கண்களை அழகுபடுத்துவதற்கு சில குறிப்பு.
Page 1 of 1
கண்களை அழகுபடுத்துவதற்கு சில குறிப்பு.
பெண்களின் கண்களை மீன்களுக்கு உவமையாகவும், மான் விழிகளுக்கும், குவளை மலர்களுக்கும் உவமையாக கூறுவார்கள். அந்த கண்களை அலங்கரிப்பது தனி கலை. சிறப்பு கவனம் செலுத்தி கண்களை கவனித்தால் போதும் பேரழகி நீங்கள்தான்.
பொதுவாக கண்கள் மூன்று வித வடிவங்கள் காணப்படுகின்றன. பாதம் பருப்பு வடிவம், வட்டக்கண்கள், நீள்வட்ட வடிவக் கண்கள் என ஒவ்வொருவரின் முக அமைப்பிற்கு ஏற்ப கண்களின் வடிவமும் மாறுபடும். அந்த கண்களின் வடிவத்திற்கு ஏற்ப மேக் அப் செய்தால் அழகிய முக அமைப்பினையும், கவர்ச்சிகரமான கண் வடிவத்தையும் பெறலாம். பாதம் பருப்பு வடிவக் கண்கள் மிகச்சிறியவையாக இருக்கும். அதே சமயம் நீள் வட்டக்கண்கள் பெரியவையாக இருக்கும் அதற்கேற்ப ஐ லைனர் ஐ ஷேடோ போடலாம்.
பாதாம் வடிவக் கண்கள்
இந்த கண் அமைப்பை கொண்ட பெண்கள் ஐ லைனரை போல்டாக போடவேண்டும். மேல் இமைப் பகுதியியில் இயற்கை நிறங்களில் போடலாம். அதேசமயம் கீழ் இமைப் பகுதிகளில் பல வர்ண ஷேடுகளை உபயோகிக்கலாம். கண் ஓரங்களில் லைனர் உபயோகிக்கத் தேவையில்லை. அதேசமயம் வெளிர் நிற ஷேடுகளை உபயோகித்து கண்களை அலங்கரிக்கலாம்.
வட்ட வடிவ கண்கள்
சில பெண்களுக்கு காம்பஸில் வரைந்தது போன்ற வட்டவடிவ கண்கள் அமைந்திருக்கும். அவர்களுக்கு அடர் நிற லைனர் உபயோகிக்கலாம். கண்களின் இமைகளில் மீடியமாக லைனர் போடவேண்டும். கண்களின் அமைப்பு சிறியதாக தெரியவேண்டும் என்பவர்கள் ஐ லைனரை உள் அடக்கி போடவேண்டும்.
நீள் வட்ட கண்கள்
இந்த கண் அமைப்பினை உடையவர்கள் ஐ லைனரை லேசாக போட்டால் போதும். இமையின் உள் பகுதியின் ஓரத்தில் லேசாக இழுத்து விட கண்களின் அழகு அள்ளிக்கொள்ளும். கீழ் பகுதியில் லைனர் வரையாமல் விட்டு விடலாம். இதனால் கண்களின் அமைப்பு சற்றே சிறியதாக தெரியும்.
பெரிய இமைகள் இருந்தால்
ஒரு சிலருக்கு கண் இமைகள் பெரியதாக இருக்கும். அவற்றை சிறியது போன்று காட்டுவதற்கு இமைகளின் மேல் முனைப் பகுதியில் அழுத்தமான ஐ ஷேடோக்களை இடவும். பிறகு அதே நிறத்தில் இளம் நிறத்தை நடுப்பகுதியில் இட்டு மீண்டும் அழுத்தமான நிறத்தைக் கொண்டு முடியுங்கள். கண்ணின் முனைப்பகுதிகளில் ஐ லைனரை நன்கு அழுத்தமாக வைத்து கண்களின் அழகுக்கு அழகு சேருங்கள்.
சின்ன கண்களுக்கு
சிறிய கண்களை பெரியதாக காட்ட அடர்நிறத்தில் ஐ ஷேடோவைக் கொண்டு இமைகளின் மேற்புறங்களில் கோடிட்டுக் கொள்ளுங்கள். பிறகு இளம் நிற ஐ ஷேடோவைக் கொண்டு நிரப்புங்கள்.
இப்போது ஐ லைனரைக் கொண்டு அழுத்தமான கோட்டில் ஆரம்பித்து மிக மெல்லிய கோட்டுடன் இமைகளின் இறுதியை முடியுங்கள். சிறிய கண்களுக்கு இது எடுப்பான தோற்றத்தைத் தரும்.
உள்நோக்கிய கண்கள்
கண்கள் மீது ஐ ஷேடோக்களை இடாமல் மேல் இமையில் அழுத்தமாக ஐ லைனரை மட்டும் அழகாக போட்டு, இமையின் முடிவில் அழுத்தமாக முடிக்கவும். இது உங்கள் கண்களை அழகாக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கண்களை கண்காணியுங்கள்!
» கண்களை அலங்கரியுங்கள்
» கண்களை பாதுகாக்க சில குறிப்புக்கள்.
» கண்களை அலங்கரிங்கள்
» கண்களை கண்காணியுங்கள்!
» கண்களை அலங்கரியுங்கள்
» கண்களை பாதுகாக்க சில குறிப்புக்கள்.
» கண்களை அலங்கரிங்கள்
» கண்களை கண்காணியுங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum