உயிருள்ள செயற்கை செல் கண்டுபிடிப்பு
Page 1 of 1
உயிருள்ள செயற்கை செல் கண்டுபிடிப்பு
உயிருள்ள செயற்கை செல்லை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். உயிருள்ள செயற்கை செல் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் குழுவில் 3 இந்திய விஞ்ஞானிகளும் அடங்குவர்.
உயிருக்கு அடிப்படையாக செல்கள்தான் அமைந்துள்ளன. இவற்றின் வளர்ச்சிதான் உயிருக்கும், உடலுக்கும் ஆதாரமாக உள்ளது. இந்த நிலையில், அமெரிக்க விஞ்ஞானிகள், உலகிலேயே முதல் முறையாக உயிருள்ள செயற்கை செல்லை கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள ஜே.கிரைக் வென்டர் இன்ஸ்டிடியூட்டில், அதன் நிறுவனர் கிரைக் வென்டர் தலைமையில் 15 ஆண்டுகளாக இந்த ஆராய்ச்சி நடைபெற்று வந்தது. இதில் 24 விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அவர்களில், சஞ்சய் வஷி, ராதா கிருஷ்ணகுமார், பிரஷாந்த் பார்மர் ஆகிய 3 இந்திய விஞ்ஞானிகளும் அடங்குவர்.
கம்ப்யூட்டரில் உருவாக்கப்பட்ட மரபணு பட்டியலைப் பயன்படுத்தி, இந்த செயற்கை செல்லை கண்டுபிடித்துள்ளனர். உண்மையான செல் போலவே தோன்றும் அச்செல்லுக்கு `பாக்டீரியம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு ரூ.185 கோடி செலவானது. இக்கண்டுபிடிப்புக்கு கிரைக் வென்டர் இன்ஸ்டிடியூட், காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளது.
செயற்கை செல் கண்டுபிடிப்பு பற்றி கிரைக் வென்டர் நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த விவரங்கள், ஒரு விஞ்ஞான பத்திரிகையிலும் வெளியாகி உள்ளது. இந்த செல், உயிர்வாழும் தன்மை கொண்டது.
மற்றொரு செல்லை உருவாக்க வல்லது. செயற்கை முறையில் மனிதனை உருவாக்க, இது முதல்படியாக கருதப்படுகிறது.
மேலும், இந்த செல் கண்டுபிடிப்பு மூலம் கார்பன் டை-ஆக்சைடை பயன்படுத்தி புதிய எரிபொருளை உருவாக்கலாம் என்றும், அசுத்தமான தண்ணீரை சுத்தமாக்க சிறந்த வழிமுறைகளை உருவாக்கலாம் என்றும், தடுப்பூசி உள்பட புதிய மருந்துகளை கண்டுபிடிக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
எனவே, விஞ்ஞான உலகில், இந்த செயற்கை செல் கண்டுபிடிப்பு, ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது. உலக மக்கள்தொகை உயர்ந்து வரும் நிலையில், செயற்கை முறையில் உணவு, எரிபொருள், மருந்து ஆகியவற்றை உருவாக்கி மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்பதால், இக்கண்டுபிடிப்பு ஒரு வரப்பிரசாதம் என்று டாக்டர் கிரைக் வென்டர் கூறியுள்ளார்.
அதே சமயத்தில், இயற்கையான வாழ்க்கை முறையில் தலையிடும் இந்த கண்டுபிடிப்புக்கு பழமைவாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நில்... கவனி... செல்!
» செயற்கை கோள்கள் ஸ்தம்பித்தன
» செயற்கை கண் இமைகளுக்கு மேக்கப்
» செயற்கை கண் இமைகளைப் பொறுத்த டிப்ஸ்…
» குழந்தையின்மைக்கு செயற்கை சிகிச்சை வெற்றி தரும்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum