தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தற்காப்புக்கு சில வழிகள்

Go down

தற்காப்புக்கு சில வழிகள் Empty தற்காப்புக்கு சில வழிகள்

Post  meenu Tue Jan 22, 2013 2:33 pm

பெண்கள் தங்களுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் பாதிப்பு வரலாம் என்பதை உணர்ந்து சமயோசிதமாக நடந்து கொள்ள வேண்டும். அடுத்து உணர்ச்சிவசப்படாமல் நிலையை எப்படிச் சமாளிப்பது என்ற அறிவு. பெண், ஆணின் தாக்குதலில் இருந்து தப்பித்து ஓடி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு தப்பிக்கும்போது ஆணைத் தாக்க வேண்டிய தேவையிருந்தால் நிச்சயமாகத் தாக்க வேண்டும். பின்னாலிருந்து பிடிக்கும் ஆணின் முன்பாதத்தில் ஓங்கி மிதிக்க வலி தாங்கமாட்டாமல் அவன் பிடியை விட்டுவிடுவான். காலால் அவனின் முழங்காலுக்குக் கீழ் உள்ள பகுதியில் ஓங்கி உதைத்தாலும் விட்டுவிடுவான்.

அதுபோல பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் ஆணிடம் இருந்து தப்பிக்க அவன் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு சிறிது தூரம் முன்னோக்கி ஓடி பின் சட்டென்று திரும்பி அவனைத் தாக்க வேண்டும். ஆணை விட பெண்கள் உடல்ரீதியில் வலிமை குறைந்தவர்கள் தான் என்றாலும் எளிதில் தாக்கும் சில முறைகளை பெண்கள் அறிந்து வைத்து கொள்ள வேண்டும்.

ஆண்களின் உடலில் சில பகுதிகள் மிக மென்மையானவை. அந்தப் பகுதிகளில் தாக்கினால் அவன் விட்டுவிடுவான். உதாரணமாகப் பின்னாலிருந்து பிடிக்கும் ஆணை ஒரு பெண் தனது முழங்கையால் அவனுடைய விலா எலும்பில் ஓங்கி இடித்தால் அவன் நிலை குலைந்து விடுவான்.

மார்புக்குக் கீழே, வயிற்றுக்கு மேலே உள்ள மையமான பகுதியில் இடித்தாலும் அவனால் தாங்க முடியாது. தொண்டைக் குழிக்கு அருகில், நெற்றிப் பொட்டில், இடுப்புக்குக் கீழே எல்லாம் தாக்கினால் ஆண் எழுந்து கொள்ளவே முடியாது. இந்தத் தற்காப்புத் தாக்குதலையெல்லாம் நினைத்த மாத்திரத்தில் பெண்களால் செய்ய முடியாது.

அதற்கு ஓரளவுக்குப் பயிற்சி கண்டிப்பாக தேவை. இந்தப் பயிற்சிகளில் பெண்கள் தங்களுடைய கால்களை, கைகளை வலுப்படுத்திக் கொள்ளவேண்டும். ஓர் ஆண் தன்னைத் தாக்கும் போது எப்படி அவனைத் திருப்பித் தாக்க வேண்டும் என்பதற்குக் கற்பனையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த பயிற்சிகளைக் கணவரையோ, அக்கா, தங்கை, அண்ணன், தம்பி போன்றவர்களின் உதவியுடன் வீட்டிலேயே தினமும் செய்யலாம். இதனால் உண்மையிலேயே தாக்குதல் வரும் சந்தர்ப்பங்களில் திருப்பித் தாக்குவது எளிதாக இருக்கும். வேகமாக ஓடுவதற்கும், பல தடைகளைக் கடந்து தாண்டிக் குதித்து ஓடுவதற்கும் பயிற்சி எடுக்க வேண்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum