பல புதுமைகளுடன் தொடங்கியது லண்டன் ஒலிம்பிக்ஸ்
Page 1 of 1

லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் பல எதிர்பாராத விஷயங்கள், புதுமைகள், ஆடல் பாடல்களுடன் தொடங்கின.
கிழக்கு லண்டனிலுள்ள ஸ்ட்ராட்ஃபோர்ட் ஒலிம்பிக் பூங்காவிலுள்ள முக்கிய விளையாட்டு அரங்கில் தொடக்கவிழா போட்டிகள் இடம்பெற்றன.
பிரிட்டனின் அமைதியான கிராமப்புற சூழலை காட்டும் காட்சிகளுடன் தொடங்கிய தொடக்கவிழா பின்னர் அதன் பல பரிமாணங்களின் வளர்ச்சியை காட்டியது.
வண்னமயமான வாண வேடிக்கைகள்
உலகெங்கும் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் படங்களின் தாக்கமும் தொடக்க விழாவில் இருந்தது. பிரிட்டிஷ் அரசி எலிசபெத் ஜேம்ஸ் பாண்டுடன் ஒரு ஹெலிகாப்டரில் பறந்து விளையாட்டு அரங்குக்கு வருவது போன்ற காட்சி திரையிடப்பட்டது.
அந்த ஒளிகாட்சியில் ஹெலிகாப்டரிலிருந்து, பாராச்சூட் மூலம் அரசியும் ஜேம்ஸ் பாண்டுமாக நடித்த நடிகர்கள் அரங்கினுள் குதிப்பதை காட்டும் காட்சியை அடுத்து, எலிசபெத் அரசியும், இளவரசர் ஃபிலிப்பும் சிறப்பு நுழைவாயில் வழியாக அரங்குக்குள் வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
ஒளி வெள்ளத்தில் முக்கிய விளையாட்டு அரங்கு
ஒலிம்பிக் விளையாட்டில் இன்னும் கிரிக்கெட் இடம்பெறாவிட்டாலும், பிரிட்டனின் பாரம்பரியத்தை காட்டும் ஒரு பகுதியாக, கிரிக்கெட் விளையாட்டு இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டு ஆட ஆரம்பிக்கப்பட்ட கட்டத்தையும் வெளிக்காட்டும் வகையில் ஒரு சிறு பகுதியும் துவக்க விழாவில் இடம்பெற்றது.
பிரபல நகைச்சுவை நடிகரான ரோவான் அட்கின்ஸன்(மிஸ்டர் பீன்), லண்டன் சிம்ஃபனி இசைக்குழுவுடன் பங்குபெறும் ஒரு அம்சமும் தொடக்க விழாவில் இருந்தது.
இந்திய அணியினர்
தொடக்க விழாவின் முதல் பகுதியாக கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்ற பிறகு, பங்கேற்கும் நாட்டு அணிகள் அகர வரிசைப்படி அரங்கினுள் வந்தனர்.
ஒலிம்பிக் மரபின்படி, முதல் நாடாக கிரேக்கமும், கடைசியாக போட்டிகளை நடத்தும் பிரிட்டனும் தமது அணிகளுடன் அரங்கில் நுழைந்தனர்.
சம்பிரதாய உரைகளுக்கு பிறகு, லண்டன் ஒலிம்பிக் போட்டிகளை எலிசபெத் அரசி முறைப்படி தொடங்கிவைத்தார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» லண்டன் ஒலிம்பிக்ஸ்-முதல் தங்கம் சீனாவுக்கு
» கம்பளிப் பூச்சிகளால் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள லண்டன் ஒலிம்பிக்ஸ் 2012.
» ஒலிம்பிக்ஸ் உற்சாகம் பேரலிம்பிக்ஸை ஊக்கப்படுத்தும்'
» ஒலிம்பிக்ஸ்-குத்துச் சண்டை முடிவில் சர்ச்சை
» ஒலிம்பிக்ஸ்:இறகுப் பந்துப் போட்டியில் சர்ச்சை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum