கண்களை கண்காணியுங்கள்!
Page 1 of 1
கண்களை கண்காணியுங்கள்!
ஒருவரது கண்களைப் பார்த்தே சொல்லிவிடலாம் அவரது எண்ணத்தைப் பற்றி என்று சொல்வதுண்டு. அதுபோல நாம் சந்திக்கும் நபர் தற்போது உற்சாகமாக இருக்கிறாரா, சோர்வாக இருக்கிறாரா என்பதை கண்ணாடி போல காட்டிக்கொடுப்பதும் கண்கள்தான்.
எனவே கண்களைப் பேணிக் காப்பது அவசியம். கண்ணிற்கு குளிர்ச்சிதான் மிக முக்கியம். எனவே வெயிலில் அலைந்து திரிந்து வீடு திரும்பியதும் கண்களை குளிர்ச்சியாக்கும் வேலையை முதலில் செய்யுங்கள்.
கண்களுக்காக செய்ய வேண்டியவை
கண்கள் மீது வெள்ளரித் துண்டங்களை வைத்து ஓய்வெடுத்தால் கண்களுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும்.
கண்களுக்கு ஏற்ற உணவாக கேரட், கீரை வகைகளை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
நிம்மதியாக தூங்குங்கள். எனவே தூக்கம் தான் கண்களுக்கு நாம் கொடுக்கும் அதிமருந்து. தூக்கம் குறைந்தால் கண்களைச் சுற்றி கருவளையங்கள் வரும்.
தொடர்ந்து தொலைக்காட்சிப் பார்ப்பது, கணினியைப் பார்ப்பதைத் தவிருங்கள். ஒரு சில விநாடிகளுக்கு உங்களது பார்வையை வேறு பக்கம் செலுத்தி கண்களுக்கு ஒரு மாற்றத்தைக் கொடுங்கள்.
கண்களில் தூசுப் பட்டால் உடனே கண்ணைக் கசக்காமல் சுத்தமான நீரினால் கண்களை திறந்தபடி கழுவுங்கள்.
கண்களில் அதிகப்படியான தூசுப்பட்டால் சுத்தமான தண்ணீரில் கண்களை திறந்தபடி முக்கிக் கொண்டு பல முறை கண்களைத் திறந்து மூடுங்கள். தூசு தண்ணீரில் கரைந்து போகும்.
கண்ணுக்குக் கண்ணாடி
கண் பார்வை குறையும்போது ஏனோ தானோவென்று ஒரு கடையில் கண்ணாடி வாங்கிப் போட்டுக் கொள்ளாதீர்கள். கண் மருத்துவரிடம் சென்று கலந்தாலோசித்து கண்ணாடியை வாங்குங்கள்.
கண்ணாடி போடுவதற்கு பதிலாக லென்ஸ் பயன்படுத்துபவர்கள் அதனை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். ஏதேனும் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.
பயன்படுத்தும் கண்ணாடியில் கீரல்கள் விழாமல் பார்க்க வேண்டியதும் அவசியம்.
சர்க்கரை வியாதி
கண்களை தாக்கும் நோய்கள் பல இருக்கின்றன. முக்கியமாக சர்க்கரை வியாதி கண்களை அதிகம் பாதிக்கிறது. எனவே சர்க்கரை வியாதி இருப்பவர்கள் கண்கள் மீது அதிக அக்கறை காட்ட வேண்டும்.
உடலில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.
சர்ச்சரை அளவை உணவுக் கட்டுப்பாட்டின் மூலமாகவே சீராக வைக்கலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கண்களை கண்காணியுங்கள்!
» கண்களை கண்காணியுங்கள்!
» கண்களை மூடினால்... எடை குறையும்!
» கண்களை அலங்கரியுங்கள்
» கண்களை அலங்கரியுங்கள்
» கண்களை கண்காணியுங்கள்!
» கண்களை மூடினால்... எடை குறையும்!
» கண்களை அலங்கரியுங்கள்
» கண்களை அலங்கரியுங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum