தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பொக்கிஷம்

Go down

பொக்கிஷம்                                         Empty பொக்கிஷம்

Post  ishwarya Mon Apr 29, 2013 11:36 am

சேரனின் படங்கள் மழைச்சாரல் மாதிரி மனதுக்கு இதமானவை. அதிகம் சாரலடித்தால் என்னாகும்? அதுதான் நடந்திருக்கிறது இங்கேயும்! அன்புள்ள…வில் ஆரம்பித்து, இப்படிக்கு… என்று அவர் எழுதி முடிப்பதற்குள், விதையே விதை நெல்லாகிவிடுகிற அளவுக்கு நீளளளளளளள…ம்! ஆனால் காதல் ஒரு மனிதனை சல்லடையாக துளைப்பதையும், சங்கிலியாக முறுக்குவதையும் நமக்குள் உணர வைத்திருப்பதுதான் சேரனின் வெற்றி!

கொல்கத்தாவில் மரைன் என்ஜினியராக பணியாற்றும் சேரன், உடல்நலமில்லாத அப்பாவை பார்க்க வருகிறார் மருத்துவமனைக்கு. பக்கத்து பெட்டில் அம்மாவுக்கு உதவியாக இருக்கும் பத்மப்ரியாவுக்கும் இவருக்கும் நட்பு துளிர்விடுகிறது. கொல்கத்தாவிற்கு சென்று விடும் சேரனுக்கும், நாகூரில் வசிக்கும் பத்மப்ரியாவுக்கும் தொடர்கிற கடிதப்போக்குவரத்து காதலில் கொண்டுபோய் விட, அதன்பின் நடப்பதுதான் ஐயகோ. சேரன் லெனின் என்பதும், பத்மப்ரியா நதீரா என்பதும்தான் இந்த காதலுக்கு விழுகிற முதல் வெட்டு! இந்துவும் முஸ்லீமும் காதலித்து தங்கள் மதங்களை மீறுவது இப்போது கூட நடக்காத காரியம். எழுபதுகளில்…?

அப்பாவையும் அழைத்துக் கொண்டு போய் பெண் கேட்கிறார் சேரன். திருமணம் செய்து தருகிறேன் என்று வாக்குறுதி கொடுக்கிற பத்மப்ரியாவின் அப்பா சில மாதங்களில் வீட்டையே காலி செய்து கொண்டு போய்விட, தேடுகிறார் தேடுகிறார்… தனது மரணம் வரைக்கும் காதலியை தேடுகிறார் சேரன். எங்கோ தொலைந்து போன அந்த காதலிக்காக அவர் எழுதி வைத்திருக்கும் கடிதங்களை படிக்கிற மகன், அவற்றை உரியவரிடம் சேர்க்க முயல்கிறார். சேர்த்தாரா? என்பது கண்கலங்க வைக்கிற முடிவு.

காதலில் விழுகிற எவனும் கிறுக்கனாகி திரிவான் என்பதை நகைப்புக்குரிய சம்பவங்களோடு வெளிப்படுத்துகிறார் சேரன். தபால்காரரை பின் தொடர்ந்து சென்று, தனது கடிதம் முறையாக ‘டிராவல்’ செய்கிறதா என்று வேவு பார்க்கும்போது தியேட்டரே கெக்கெக்கே… காரைக்கால் பஸ் ஸ்டாண்டில் ஒவ்வொரு பஸ்சாக ஏறி இறங்கி திரிவது அச்சச்சோ…. ஆனாலும் 14 ரீல்களிலும் நீக்கமற நிறைந்திருப்பது இவரது குரலும், முகமும் மட்டுமே என்பதுதான் சற்றே அலுப்பு. தனக்காக கதை செய்கிற போது சேரனின் கவனம் பிசிரடிக்கிறதோ என்ற விமர்சகர்களின் அச்சத்தை அவர் இந்த நேரத்திலாவது யோசிப்பது நலம்.

பத்மப்ரியாவின் முக்காட்டையும் மீறி வெளிப்படுகிற நடிப்புக்கு தாராளமாக கைதட்டலாம். கண்களை மட்டும் காட்டுங்கள் போதும். ஆயிரம் வசனங்களை அதுவே பேசிவிடும் என்ற அவரது தன்னம்பிக்கைக்கு நிறைய தீனியும் போட்டிருக்கிறார் இயக்குனர் சேரன்.

கவனத்திற்குரிய மற்றொருவர் விஜயகுமார். பல படங்களுக்கு பிறகு மிகையில்லாத நடிப்பால் கவர்கிறார்.

கம்பீரமாக தலை நிமிர்ந்து நிற்பது கலை இயக்குனர் வைரபாலனும், ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவும்தான். 70 களின் இயல்பு வாழ்க்கையை அப்படியே கொண்டு வந்திருக்கிறார் வைரபாலன். காரைக்கால் மட்டுமல்ல, கொல்கத்தாவும் இவரது கைபட்டு பழசாகியிருப்பது ஆச்சர்யம். பழைய ஸ்வேகா உட்பட, அந்த கால வார இதழ்கள் கூட பழைமையின் அடையாளமாக பிரதிபலித்திருப்பது அழகு. ஒளிப்பதிவாளரின் ஒவ்வொரு பிரேமும் நேர்த்தியான வரையப்பட்ட ஓவியம்.

சபேஷ் முரளியின் பாடல்களில் பலவற்றை கிளை கழித்துவிட்டு பார்த்தால், ஒன்றிரண்டு பசுமை.

ஹ¨ம், புதையலாக வந்திருக்க வேண்டிய பொக்கிஷம்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum