முதுகுவலியை போக்க வழிகள்
Page 1 of 1
முதுகுவலியை போக்க வழிகள்
வாயுத்தன்மை கொண்ட பதார்த்தங்களை உட்கொள்ளக் கூடாது. இரவில் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ளக்கூடாது. வீட்டிலிருக்கும் பெண்களுக்கு அவர்களது அதிக பட்ச ஓய்வு முதுகுவலி ஏற்படக் காரணமாகிறது.
வீட்டிலிருக்கும் பெண்கள் அவசர கதியில் வேலையை முடித்துவிட்டு டிவியின் முன் அமர்ந்து மணிக்கணக்கில் சீரியல் பார்த்து கொண்டிருப்பதால் தான் அவர்களுக்கு உடல் எடை கூடி அதுவே முதுகுவலிக்கு முதல் காரணமாகவும் அமைந்து விடுகிறது. இப்படி முதுகுவலி ஏற்படுபவர்கள் மருத்துவரிடம் காட்டாமல் மருந்து கடைகளில் இவர்களாகவே மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவார்கள்.
இது முற்றிலும் தவறானது. முதுகுவலி முற்றிய பின்னே மருத்துவரிடம் வந்து காண்பிக்கும் போது சிகிச்சையின் அளவும், செலவும் அதிகமாகத் தான் ஆகும். உணவுக்கட்டுபாடு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் முதுகு வலியை கட்டுபடுத்தலாம். உடல் எடை அதிகமாய் உள்ளவர்களுக்கு எடை குறையத் தொடங்கும் போதே அதனால் ஏற்படும் அழுத்தம் குறைந்து முதுகுவலியும் கட்டுப்படும்.
பால், காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் முதுகுவலி உங்களை விட்டு ஓடிப்போய்விடும். நடைபயிற்சிக்கு தினமும் நேரம் ஒதுக்கி செய்து வந்தால் முதுகுவலி நம்மை விட்டு நடையை கட்டிவிடும்.
நடைபயிற்சி செய்த பின் கைகளை பக்கவாட்டில் தூக்கி அசைத்தும், உயரத்தில் தூக்கியும் சில எளிய பயிற்சிகள் மேற்கொள்ளும் போது தசைப்பகுதிகளில் உள்ள இறுக்கம் தளர்ந்து உடல் காற்றைப் போல் லேசாகி விடும்.
முதுகுவலி வந்தவர்கள் மேற்சொன்னவற்றை கடைபிடிப்பதோடு மருத்துவரின் ஆலோசனை பெற்று உரிய சிகிச்சையை மேற்கொண்டால் முதுகுவலி நம்மை விட்டு ஓடி விடும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முதுகுவலியை போக்க நவீன சிகிச்சைகள்
» முதுகுவலியை கட்டுப்படுத்த சில வழிகள்.
» சரும அலர்ஜியை போக்க வழிகள்
» கழுத்து கருமையை போக்க வழிகள்
» வாய் துர்நாற்றத்தை போக்க சில வழிகள்
» முதுகுவலியை கட்டுப்படுத்த சில வழிகள்.
» சரும அலர்ஜியை போக்க வழிகள்
» கழுத்து கருமையை போக்க வழிகள்
» வாய் துர்நாற்றத்தை போக்க சில வழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum