அதிக வேலை செய்தால் குழந்தை எடை குறையும்
Page 1 of 1
அதிக வேலை செய்தால் குழந்தை எடை குறையும்
வேலைக்குச் செல்லும் பெண் களுக்கு கர்ப்ப காலம் வந்தால், பார்க்கவே பரிதாபம்தான். பிரசவ விடுமுறை எடுத்துக் கொள்ளும் காலம் வரை ஊதியத்துக்காகவும் பொறுப்புகளுக்காகவும் அவர்கள் அலுவலகம் வந்துதான் ஆக வேண்டியிருக்கிறது. ஆனால், இதனால் அவர்களின் குழந்தை பாதிக்கலாம் என்கிறது சமீபத்திய ஆய்வு.
ஆம், கர்ப்பிணிகள் வாரத்தில் 25 மணி நேரத்திற்கு மேல் பணியாற்றும்போது அவர்களுக்கு எடை குறைந்த குழந்தை பிறக்கலாம் என நெதர்லாந்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இதற்காக, 30 வார கர்ப்பத்தில் இருந்த 4700 பெண்களிடம் ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.
பொதுவாக ஒரு குழந்தை பிறக்கும்போது 3 முதல் 3.4 கிலோ வரை எடை இருக்க வேண்டும். ஆனால், அந்த ஆராய்ச்சியில் அலுவலகச் சூழலில் ஒரு நாளைக்கு சுமார் மூன்றரை மணி நேரம் பணியாற்றிய பெண்களுக்கு சுமார் 2 கிலோ அளவிலான குழந்தைகள்தான் பிறந்திருக்கின்றன. அக்குழந்தைகளின் தலைப் பகுதி சுற்றளவும் 1 சென்டிமீட்டர் குறைவாக இருந்ததாம்.
ஆனால், இந்த எடை இழப்பைத் தவிர இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு வேறு உடல்நல பாதிப்புகள் இருக்காது என்று ஆறுதலைத் தருகிறார்கள் அந்த ஆராய்ச்சியாளர்கள். ஆனால், எடை குறைந்து பிறப்பதே பெரும் ஆபத்துதான்.
கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்துக்கு முன்பு வரை குனிந்து நிமிர்ந்து வேலை செய்தால்தான் சுகப்பிரசவமாக அமையும் என்பது நம்மூர் பெருசுகளின் நம்பர் ஒன் அறிவுரை. இந்த ஆராய்ச்சி அதை மாற்றிச் சொல்கிறதே என்று யோசிக்கிறீர்களா? வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு இந்தக் குறைபாடு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், அதிக வேலைப் பளுவால் ஏற்படும் டென்ஷன்தான்.
இதனால் கருப்பையில் இருக்கும் சிசுவுக்கு ரத்தம், சத்துப் பொருள் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை போதுமான அளவில் கிடைக்காமல் போகிறது என்கிறார்கள் நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள். ஆகவே, கர்ப்பிணிகள் வேலைப் பளுவைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தியிருக்கின்றனர். மொத்தத்தில் டென்ஷனைக் குறைக்கச் சொல்லுங்க!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உடல் எடையை குறைக்க பல்வேறு உடற்பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் நாள் ஒன்றுக்கு சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து நின்று கொண்டே வேலை செய்தால் உடல் எடை குறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி விஞ்ஞானி ஜான்
» கணினியில் வேலை செய்தால்... இதய நோய், ரத்த அழுத்தம்
» நின்று கொண்டே பணி செய்தால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல்
» நின்று கொண்டே பணி செய்தால் உடல் எடை குறையும்: புதிய ஆய்வில் தகவல்
» ஸ்கேனிங் செய்தால் கருவிலிருக்கும் குழந்தை பாதிக்குமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum