கருஞ்சீரகத்தின் மருத்துவக் குணங்கள்.
Page 1 of 1
கருஞ்சீரகத்தின் மருத்துவக் குணங்கள்.
”கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது” பொதுவாக கருஞ்சீரகம் எல்லா நோய்களுக்கும் மருந்தாகும். இன்றும் கிராமங்களில் எல்லா வீடுகளிலும் கருஞ்சீரகம் கண்டிப்பாக வைத்திருப்பார்கள். அவசர சிகிச்சைக்கு அருமருந்தாக, நோய் நிவாரணியாக கருஞ்சீரகம் உபயோகப்படும்.
குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.
கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும். கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் மூத்திரக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும். கருஞ்சீரகப் பொடியை ஒரு துண்டுத் துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் ஜலதோஷத்திற்கு நல்லது.
தாய்ப் பாலில் ஏழு கருஞ்சீரக வித்துகளை ஊறவைத்துப் பொடியாக்கி உறிஞ்சி வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். 5கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும்.
கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது. கருஞ்சீரகத்தைக் காடியுடன் (vineger) வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும். கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்.
காஞ்சிரைப் பூண்டின் சாறுடன் கருஞ்சீரகத்தைக் குழைத்துச் சாப்பிட்டால் நுண் கிருமிகள் வெளியேறிவிடும். கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும். நாய்க்கடி, பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கர்ப்பபை வலி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கருஞ்சீரகத்தின் மருத்துவக் குணங்கள்.
» செம்பருத்திப்பூவின் மருத்துவக் குணங்கள்.
» கண்டங்கத்திரியின் மருத்துவக் குணங்கள்.
» மஞ்சளின் மருத்துவக் குணங்கள்
» கோவைக்காயின் மருத்துவக் குணங்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum