பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கை இனிப்பூட்டிகள்
Page 1 of 1

நீங்கள் எந்த உணவு முறையைப் பின்பற்றினாலும் எடையைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கு ஒரு பொன்னான விஷயம் இருக்கிறது. அது- “சர்க்கரையைத் தவிருங்கள்”.
எடை அதிகரிப்பு, அது தொடர்பான பிரச்சினைகளுக்கு முதல் முக்கியமான காரணம் சர்க்கரைதான். ஆனால் உங்கள் உணவில் சர்க்கரையை ஒதுக்கும் முடிவை உள்ளுணர்வோடும் உறுதியோடும் எடுக்க வேண்டும். சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும் என்ற நிலை வந்தபோதுதான் “சுகர் ப்ரீ” அல்லது செயற்கை இனிப்பூட்டிகள் அங்கே பிரபலமாக இடம் பிடித்தன.
செயற்கை இனிப்பூட்டிகள் என்றால் என்ன? எல்லோரும் அவற்றைப் பயன்படுத்தலாமா?
இதுபற்றி உணவியல் நிபுணரான ஜோதி கூறுகையில், “செயற்கை இனிப்பூட்டிகள் என்பவை வேதிப்பொருட்களாகவோ அல்லது இயற்கையான கூட்டுப் பொருளாகவோ இருக்கலாம். அவை அதிக கலோரிகள் இன்றி சர்க்கரையின் இனிப்பை வழங்கும். இந்த மாற்று இனிப்பூட்டிகள் சர்க்கரையை விட இனிப்பானவை. எனவே சிறிதளவு செயற்கை இனிப்பூட்டி, அதே அளவு சர்க்கரையை விடக் கூடுதல் இனிப்புத் தரும்”. சர்க்கரை நோயாளிகள் மட்டும் செயற்கை இனிப்பூட்டிகளைப் பயன்படுத்த வேண்டும்.
“நல்ல ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்குக் கூடுமானவரை இந்தச் செயற்கை இனிப்பூட்டிகளை குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது. காரணம் அவை பெரும்பாலும் “சாக்கரீன்”, “அஸ்பார்டேம்” ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுவதால் நீண்டகால அடிப்படையில் உடம்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்”.
“கர்ப்பிணிப் பெண்கள், பால் கொடுக்கும் தாய்மார்கள், இளம் பருவ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எந்தவகையான செயற்கை இனிப்பூட்டிகளையும் பயன்படுத்தக் கூடாது”.
மேற்கண்டவர்கள் தவிர மற்றவர்கள் செயற்கை இனிப்பூட்டிகளைப் பயன்படுத்தலாம். ஆனால் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு சிறு பாக்கெட்டுகளுக்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
“மேலும், உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் “சுகர் ப்ரீ”, “யோகர்ட்” போன்ற செயற்கை இனிப்பூட்டிகள் கொண்ட உணவுகளும் கூட பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். காரணம் அவற்றிலும் உள்ள மற்ற கார்போஹைட்ரேட்கள், புரதங்கள் உங்கள் ரத்த சர்க்கரை அளவைப் பாதிக்கக் கூடும்”.
மாற்று இனிப்புகள் அடங்கிய உணவுப் பொருட்களும் கலோரிகளைக் கொண்டிருக்கக் கூடும். இனிப்பு வகைகளில் சர்க்கரையை நீக்குவதால் மட்டும் அவை குறைந்த கலோரி கொண்டவை ஆகிவிடாது. அந்த உணவுப்பொருட்களில் உள்ள கொழுப்புகளும் கார்போஹைட்ரேட்களும் உங்களுக்குத் தேவையானதை விட கூடுதல் கலோரிகளை அளிக்கக்கூடும்.
கடைசியாக, பழங்கள், காய்கறிகள், முழுத் தானியங்கள் போலில்லாமல், “சுகர் ப்ரீ” குளிர்பானங்கள், மிட்டாய்கள், இனிப்பு வகைகள் மிகச் சில சத்துகளையே அளிக்கக் கூடும் என்று கூறுகிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இனிப்பூட்டிகள் இனிப்பூட்டிகள்
» தூக்க மாத்திரை களினால் ஏற்படும் விளைவுகளை அறிவீர்களா..?
» செயற்கை கோள்கள் ஸ்தம்பித்தன
» செயற்கை கண் இமைகளுக்கு மேக்கப்
» உயிருள்ள செயற்கை செல் கண்டுபிடிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum