உடல் எடையைக் கட்டுப்படுத்தும் தக்காளி
Page 1 of 1
உடல் எடையைக் கட்டுப்படுத்தும் தக்காளி
தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. தக்காளியில் அதிக அளவு `வைட்டமின் சி’ உள்ளது. தக்காளியைத் தொடர்ந்து சாப்பிடுவது, இதயத்துக்கு நல்லது.
உடலில் கொழுப்புச் சேராமலும் தடுக்கும் என்பது ஏற்கனவே நாம் அறிந்த விஷயம். தற்போது, தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள முடியும் என்று இங்கிலாந்து ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பசியைத் தூண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளைத் தக்காளி கட்டுப்படுத்துகிறது.
இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு, உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது. சராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்கு உள்பட்ட பெண்கள் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு சாண்ட்விச்களுடன் தக்காளி வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு சாண்ட்விச்சுடன் கேரட் வழங்கப்பட்டது.
இதில், தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே சாப்பிட்டனர். இதுகுறித்து ஆய்வாளர் ஜுலி லவ்குரோவ் கூறுகையில், “இது சிறிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுதான் என்றாலும், முடிவு திருப்திகரமாக உள்ளது. தக்காளி சாப்பிடுவது பசி உணர்வைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது என்று முதல்கட்டமாகத் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளவிருக்கிறோம்” என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உடல் எடையைக் கட்டுப்படுத்தும் தக்காளி
» உடல் எடையைக் குறைக்க
» உடல் எடையைக் குறைக்க
» உடல் எடையைக் குறைக்க
» உடல் எடையைக் கட்டுப்படுத்தும் பப்பாளி
» உடல் எடையைக் குறைக்க
» உடல் எடையைக் குறைக்க
» உடல் எடையைக் குறைக்க
» உடல் எடையைக் கட்டுப்படுத்தும் பப்பாளி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum