தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிசரியன் பிறப்பும்-ஜோதிடமும்

Go down

 சிசரியன் பிறப்பும்-ஜோதிடமும்  Empty சிசரியன் பிறப்பும்-ஜோதிடமும்

Post  meenu Thu Jan 24, 2013 1:27 pm

சமீப காலமாக அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகள் அதிகமாகி விட்டார்கள். சில ஜோதிடர்கள் கூட அறுவை சிகிச்சைக்கு நல்ல கிரக நிலை பார்த்து கொடுக்கிறார்கள். அனைவரையும் அறுவை சிகிச்சை மூலம் நல்ல கிரக நிலையில் பிறக்கச் செய்வதால் அனைத்து குழந்தைகளின் எதிர் காலத்தையும் மிகவும் சிறந்ததாக மாற்றி விட முடியும் அல்லவா?

இது பற்றி சென்னையின் பிரபல செக்சாலஜிஸ்ட் நிபுணர் டாக்டர் காமராஜ் கூறியதாவது:-

உங்கள் பார்வையில் அறுவை சிகிச்சை மட்டும் தான் தெரிகிறது. அதற்கு பிறகு அறுவை சிகிச்சையும் ஜோதிடர் குறித்த நேரத்தில் செய்வதால் அக் குழந்தை சிறந்த வாழ்க்கை வாழும் என நம்புகிறார்கள். நல்ல கிரக நிலை பார்த்து குழந்தையை பிறக்க செய்வதால் அதன் தலைவிதியை நாம் முடிவு செய்கிறோமோ, சரியாக வருமா என்றால் அதற்கு ஓர் புராணத்தில் உள்ள உதாரணம் பார்ப்போம்.

நவீன காலத்தில் மட்டும் தான் இத்தகைய செயல் இருப்பதாக நினைக்க வேண்டாம். அந்த காலத்திலும் இத்தகைய செயல் உண்டு. பெரிய புராணத்தில் செங்கண்ண நாயனார் வரலாறு இதற்கு சரியான உதாரணம். ஒரு மஹாராணிக்கு பிரசவ நேரம் நெருங்குகிறது. அரண்மனை ஜோதிடர்கள் பிரசவம் ஆகும் நாளின் கிரக நிலையை கணித்தார்கள்.

பிறகு இந்த குறிப்பிட்ட நாழிகையில் குழந்தை பிறந்தால் அவன் சன்யாச யோகம் அடைவான். இது அடுத்த நாழிகையில் பிறந்தால் சக்கரவர்த்தி ஆவான் என பலன் கூறினார்கள். உடனே ராணி தன்னை ஒரு நாழிகைக்கு (24 நிமிடம்) தலைகீழாக கட்டி தொங்க விட சொன்னார்.

சரியாக ஒரு நாழிகை முடிந்ததும் தன்னை கீழே இறக்க செய்து குழந்தையை பிரசவித்தாள். அதிக நேரம் அக்குழந்தை கருவறையில் இருந்ததால் அக்குழந்தைக்கு கண் மற்றும் உடல் முழுவதும் சிவப்பு நிறம் கொண்டதாக இருந்தது. ராணியும் உடல் நிலை மோசமடைந்து இறந்தாள்.

இறந்து போவதற்கு முன் தனது குழந்தை சிவப்பு நிற கண்கள் கொண்டதாக இருந்ததால் அதற்கு செங்கண்ணன் என பெயர் வைத்தாள். தனது உயிரை கொடுத்து மகனை பெற்றெடுத்தாலும் உண்மையில் மன்னன் செங்கண்ணன் சக்ரவத்தி என வரலாற்றில் இடம் பெறவில்லை.

அதிக சிவன் கோவிலை கட்டிய மன்னன் என ஆன்மீக புகழ் அடைந்து நாயன்மார் வரிசையில் அனைத்து சிவன் கோவிலிலும் நிற்கிறார். இது செங்கண்ண நாயனாருக்கு மட்டுமல்ல கௌதம் புத்தருக்கு கூட இதே தான் நடந்தது. உனது மகன் துறவி ஆவான் என சொன்னதும் அவனை சகல சுக போகத்தில் வெளி உலகம் தெரியாமல் வளர்த்தார்கள்.

கடைசியில் என்ன நடந்தது, துன்பத்தை ஒரு கணம் பார்த்தார் துறவியானார் சித்தார்த்தர். உண்மையில் பிறப்பும், இறப்பும் நிர்ணயம் செய்யப்பட்ட ஒன்று. இதை எக்காரணம் கொண்டும் யாராலும் மாற்ற முடியாது. ஜோதிடர்கள் குறித்து கொடுத்த நேரத்தில் அறுவை சிகிச்சை செய்தால் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

உண்மையில் அந்த குழந்தை எந்த நேரத்தில் பிறக்க வேண்டுமோ அதில் தான் பிறக்கிறது. `சில நேரம் ஜோதிடர் நேரம் குறித்தாலும் தாயின் உடல் நிலை மாற்றத்தாலும், மருத்துவரின் செயல்பாட்டாலும் அறுவை சிகிச்சை நேரம் மாறி விடுகிறது. அதற்கு காரணம் நேரம் நாம் குறித்தாலும் அந்த குழந்தை பிறக்க வேண்டிய நேரம் இன்னும் வரவில்லை என்பதே இதற்கு காரணம்.

ஆக நல்ல நேரம் பார்த்து சிசேரியன் பிரசவம் செய்வது தவறான ஒன்று. அப்படியானால் சிறந்த குழந்தைகளை பெற்று எடுக்க முடியாதா? என நீங்கள் கேட்பது புரிகிறது. பிறப்பு நிகழ்தல் என்பது ஓர் குழந்தைக்கு அதன் வாழ்க்கையில் முதல் செயலாக இருக்கலாமே தவிர அக்குழந்தையின் உருவாக்கத்திற்கு அது முதல் செயல் அல்ல.

பெற்றோர்கள் நல்ல மனநிலையில் இருப்பது, சாத்வீக உணவுகளை உண்பது மற்றும் நல்ல சிந்தனை ஆகியவற்றுடன் வாழ்ந்தால் சிறந்த குழந்தையை பெற்று எடுக்க முடியும். மேலும் தாய் கர்ப்பிணியாக இருக்கும் பொழுது நல்ல சூழ்நிலையில் வாழ வேண்டியது அவசியம். பக்த பிரஹலாதன் கதை இதற்கு சிறந்த உதாரணம்.

தினசரியில் வரும் கொலை, கொள்ளை மற்றும் தவறான உறவுமுறை பற்றிய செய்திகளை படித்தும், மோசமான மெகா சீரியல்களை பார்த்தும் வளரும் குழந்தை ஜோதிடர் குறித்த நேரத்தில் பிறந்தவுடன் மஹாத்மாவாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமா? கோலத்தை முதல் புள்ளியிலிருந்து துவங்குங்கள், கடைசி புள்ளியிலிருந்து அல்ல என்று சற்று சூடாகப் பேசுகிறார் டாக்டர் காமராஜ்.

எல்லாமே நல்ல நேரம் தான்:

டாக்டர் காமராஜ் கூறும் போது, `டாக்டர்கள் யாரும் நல்ல நேரம் பார்த்து சிசேரியன் ஆபரேசன் செய்வதை விரும்புவதில்லை. தாயின் கருவில் உள்ள குழந்தையின் நிலை எந்த அளவில் உள்ளது, குழந்தையின் தலை திரும்பி விட்டதா என்பதை எல்லாம் பார்த்து ஆபரேசன் முடிவு செய்யப்படும். உதாரணமாக அஷ்டமி, நவமி வரும் போது, 2 நாட்கள் கழித்து ஜோதிடர்கள் நல்ல நேரம் குறித்து தருவார்கள்.

ஆனால் தாய்க்கு பிரசவ வலி அதற்கு முன்பே வந்து, தாய் சேய்க்கு ஆபத்து ஏற்பட்டால் உடனே சிசேரியன் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். எனவே பிறப்பு என்பது நம் கையில் இல்லை. இது இயற்கை முடிவு செய்யும், அற்புதம். நம்நாட்டில் ஏராளமான பேர் சித்திரை மாதம் குழந்தை பிறக்க கூடாது என்பதற்காக புதுமண தம்பதிகளை ஆடி மாதம் பிரித்து வைப்பார்கள்.

இதுவும் தவறு தான். குழந்தை எந்த கால கட்டத்தில் பிறந்தாலும் நன்றாகத் தான் இருக்கும். அதற்கான நவீன மருத்துவ வசதிகள் வந்து விட்டன. இதனால் வீணாக மனதை குழப்பாமல் தம்பதிகள் விரும்பும் கால கட்டத்தில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். நமக்கு கிடைத்துள்ள அனைத்து நேரமும் நல்ல நேரம் தான்' என்கிறார் டாக்டர் காமராஜ்.

புத்தியசாலி குழந்தை:

ஒரு தாயின் வயிற்றில் கரு உருவாவது என்பதே கடவுள் தரும் ஒரு பாக்கியம் தான். இதனால் அப்போதே குழந்தைக்கு கடவுளின் அருள் சக்தி கிடைத்து விட்டது. மன்னர்கள் காலத்தில் கூட குழந்தைகள் நல்ல நேரத்தில் பிறப் பதற்காக தாய்மார் மூச்சை அடக்கியதாக வரலாறு உண்டு.

இதனால் நல்ல நேரம் பார்த்து குழந்தையை பிறக்க வைப்பது சிறப்பான ஒன்று தான். இதற்கு நவீன மருத்துவம் உதவி செய்கிறது. நல்ல நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் புத்திசாலித்தனமாக இருக்கும். உடல் நலம் நன்றாக இருக்கும். நாம் செயற்கையாக ஆபரேசன் மூலம் குழந்தை பெற்றால் ஜாதகம் கணிக்க முடியுமா? அது சரியாக இருக்குமா? என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு.

ஒரு குழந்தை தாயின் தொப்புள் கொடியை விட்டு பிரிவும் போது அது கடவுளின் சக்தியை காற்று மூலம் பெறுகிறது. இதனால் தான் நிறைய தாய்மார்கள் நல்ல நேரம் பார்த்து சிசேரியன் செய்து கொள்கிறார்கள் என்றார் வாய்து பேராசிரியர் மணிபாரதி.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum