தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தாய்ப்பால் உலகில் விலைமதிப்பற்ற பொக்கிஷம்

Go down

தாய்ப்பால் உலகில் விலைமதிப்பற்ற பொக்கிஷம் Empty தாய்ப்பால் உலகில் விலைமதிப்பற்ற பொக்கிஷம்

Post  meenu Thu Jan 24, 2013 1:26 pm

தாய்ப்பால் என்பது குழந்தைகளுக்கு இயற்கை கொடுத்த அற்புதமான வரம். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த எல்லா உயிரினங்களும் தங்கள் குழந்தைகளைப் பாலூட்டிப் பராமரிக்கின்றன. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தையும், மகத்துவத்தையும் ஒவ்வொரு இளம் தாய்க்கும் உணர்த்தும் வகையில் வருடந்தோறும் ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றன.

பால் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த குட்டிஈன்ற தாயின் (பெண் விலங்கின்) பால் சுரப்பிகளில் சுரக்கும் ஒரு சத்துள்ள திரவாகும். இத்திரவம் பாலூட்டி விலங்குகளின் குட்டிகளுக்கு ஆரம்ப காலத்தில் உணவாக பயன்படுகிறது. குட்டிகள் மற்ற உணவுகளை உண்ணும் திறன் பெறும் வரை தாயிப்பாலே முதன்மை உணவாகும்.

ஒரு குழந்தை பிறந்ததும் அக் குழந்தைக்கு தாயின் பாலை ஊட்டுவது இயற்கையானது. குறிப்பிட்ட காலம் வரை குழந்தைக்கு தாய்ப் பால் ஊட்ட வேண்டிய கடமை. இந்த நவீன கம்ப்யூட்டர் யுகத்தில் தாய்ப்பால் கொடுப்பது தொடர்பாக பல்வேறுபட்ட சிரம நிலைகள் கூறப்பட்டாலும் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் சரி, வளர்முக நாடுகளிலும் சரி தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும் எனும் நிலைப்பாட்டின் உறுதித்தன்மையில் மாத்திரம் மாற்றங்களே வரவில்லை.

விஞ்ஞானம் வளர்ச்சியடைய வளர்ச்சியடைய தாய்ப்பாலின் முக்கியத்துவம் விஞ்ஞான ரீதியாகவும் உறுதிப்படுத்தப்பட்டே வருகின்றனது. வேலைக்குச் செல்லும் தாயாக இருந்தால் தாய்ப்பாலூட்டுவது இன்று ஒரு பெரும் பிரச்சினையாக மாறி வருகின்றது.

இந்நிலையைக் கருத்திற்கொண்டு வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் சரி வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளிலும் சரி குழந்தை பராமரிப்பைக் கருத்தில் கொண்டு பிரசவத்தின் பின்பு தாய்க்கு நீண்ட கால விடுமுறை வழங்கப்படுகின்றது. அது தவிர பாலூட்டும் காலம் வரை சில சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

எத்தனையோ பெண்கள் குழந்தை இல்லாமையால் வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் குழந்தை பெறும் வரம் பெற்றவர்கள் அந்த பேற்றின் மகத்துவம் தெரியாமல் அதை அலட்சியப்படுத்துகின்றனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum