புகைப்பழக்க போதையை தடுக்க புதிய ஜீன் தெரபி கண்டுபிடிப்பு.
Page 1 of 1

பாடியை உற்பத்தி செய்யும் ஒரு மரபணுவை பொருத்துவது சிறந்த வழி என்று முடிவு செய்தார் நியூயார்க்கில் உள்ள வெய்ல் கார்னெல் மருத்துவ கல்லூரியின் ஆய்வாளர் ரொனால்டு கிரிஸ்டல்.
இதற்காக நிக்கோடினுக்கு எதிரான மிகவும் வலிமையான ஒரு ஆன்டிபாடியையும் அதனை உற்பத்தி செய்யும் மரபணுவையும் ஒரு எலியில் இருந்து கண்டெடுத்தனர். பின்னர் அந்த மரபணுவை ஜீன் தெரபிக்கு பயன்படும் கேரியர் எனும் அடினோ அசோசியேட்டட் வைரஸுக்குள் பொருத்தினர். அதன் பிறகு அந்த வைரஸ் நிக்கோடின் போதைக்கு அடிமையான ஒரு எலியின் உடலுக்குள் ஊசி மூலம் செலுத்தப்பட்டது.
எலியின் உடலுக்குள் செலுத்தப்பட்ட வைரஸ் அதன் கல்லீரலுக்குள் பொருந்திய பின்னர் நிக்கோடினுக்கு எதிரான ஆன்டிபாடி கல்லீரலில் உற்பத்தி ஆனது. பின்னர் இந்த ஆன்டிபாடிகள் ரத்த ஓட்டத்துக்குள் கலந்தன. இந்நிலையில் இரண்டு சிகரெட்டுக்குள் இருக்கும் அளவு நிக்கோடின் வைரஸ் புகுத்தப்பட்ட எலியின் உடலுக்குள் செலுத்தப்பட்டது. எலியின் உடலுக்குள் உற்பத்தியான நிக் கோடின் ஆன்டிபாடிகள் சுமார் 83 சதவீதம் நிக்கோடினை அழித்தது தெரியவந்தது. முக்கியமாக இந்த நிக்கோடின் மூளைக்குச் செல்வதற்கு முன்பு அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக நிக்கோடின் போதைக்கு அடிமையான எலிகள் மந்தமாக இருக்கும். ஆனால் ஜீன் தெரபி செய்யப்பட்ட பின் நிக்கோடின் கொடுக்கப்பட்ட எலிகள் மிகவும் உற்சாகமாக இருந்தன. மேலும் இந்த எலிகளின் இதய துடிப்பும் மிகவும் சீராக இருந்தது. ஜீன் தெரபிக்கு பிந்தைய சுமார் 18 வாரங்கள் கழித்த பிறகும் எலிகளின் கல்லீரல்கள் நிக்கோடினுக்கு எதிரான ஆன்டிபாடிகளை தொடர்ந்து உற்பத்தி செய்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆக நிகோடின் போதைக்கு எதிரான ஜீன் தெரபி செய்துகொண்டால் நிக்கோடினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிரான பாதுகாப்பு நீண்ட காலத்துக்கு உடலுக்குள் நீடிக்கும் என்பது இந்த ஆய்வு மூலம் நிரூபணமாகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அதெல்லாம் சரி இந்த ஜீன் தெரபி மூலம் மனித குலத்துக்கு உடனடி பலன் எதுவும் இருக்கிறதா?
தற்போது எலிகள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஆய்வு மனிதர்களைக் கொண்டு நடத்தப்படும் முன்னர் குரங்குகள் மீது மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். மேலும் ஜீன் தெரபியில் பயன்படுத்தப்படும் அடினோ அசோசியேட்டட் வைரஸ்கள் எய்ட்ஸ் மற்றும் இறுதி நிலை புற்று நோய் ஆகிய நோய்களுக்கான ஜீன் தெரபியில் மனிதர்கள் மீது பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் ஆபத்துகளுடன் ஒப்பிடும்போது அதிகமான பலன்கள் கிடைத்துள்ளன என்றாலும் நிக்கோடின் போதைக்கான இந்த ஜீன் தெரபியை மனிதர்கள் மீது பரிசோதிக்க 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகுமாம்.
அதனால் ஆபத்தான ஜீன் தெரபியை கொண்டு நிக்கோடின் போதை அல்லது புகைப்பழக்கத்துக்கான சிகிச்சையை மேற்கொள்வதற்கு முன்பு புகைப்பழக்கத்தை துறக்க முயற்சி செய்வதே சாலச் சிறந்தது என்கிறார் பேய்லர் மருத்துவக் கல்லூரியின் மூத்த ஆய்வாளரான தாமஸ் கோஸ்டன்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விவாகரத்தை தடுக்க புதிய ஸ்பிரே கண்டுபிடிப்பு!
» இரண்டு புதிய வகை இரத்தம் கண்டுபிடிப்பு!
» முதுகுவலியை ஒழிக்கும் புதிய கண்டுபிடிப்பு
» கருத்தடைக்கு புதிய முறை கண்டுபிடிப்பு!
» சக்கரை நோயாளிகளுக்கு புதிய மாற்று கண்டுபிடிப்பு!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum