மார்பக புற்றுநோய்
Page 1 of 1
மார்பக புற்றுநோய்
பிரான்ஸ் நாட்டின் லியான் என்ற உலக புற்றுநோய் ஆராய்ச்சி கழக ஆய்வின்படி, இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 3 சதவீதம் அதிகரிக்கும். இதன்படி, வரும் 2015 முதல் ஆண்டுக்கு 2.50 லட்சம் பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவதற்கு வாய்ப்புள்ளது என்கின்றனர். அதே போல் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
காரணம் என்ன:
மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றி திருமணம் செய்வதை தவிர்ப்பது. குழந்தை பெற்றுக் கொள்வதை தாமதப்படுத்துவது. தாய்ப்பால் கொடுப்பதை தவிர்ப்பது. கால இடைவெளியின்றி குழந்தை பெற்றுக் கொள்வது ஆகியவை பெண்களிடம் ஹார்மோன் மாறுதலை ஏற்படுத்துகிறது. இதுவும் மார்பக புற்றுநோய்க்கு காரணமாகிறது.
தாய் மற்றும் உறவினர்களுக்கு இருந்தாலும் மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளது. மாத விடாய் சுகா தாரமின்மை, தரமற்ற நாப்கின்களைப் பயன் படுத்துவது, புற்றுநோய் வைரஸ் தொற்று உள்ளிட்ட காரணங்களால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. ஆனால், இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல், பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
குறிப்பாக கிராமங்களில் மாதவிடாய் சுகாதாரம் பற்றிய அறியாமையால் கருப்பை வாய் புற்றுநோய் வருகிறது. நகர்ப்புறங்களில் நாகரிக மோகத்தில் மார்பக புற்றுநோய் அதிகரிப்பது தெரியவந்துள்ளது. மொத்தம் 60 சதவீதம் பேர் நோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு வருவதால், பூரண குணமடைவது கேள்விக்குறியாகிறது.
நடுத்தர மற்றும் ஏழைகள் பலர் மருத்துவ சிகிச்சை பெற வசதியின்றி, உயிரை இழக்கிறார்கள். போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம். மார்பக புற்றுநோயை சுய பரிசோதனை, மேமோகிராபி சோதனைகள் மூலம் குறைந்த செலவில், எளிதில் கண்டறியலாம்.
ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், மார்பகத்தை அகற்றாமலே சிகிச்சை பெறலாம். நாற்பது வயதைக் கடந்தவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுய பரிசோதனை அல்லது மேமோ கிராபி சோதனை செய்து கொள்வது அவசியம் . மார்பக காம்பை சுற்றி நாள்பட்ட ஆறாத புண்கள். மார்பகத்தில் ஏதேனும் மாற்றங்கள்.
காம்பில் நீர் அல்லது ரத்தக் கசிவு. மார்பக காம்பு உள்நோக்கி இருத்தல். மார்பக பகுதியில் சதைகள் கடினமாவது ஆகியவை மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள். துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுதல், ரத்தக் கசிவு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் கர்ப்பப் பை வாய் புற்றுநோய் சோதனை செய்து கொள்வது அவசியம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மார்பக புற்றுநோய்
» மார்பக புற்றுநோய்
» மார்பக புற்றுநோய் பற்றிய தகவல்
» மார்பக புற்றுநோய் வந்தால் மார்பகத்தையே நீக்க வேண்டுமா?
» பெண்களே சரியாக தூங்காவிட்டால் மார்பக புற்றுநோய் தாக்குமாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum