கம்பளிப் பூச்சிகளால் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள லண்டன் ஒலிம்பிக்ஸ் 2012.
Page 1 of 1

லண்டனில் இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது. இதற்காக லண்டன் தன்னைப் பல்வேறு வழிகளில் தயார்படுத்தியுள்ளது.
குறிப்பாக போட்டிகளில் பங்குபற்றவுள்ள வீர, வீராங்கனைகள் மற்றும் கண்டுகளிக்கவென வெளிநாடுகளிலிருந்து வருகை தரவுள்ள பார்வையாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பிற்கு முக்கிய கவனம் செலுத்தியுள்ளது. தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் நிலவுவதால் அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை வெகு தீவிரமாக முன்னெடுத்துவருகின்றது.
குறிப்பாக விமானங்களைச் சுட்டு வீழ்த்தக்கூடிய ஆயுதங்களை போட்டிகள் நடைபெறும் இடங்களுக்கு அண்மையில் அமைந்துள்ள உயரமான கட்டிடங்களில் பொருத்தியுள்ளமையை இதற்கான சிறந்த உதாரணமாகக் குறிப்பிடலாம்.
எனினும் தற்போது ஒலிம்பிக்ஸ் போட்டிகளைக் கண்டுகளிக்க வரவுள்ள பார்வையாளர்கள் மற்றும் போட்டியாளர்களுக்கு மேலுமொரு புதிய அச்சுறுத்தல் நிலவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ் அச்சுறுத்தலைத் தோற்றுவித்துள்ளது தீவிரவாதிகள் அல்லர் ஒருவகைக் கம்பளிப்பூச்சிகளே. விஷத்தன்மை வாய்ந்த இக்கம்பளிப் பூச்சிகள் தற்போது பிரித்தானியாவில் வேகமாகப் பெருகிவருவதாகவும் இவை பாரிய அச்சுறுத்தலைத் தோற்றுவித்துள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
Oak processionary moths எனப்படும் ஒருவகை அந்துப் பூச்சிகளின் இளமைப் பருவமான கம்பளிப் பூச்சிப் பருவத்தில் இவற்றின் உடலில் காணப்படும் மயிர்கள் மனிதனுக்கு பல தீங்குகளை விளைவிக்கக்கூடியவை. இவற்றின் உடலில் சுமார் 63,000 மயிர்கள் காணப்படுவதுடன் அவை விஷத்தன்மை வாய்ந்தவை.
இவை மனிதர்களுக்கு ஆஸ்மா நோயினை அதாவது மரணம் வரை கொண்டு செல்லக்கூடிய நோயை ஏற்படுத்த வல்லன. மேலும் இவை காற்றில் பரவக்கூடியது என்பதுடன் , அவை தொண்டைக்கரப்பான், வாந்தி, தலையிடி, மயக்கம், காய்ச்சல் போன்றவற்றையும் ஏற்படுத்தக்கூடியது.
பொதுவாக ஓக் மரங்களில் வாழும் இவ் உயிரினமானது தற்போது பிரித்தானியாவில் வேகமாகப் பரவி வருவதாக தாவரவியல் மற்றும் விலங்கியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றின் பெருக்கத்தை கட்டுப்படுத்த தாம் முயன்று வருகின்ற போதிலும் அது அவ்வளவு இலகுவான காரியம் அல்லவெனவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
தென்கிழக்கு லண்டன், ரெடிங், சீபில்ட் ஆகிய பகுதிகளிலும் இவை வேகமாகப் பரவியுள்ளன. இவற்றின் வேகமான பெருக்கம் தொடருமானால் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெறவுள்ள கிழக்கு லண்டன் பகுதியும் மோசமாகப் பாதிக்கப்படுவதுடன் பார்வையாளர்களுக்கு அசௌகரியத்தைத் தோற்றுவிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பல புதுமைகளுடன் தொடங்கியது லண்டன் ஒலிம்பிக்ஸ்
» லண்டன் ஒலிம்பிக்ஸ்-முதல் தங்கம் சீனாவுக்கு
» பூச்சிகளால் பரவும் நோய்களும் தடுப்பு முறைகளும்
» ஒலிம்பிக்ஸ் உற்சாகம் பேரலிம்பிக்ஸை ஊக்கப்படுத்தும்'
» ஒலிம்பிக்ஸ்:வடகொரிய எடைதூக்கும் வீரர் சாதனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum