லிப்ஸ்டிக்’ பூசினால் இருதய நோய் அபாயம்: ஆய்வில் தகவல்
Page 1 of 1
லிப்ஸ்டிக்’ பூசினால் இருதய நோய் அபாயம்: ஆய்வில் தகவல்
bdb5c82e-3c5c-4090-bdc1-5e4bde203e08_S_secvpfவேலைக்கு போகும் பெண்கள், திருமணம் மற்றும் விழாக்களுக்கு செல்லும் இல்லத்தரசிகள் ‘லிப்ஸ்டிக்’ பூசாமல் வெளியே செல்வதில்லை. உதட்டில் லிப்ஸ்டிக் பூசியே செல்கின்றனர். அவர்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் புதிதாக ஆய்வு முடிவு ஒன்று வெளியாகி உள்ளது.
அதன்படி லிப்ஸ்டிக்கில் உள்ள ராசயனம் இருதய நோயை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எலிகளிடம் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
லிப்ஸ்டிக்கில் உள்ள டிரைக்ளோசன் என்ற ரசாயனம் எலிகளுக்கு கொடுக்கப்பட்டு 20 நிமிடத்திலேயே அவற்றின் இருதய செயல்பாட்டை படிப்படியாக குறைத்தது. ஆகவே, மனித உடல்களிலும் இது நடக்கலாம் என எச்சரித்துள்ளனர்.
டிரைக்கோளன் வீட்டு உபயோக சுத்தம் செய்யும் பொருட்களிள் அனைத்திலும் உள்ளது. இது மனித உடலுக்கு மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்க கூடியது. இது இருதயம் உள்பட மூளையில் இருந்து செய்திகளை வாங்கும் தசைகளின் செயல்பாடுகளை முடக்குவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
எலிகளில் பரிசோதனைக்காக பயன்படுத்தப்பட்ட டிரைக்ளோசன் அளவு அதிகம். ஆனால் லிப்ஸ்டிக் உள்ளிட்ட பொருட்களின் இந்த ரசாயனத்தின் அளவு மிக குறைவாகவே சேர்க்கப்படுகிறது என அவற்றின் தயாரிப்பாளர்கள் மறுத்துள்ளனர்.
இருந்தாலும் லிப்ஸ்டிக் போடும் பெண்களே உஷாராக இருங்கள். லிப்ஸ்டிக் போட்டால் மட்டுமே அழகு கூடுகிறது என்பதை விட்டு ஒழியுங்கள். இயற்கையே அழகுதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தூக்க மாத்திரை பாவிப்பவர்களுக்கு கேன்சர் ஏற்படும் அபாயம் - ஆய்வில் தகவல்.
» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் : ஆய்வில் தகவல்
» மன அழுத்தம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்! ஆய்வில் தகவல்
» உயரமான பெண்களுக்கு கருவக புற்று நோய் வாய்ப்பு - ஆய்வில் தகவல்
» நீண்ட நேரம் தூங்கினால் நீரிழிவு நோய் குறையும்.ஆய்வில் தகவல்
» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர் : ஆய்வில் தகவல்
» மன அழுத்தம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்! ஆய்வில் தகவல்
» உயரமான பெண்களுக்கு கருவக புற்று நோய் வாய்ப்பு - ஆய்வில் தகவல்
» நீண்ட நேரம் தூங்கினால் நீரிழிவு நோய் குறையும்.ஆய்வில் தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum