ஜோதிடமும் , அறிவியலும்
Page 1 of 1
ஜோதிடமும் , அறிவியலும்
ஜோதிடமும் , அறிவியலும்
ஜோதிடம் என்பது மெய்ஞானம் மட்டுமல்லாது விஞ்ஞானத்தின் மற்றுமொரு பிரிவாகும் . முந்தைய ஜென்மங்களில் ஏற்பட்ட வினைப்பயன்களை இந்த ஜென்மத்தில் அனுபவித்து தீர வேண்டும் என்பது விதி . அவை வினைப்பயன்களுக்கேற்ப நல்லவை அல்லது கெட்டவை ஆகும் .
அப்படி அனுபவித்துதான் ஆக வேண்டும் எனில் " ஜோதிடம் "எதற்கு ?
பிறப்பையும் , இறப்பையும் தீர்மானிப்பவன் இறைவன் . இவ்விரண்டுக்கும் நடுவில் இருக்கும் காலத்தை முடிந்த அளவு இலகுவாக
கடந்து செல்ல உதவதுதான் " ஜோதிடம் ."
ஜோதிடத்தை முறையாக பயன்படுத்தி சோதனைகளனைத்தையும் , சாதனைகளாக்கலாம் . கிரக அலைவரிசைகளை முறையாக பயன்படுத்தி வெற்றியாளராகலாம் . இந்த ஜென்மத்தில் நற்காரியங்களை செய்து வரப்போகும் அடுத்தடுத்த ஜென்மங்களில் நல்வினைப்பயன்களை எதிர்பார்க்கலாம் .
ஜோதிடமும் விஞ்ஞானத்தின் ஒரு பிரிவாகும் . இப்போது வளர்ந்த நாடுகள் விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட வானவெளி பிரபஞ்ச ரகசியங்கள் யாவற்றுக்கும் முன்னோடியானது ஜோதிடம் .
சூரியனை சுற்றி வரும் பூமி உள்ளிட்ட கிரஹங்களின் அலைக்கதிர்வீச்சுகள் மற்ற கிரகங்களை எவ்வாறு பாதிக்கின்றன , அவற்றின் செயல்பாடுகளின் தூரம் மற்றும் அவற்றால் ஏற்படும் மனரீதியான உடல் ரீதியான பாதிப்புகள் , அவ்வகையான பாதிப்புகளிலிருந்து காத்துக்கொள்ள வழிமுறைகள் ( அவையே பரிகாரங்கள் என்று சொல்லப்படுகின்றன ) ஆகிய அனைத்தும் நம் ஜோதிடத்தில் துல்லியமாக சொல்லப்பட்டுள்ளது .
{ உதாரணத்துக்கு ராகு என்ற கிரகத்தின் ( ராகு , கேது என்பது ஒரு கிரகமல்ல - ஒரு Magnatic Force ) தீய கதிர்வீச்சுக்களினால் ஒரு மனிதன் பாதிக்கப்பட்டிருப்பதை அவர் ஜாதகத்தின் மூலம் தெரிந்து கொண்டு அவரை “ திரு நாகேஷ்வரம் ” அல்லது “ திருமணஞ்சேரி ” போன்ற இடத்துக்கு சென்று , அந்த இடத்தில் உள்ள அதிகப்படியான அக்கிரக அலைக்கதிர்வீச்சுக்களினால் பாதிப்புகளை நிவர்த்தி செய்து வரச்செய்கிறோம் . }
பூமியில் உள்ள தாவரங்கள் உள்பட அனைத்து ஜீவ ராசிகளுக்கும் மற்ற கிரகங்களின் அலைக்கதிர்வீச்சினால் பாதிப்பு நிச்சயம் உண்டு
உடல் நோய்கள் , மன நோய்கள் , மூளை பாதிப்புகள் , வளர்ச்சியின்மை , உடல் அங்கங்களில் குறைபாடுகள் , குழந்தையின்மை குறைபாடுகள் , திருமணம் ஆகாமலிருத்தல் , ஏழ்மை , அதிகப்பணம் மற்றும் இன்னபிற அனைத்துக்கும் காரணம் மற்ற கிரஹங்களின் அலைவரிசைகளே .
உயிரினங்கள் பிறக்கின்ற இடம் மற்றும் நேரத்திற்கு தகுந்தாற்போல் பாதிப்புகள் மாறுபடும் என்பதையும் திருக்கணித முறை மூலம் நாழிகை , பாகை , டிகிரி போன்ற அளவுகளில் மிக நீண்ட ஆழம் வரை சென்று ஆராய்ச்சி செய்து நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்றுள்ளனர் .
நம் கலாச்சார முறைப்படி நாம் கிரகங்களை தெய்வங்களாக வணங்குகிறோம் . தேவையான கிரக அலைக்கதிர் வீச்சுக்களை அதற்கென உள்ள கோயில்களில் சென்று தேவைக்கெற்ப பரிகாரங்கள் செய்து நம் உடலில் அலைவீச்சுகளை Balance செய்து கிரஹ தோஷங்களை போக்கிக்கொள்கிறோம்
தொன்றுதொட்டு நம் முன்னோர்கள் அனைத்துக்காரியங்களுக்கும் நல்ல நேரம் முதலியவற்றை தேர்ந்தெடுத்து பார்த்து பழக்கப்படுத்தி விட்டதால்
" நம் உயிரில் கலந்து விட்டது ஜோதிடம்."
( பஞ்சபாண்டவர்கள் போருக்குப்புறப்படும்போது “ தாரபலன் “ உள்ள நாட்களை தேர்ந்தெடுப்பார்கள் )
“ விதியை மாற்றுவதென்பது நம்மால் இயலாத காரியம்.
மழை பெய்வதும் , நிற்பதும் விதி.
அதை நிறுத்தவோ , பெய்ய வைக்கவோ முடியாவிட்டாலும் குடை பிடித்து செல்வது மனிதர்களின் மதி.
இதுபோல பகவான் நமக்கு அருளியுள்ள மதியால் , விதியின் பல கெட்ட பலன் களிலிருந்து நம்மை ஜோதிடத்தின் மூலம் காத்துக்கொள்ள முடியும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இறைநம்பிக்கையும் நவீன அறிவியலும்
» கீதாசாரமும் ஜோதிடமும்
» பயபக்தியும் அறிவியலும்
» சுற்றுச்சூழலும் அறிவியலும்
» சுற்றுச்சூழலும் அறிவியலும்
» கீதாசாரமும் ஜோதிடமும்
» பயபக்தியும் அறிவியலும்
» சுற்றுச்சூழலும் அறிவியலும்
» சுற்றுச்சூழலும் அறிவியலும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum