வெள்ளைப்படுதல் அதிகரிக்க காரணங்கள் என்ன?
Page 1 of 1

யோனிக்குழாயில் கிருமித் தொற்று இதற்கு முக்கிய காரணம்.
ஆண் உறுப்பின் நுனித்தோல், சிறுநீர்துளை, ஆண்மை சுரப்பி ஆகிய இடங்களில் `டிரைக்கோமோனஸ் வெஜைனாலிஸ்` என்ற கிருமிகள் காணப்படுகின்றன. இது ஆண்களிடமிருந்து பெண்களுக்கு தொற்றுகிறது.
கிருமிகள் உள்ள ஆண்கள் பயன்படுத்தும் கழிப்பிடம், குளியல் அறை போன்றவைகளை பயன்படுத்தும் திருமணமாகாத பெண்களுக்கும், சிறுமிகளுக்கும்கூட வெள்ளைப்படுதல் ஏற்படலாம். கிருமித் தொற்றால் வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் சுரப்பு மஞ்சள் நிறத்திலோ, இளம் பச்சை நிறத்திலோ காணப்படும். அரிப்பு தோன்றும்.
சிறுநீர் கழிக்கையில் எரிச்சலும், கடுப்பும் தோன்றும். தாம்பத்ய தொடர்பின்போது எரிச்சல், வலி ஏற்படும். மாதவிலக்கின்போது கிருமிகள் அதிகம் பெருகுவதால் அதிகமாக வெள்ளைப்படும். யோனிக் குழாயில் நுரைத்த வெண் திரவம் தெரியும்.
அந்த குழாய் சிவந்து, கருப்பையின் வாய்ப் பகுதியில் செம்புள்ளிகளும் காணப்படும். வெள்ளைப்படுதலை ஏற்படுத்தும் கிருமிகள் பெண்ணிடம் இருந்து ஆணுக்கும் வரும். கருத்தடை மருந்துகள், நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள், ஸ்டீராய்டு மருந்துகள் போன்றவைகளை நீண்டகாலம் பயன்படுத்தி வந்தாலும் வெள்ளைப்படுதல் அதிகமாகும்.
கண்களுக்கு தெரியாத நுண்கிருமிகள் கருப்பையில் தொற்றிக்கொண்டாலும் வெள்ளைப்படுதல் அதிகரிக்கும். அதனால் பெண்கள் உடலையும், உள்ளாடையையும் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். சிறுநீர் கழித்த ஒவ்வொருமுறையும் தண்ணீரால் கழுவுவதும் அவசியம்.
நுண்கிருமிகளின் வகை மற்றும் தாக்குதலின் தன்மையைப் பொறுத்து வெள்ளைப்படுதலின் அளவு அதிகரிக்கும். பால்வினை நோய்களாலும் இந்த பாதிப்பு ஏற்படும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முடி உதிர்வதற்கான காரணங்கள் என்ன?
» காரணங்கள் காரணங்கள்
» குழந்தைகளின் அழுகைக்கான காரணங்கள்
» விக்கல் வரக் காரணங்கள் எவை?
» முதுகு வலி ஏற்படுவதற்கான காரணங்கள்
» காரணங்கள் காரணங்கள்
» குழந்தைகளின் அழுகைக்கான காரணங்கள்
» விக்கல் வரக் காரணங்கள் எவை?
» முதுகு வலி ஏற்படுவதற்கான காரணங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum