தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மார்பக புற்றுநோய்

Go down

மார்பக புற்றுநோய் Empty மார்பக புற்றுநோய்

Post  meenu Thu Jan 24, 2013 1:35 pm



பெண்களை அதிகம் தாக்கும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோய் முதலிடத்தில் இருக்கிறது. என்ன காரணத்தால் வருகிறது என்பதை குறிப்பிட்டுச் சொல்ல இயலாது. அணுக்களில் ஏற்படும் திடீர் மாற்றத்தினால் இந்தவகை புற்றுநோய் ஏற்படுகிறது. திருமணமாகாதவர்கள் மற்றும் குழந்தையில்லாதவர்களுக்கு மார்பக புற்றுநோய் வர வாய்ப்பு வாய்ப்புகள் குறைவு..

புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள்:

* 60வயது முதல் 70வயது வரை 4ல் ஒரு பெண்ணுக்கு இந்த பிரச்னைகள் வரலாம்.

* தாயோ, சகோதரியோ மார்பக புற்றுநோய் உடையவராக இருந்தால் வரலாம்.

* மாதவிலக்கு ஒன்பது வயதுக்கு முன்னாலும் 55 வயதுக்குமேலும் இருந்தால் வரலாம்.

* முப்பது வயதுக்கு மேலே முதல் குழந்தையை பெற்றெடுத்தவர்களுக்கு..

* குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு..

* சிகிச்சைக்கென சிறுவயதில் கதிர் வீச்சு முறை அளிக்கப்பட்டிருந்தால்...

*அதிக உடல் பருமன் கொண்டவர்களுக்கு...

* அதிக அளவில் மது அருந்துபவர்களுக்கு....

எப்படிக் குறைப்பது?

உடற்பயிற்சி, கொழுப்புச்சத்தைத் தவிர்த்தல், பழவகைகள், இயற்கை உணவுகள் அதிகம் உட்கொள்ளுதல், சோயா, சத்துள்ள தக்காளி போன்ற காய்கறிகள், பீடாகரோடின் உள்ள காரட், பூசணிக்காய், செலரி எனப்படும் தாவர வகை உணவு அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள்:

* ஆரம்ப நிலையில் எனில், வலியில்லாமல் கட்டி, புண், மார்பகப் காம்பிலிருந்து நீர் வடிதல்,கை அக்குளில் கட்டிகள் தெரியலாம்.

* முற்றிய நிலையில் எனில், இருமல் மூச்சுத் திணறல், உடலில் எலும்புகளில் வலிகள் ஏற்படும்.

* புற்றுநோயை கண்டுபிடிக்க கட்டியிலிருந்து நீரை எடுத்து திசுப் பரிசோதனை செய்யலாம்.

* மோமோகிராம் எனப்படும் மார்பக கதிர் படமும் எடுத்துக் கொள்ளலாம்.

* எக்ஸ்ரே மார்புக்கு, நுரையீரலுக்கு அலட்ரா சவுண்டு பரிசோதனை, வயிறுக்கும். உடலில் எலும்புகளுக்கு எலும்பு ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும்.

மார்பகப் புற்றுநோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சைகள்?

அறுவை சிகிச்சை மூலம் மார்பகத்தை முற்றிலும் அல்லது கட்டியை மட்டும் சுற்றி அகற்ற வேண்டும். பின்னர் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கவேண்டும். அனைத்து மார்பகப் புற்றுநோயாளிகளுக்கும் புற்றுநோய் மருந்துகள் ஊசி மூலம் அளிக்கப்படுகிறது.

பின்னர் திசுப்பரிசோதனை முடிவில் குறிப்பிட்ட சிலருக்கு ஹார்மோன் மாத்திரைகள் ஐந்து வருடங்களுக்கு உட்கொள்ள வேண்டும். வருடந்தோறும் கண்டிப்பாக மோமோகிராம் மார்பக எக்ஸ்ரே, ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum