செட்டுகளை கழட்டிவிடவும். ஸ்பீக்கரை பாவிப்பது தலைக்கு செல்லும் கதிர்வீச்சை குறைக்க உதவும்.



3) சமிக்ஞை குறைந்த இடங்களில் தொலைபேசி உரையாடலை தவிர்க்கவும்
தொலைத்தொடர்பு வலையமைப்பின் சமிக்ஞை (சிக்னல்) குறைவாக உள்ள இடமாக இருந்தால் தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து சமிக்ஞையை பெறுவதற்காக செல்லிடத் தொலைபேசி அதிக கதிர்வீச்சை வெளியிடுவதாக கருதப்படுகின்றது.



எனவே சமிக்ஞை குறைவாக காணப்படும் இடங்களில் சேவை வழங்கும் நிறுவனத்தை திட்டிக்கொண்டு, எப்படியாவது கஷ்டப்பட்டு உரையாட முற்படாமல் சமிக்ஞை அதிகமாக உள்ள இடங்களில் செல்லிடத் தொலைபேசிகளை பாவிப்பது உகந்தது. குறைந்தளவு சமிக்ஞை உள்ள இடங்களில் தொலைபேசியை பாவித்தால் அது உங்கள் மூளையையே பாதிக்கும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.



4) கதிர்வீச்சுக் கவசங்களை தவிர்க்கவும்
கதிர்வீச்சு கவசங்களான அன்டனா மூடிகள், தொலைபேசி 'கீ பேட'; கவசங்கள் போன்றவை தொலைபேசி தொடர்புத் தன்மையை குறைத்து தொலைபேசியை அதிக கதிர்வீச்சை வெளியிடச் செய்கிறது. எனவே இக்கவசங்கள் தொலைபேசிகளை பாதுகாத்த போதிலும் அவை உங்களது ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

5) சிறுவர்கள் தொலைபேசி பாவிப்பதை மட்டுப்படுத்துக
சிறுவர்கள் தொலைபேசி பாவிப்பதை மட்டுப்படுத்துவது நல்லது. செல்லிட தொலைபேசி கதிர்வீச்வை வளர்ந்தவர்களி;ன் மூளையைவிட சிறார்களின் மூளை இரு மடங்கு அதிகமாக உள்வாங்குகிறது. குறைந்தபட்சம் 6 நாடுகளின் அரசுகளும் ஈ.டபிள்யூ.எஸ்.அமைப்பும் அவசர நிலைகளில் மாத்திரமே சிறார்களுக்கு செல்லிட தொலைபேசி பயன்படு;த்த அனுமதிக்க வேண்டும் என சிபாரிசு செய்துள்ளன.



குறுகிய இனிமையான உரையாடலை நடத்துவதற்கு, அல்லது நிலையான தொலைபேசியை உபயோகிப்பதற்கு ஊக்குவிக்குமாறு அந்நாடுகளும் மேற்படி அமைப்பும் சிபாரிசு செய்துள்ளன.



6) அதிகமாக கேளுங்கள், குறைவாக கதையுங்கள்

செல்லிடத் தொலைபேசியில் நீங்கள் கதைக்கும்போதும் குறுந்தகவல்களை அனுப்பும்போதுமே செல்லிட தொலைபேசிகள் அதிகபட்ச கதிர்வீச்சுகளை வெளியிடுகின்றன. ஆனால் நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கும்போதோ குறுந்தகவலை பெறும்போது அல்லது உரையாடலை கேட்கும்போது அவ்வாறில்லை. எனவே அதிகளவு கேளுங்கள்.



7) தொலைபேசியை உடலுக்கு அப்பால் வைத்திருங்கள்
ஹெட்செட் அல்லது ஸ்பீக்கர் மூலம் தொலைபேசியில் உரையாடும்போது தொலைபேசியை உடலுக்கு அப்பால் வைத்து உரையாடவேண்டும். காது, பொக்கற்;, பெல்ட் போன்ற பகுதிகளில் தொலைபேசியை வைத்து உரையாடுவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் மிருதுவான உடல் திசுக்கள் அமைந்திருக்கும் பகுதிகள் கதிர்வீச்சை தொடர்ச்சியாக அகத்துறிஞ்சும்.



உறங்கும்போது தலையணைக்கடியிலோ உடலுக்கு அருகிலோ தொலைபேசியை வைத்துவிட்டு உறங்குவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும. சிலவேளை ஜனாதிபதிகளோ அல்லது பிரதம மந்திரிகளோ உங்களுக்கு அவசர அழைப்பு ஏற்படுத்துவார்கள் என்று நினைத்தாலும் உங்களிடமிருந்து சில அடி தூரத்தில் தொலைபேசியை வைத்திருப்பது மிகவும் சிறந்தது.



Cool வாய் மூல உரையாடலைவிட குறுஞ்செய்திகளை தெரிவு செய்யுங்கள் வாய் மூல உரையாடலைவிட எழுத்துக்களால் தகவலை பரிமாறும்போது செல்லிடத் தொலைபேசிகள் குறைந்த கதிர்வீச்சையே வெளிவிடுகின்றன. எனவே உரையாடலைவிட குறுஞ்செய்திகள் மூலம் தகவல்களை பரிமாறு முயற்சிப்பது நல்லது.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum