தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சர்க்கரை நோய்க்கு உணவே மருந்து.

Go down

சர்க்கரை நோய்க்கு உணவே மருந்து. Empty சர்க்கரை நோய்க்கு உணவே மருந்து.

Post  ishwarya Mon May 13, 2013 6:04 pm

சர்க்கரை நோய் இன்று அதிகம் பேருக்கு உள்ள பிரச்சனை. நாம் தினமும் பார்க்கும் 100 பேரில் ஒருவருக்காவது சர்க்கரை நோய் இருக்க வாய்ப்பு உள்ளது. அந்த அளவிற்கு இன்று சர்க்கரை நோய் பரவக் காரணம் நமது உணவுப்பழக்கவழக்கம்தான். இதுவே இப்பொழுது 70 வயதைக்கடந்தவர்களில் அதிகம் பேருக்கு சர்க்கரை நோய் இருக்க வாய்ப்பு இல்லை ஏன் என்றால் அவர்களின் உணவுப்பழக்கம் தான் காரணம். நாமும் நமது உணவுப் பழக்கத்தை கொஞ்சம் மாற்றினால் சர்க்கரை நோயில் இருந்து தப்பிக்கலாம் இதற்காக நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நான் அறிந்த தகவல்களை தொகுத்து அளித்து இருக்கிறேன்.

ஒரு குழந்தை இளம் வயதிலிருந்து வாலிப பருவத்திற்கு மாறுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது நாளமில்லா சுரப்பி மண்டலம்தான். இதை ஆங்கிலத்தில் எண்டோகிரைன் சிஸ்டம் என அழைப்பõர்கள். இந்த நாளமில்லாச் சுரப்பிகள் தான் மனித உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன. இந்த ஹார்மோன்களின் சுரப்பானது வாத, பித்த கபத்தை பொறுத்தே அமைகின்றன. இந்த மூன்றில் எதனுடைய நிலையில் மாறுபாடு ஏற்பட்டாலும் முதலில் பாதிக்கப்படுவது ஹார்மோன்களே. வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கு முக்கிய பங்கு வகிப்பது ஹார்மோன்கள் ஆகும். உடலுக்கு தேவையான சர்க்கரை அதாவது இன்சுலினை சுரக்கும் கணையம் பாதிக்கப்படுவதால் உடல் பருமன் ஏற்பட்டு நீரிழிவு நோய் உருவாக காரணமாகிறது.

இந்த நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் வராமல் தடுக்கவும், கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் முடியும். இத்தகைய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட வைப்பது நம் உணவு முறையே. முறையான உணவு, தேவையான உடற்பயிற்சியிருந்தால் நீரிழிவு நோயை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். கீழ்கண்ட உணவு முறைகளை தவறாமல் கடைப்பிடித்து வருவது நல்லது.

சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் காய்கறிகள்:
கத்தரி பிஞ்சு, சுரைக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி, வெண்டைக்காய், கோவைக்காய், பீன்ஸ், சாம்பல் பூசணி, புடலங்காய், வாழைத்தண்டு, காளி பிளவர், வெண்பூசணி, பாகற்காய், வாழைப்பூ, காராமணி, கொத்தவரங்காய், வெங்காயம், பீர்க்கங்காய், வாழை பிஞ்சு, நூல்கோல், முருங்கைக் காய், வெள்ளரிக்காய், சௌசௌ இவைகளுடன் கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி, புதினா சேர்த்து பச்சடியாக தினமும் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோயின் பாதிப்பிலிருந்து எளிதில் மீளலாம்.

நோயைக் கட்டுப்படுத்தும் கீரைகள் :
சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கீரைகளுக்கும் உண்டு.
கறிவேப்பிலை, தூதுவளைக் கீரை, ஆரைக்கீரை, முசுமுசுக்கைக் கீரை, வெந்தயக் கீரை, துத்திக் கீரை, முருங்கைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வல்லாரைக் கீரை, கொத்தமல்லிக் கீரை
இவற்றில் ஏதாவது ஒன்றை சூப் செய்து தினமும் 1 டம்ளர் வீதம் காலை அல்லது மாலை ஒருவேளை சாப்பிட்டு வரலாம், அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றை எதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

சர்க்கரை நோய்க் காரர்களுக்கு உகந்த பழங்கள்:

சாத்துக்குடி 1
ஆரஞ்சு 2
ஆப்பிள் (தோலுடன்) 1
கொய்யா (சிறியது) 2
பேரிக்காய் (சிறியது) 2
வெள்ளரிக்காய் 2
அன்னாசிப்பழம் 4 வளையங்கள்
தர்பூசணி 1 துண்டு

மேல் சொன்ன பழங்களில் ஏதாவது ஒன்றை குறிப்பிட்டுள்ள அளவுகளில் தினமும் உண்ணலாம்.
உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் பசி அல்லது தாகம் எடுத்தால்.
வெள்ளரி, அரிசிப்பொரி, மோர் (கறிவேப்பிலை, கொத்தமல்லி சீரகம் கலந்தது), கோதுமை உப்புமா, அவித்த சுண்டல், சிறுபயறு, கொண்டைக் கடலை, கொள்ளு, தட்டைப்பயிறு இவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம்.

எலுமிச்சை சாறு 200 மி.லி.
வாழைத்தண்டு சூப் 200 மி.லி.
அருகம்புல் சூப் 200 மி.லி.
நெல்லிக்காய் சாறு 100 மி.லி
கொத்தமல்லி சூப் 100 மி.லி.
கறிவேப்பிலை சூப் 100 மி.லி.
இவற்றில் ஏதாவது ஒன்றை சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது.

அசைவ உணவுகள்:
முட்டை 1 (வெள்ளைக் கரு மட்டும்)

மீன் 2 துண்டுகள்

கோழிக்கறி 100 கிராம் (அவித்தது)

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

வேர்கள் மற்றும் கிழங்கு வகைகள்.
இனிப்பு வகைகள்.
எண்ணையில் வறுத்த பொருட்கள்.
காய்ந்து உலர்த்திய பழங்கள் மற்றும் கொட்டைகள்.
சர்க்கரை.
வாழை, சப்போட்டா, சீதா போன்ற பழவகைகள்.

மேற்கண்ட உணவுகளை முறையாக சாப்பிட்டும் தினமும் உடற்பயிற்சியும், நடைபயிற்சியும், ஆசனமும் செய்து வந்தால் சர்க்கரை நோய் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
தினமும் நான் நடைப்பயிற்சியும், ஆசனமும் தினமும் காலை நேரங்களில் தவறாமல் செய்து வருகிறேன் இதற்கு முக்கிய காரணம் உடல் வலிமை பெறும், ஆரோக்கியமாக இருக்கலாம் என நீங்கள் நினைத்தால் அது தவறு. நான் நன்றாக சாப்பிட்டு பழகிவிட்டேன் தினமும் வித விதமாக சாப்பிடுவேன் அது மட்டும் இல்லாமல் நிறைய நொறுக்குத் தீனிகள், மாலை வேளைகளில் தனியாக இப்படி நிறைய சாப்பிடுவேன் எனக்கு பயம் வந்து விட்டது நாளை நமக்கு சர்க்கரை வியாதியோ, கொலஸ்டிரலோ வந்து விட்டால் எதுவும் சாப்பிட முடியாது இதற்காகவே நடைபயிற்சியும் ஆசனமும் சிறிது உணவுப்பழக்கத்தையும் மாற்றிவிட்டேன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum