மன அழுத்தம் மூளை அளவைச் சுருக்கும் ஆய்வில் தகவல்.!
Page 1 of 1

கடுமையான மன அழுத்தமும், தொடர்ச்சியான மன நெருக்கடியும் உங்களின் மூளை அளவைச் சுருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். மூளை அளவு சுருங்கினால் என்ன ஆகும்? உணர்வுரீதியான, உளவியல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படும்.
அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக ஆய்வுக் குழுவினர் தெரிவிக்கும் தகவல் இது. மேற்கண்ட பாதிப்புக்குக் காரணம், ஓர் ஒற்றை மரபணுவால் ஏற்படும் தூண்டுதலாம். அது, மனிதர்களின் மூளைச் செல்களுக்கு இடையிலான தொடர்பைப் பாதிக்கிறது.
இதுதொடர்பாக மூத்த ஆய்வாளரும் மனோவியல் மற்றும் நரம்பியல் நிபுணருமான ரொனால்டு டுமன், "மனிதர்களின் மூளை இணைப்பில் மனஅழுத்தம் இழப்பை ஏற்படுத்துகிறது என்பது குறித்து நாங்கள் மேலும் ஆராய விரும்புகிறோம்'' என்கிறார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், "மூளையின் `சிங்கிள் டிரான்ஸ்கிரிப்ஷன் பாக்டர்' என்பது தூண்டப்படும்போது, உணர்வுகள், உளவியல் தொடர்பான இணைப்புச் சுற்றுகள் தொந்தரவுக்கு உள்ளாகின்றன என்பதை நாங்கள் காட்ட விரும்புகிறோம்'' என்கிறார்.
இவர் உள்ளிட்ட ஆய்வாளர்கள், ஒரு மூளை வங்கியில் இருந்து, மன அழுத்தத்துக்கு உள்ளான, மன அழுத்தம் இல்லாத நோயாளிகளின் மூளை திசுவைப் பெற்று ஆராய்ந்தனர். அவற்றில் ஜீன் தூண்டல் எவ்வாறு நடந்திருக்கிறது என்று ஆராயப்பட்டது. அப்போது, மன அழுத்தத்துக்கு உள்ளான நோயாளிகளின் மூளைத் திசு பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
மற்றொரு ஆய்வாளரான எச்.ஜே. காங் கூறும்போது, மூளையின் குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படும் ஜீன்கள், நிகிஜிகி1 என்ற `சிங்கிள் டிரான்ஸ்கிரிப்ஷன் பாக்டரால்' கட்டுப்படுத்தப்படக்கூடும் என்கிறார்.
இதுதொடர்பாக மேலதிக ஆய்வுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அவற்றில் ஏற்படும் முன்னேற்றங்களைத் தொடர்ந்து, மேலும் பல புதிய தகவல்கள் தெரிய வரலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பகலில் தூங்கினால் மன அழுத்தம் ஏற்படும் - ஆய்வில் தகவல்.
» மன அழுத்தம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்! ஆய்வில் தகவல்
» டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு மூளை சுருக்கம் வருமாம்: ஆய்வில் தகவல்

» பகலில் தூங்குபவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படும் - ஆய்வில் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum