தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கர்ப்பிணிகளையும் மிரட்டும் உடல் பருமன்

Go down

கர்ப்பிணிகளையும் மிரட்டும் உடல் பருமன் Empty கர்ப்பிணிகளையும் மிரட்டும் உடல் பருமன்

Post  meenu Thu Jan 24, 2013 1:12 pm

`ஒபிசிடி' என்கிற உடல் பருமன் பிரச்சினைக்கு இன்றைக்கு பலரும் ஆளாகின்றனர். கர்ப்பிணிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. கர்ப்பிணிகளின் உடல் எடையும் எக்குத்தப்பாக எகிறினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்கிற கோணத்தில் எடின்பர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள்.

இந்த ஆய்வில், கர்ப்பிணிகளின் திடீர் உடல் எடை அதிகரிப்பு அவர்களது பிரசவத்தை சிக்கலாக்குகிறது என்பது தெரிய வந்தது. ஆய்வை மேற்கொண்டவர்கள், சுமார் 650 கர்ப்பிணிப் பெண்களை தங்களது ஆய்வுக்கு உட்படுத்தினர்.

ஆய்வின் முடிவில், அதிக உடல் எடையுடன் காணப்பட்ட பெண்களுக்கு பிரவசத்தின்போதும், கர்ப்ப காலத்தின்போதும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது தெரிய வந்தது. அதாவது, அதிக உடல் எடையுடன் காணப்பட்டவர்கள் பிரவசத்தின்போது மிக மோசமான நிலைக்கும் சென்றுவிட்டு திரும்பினர்.

இதுபற்றி ஆய்வை மேற்கொண்ட டாக்டர் ரெபேகா ரெய்னோல்ட்ஸ் கூறும்போது, கர்ப்பக் காலத்தில் ஒரு பெண்ணின் உடல் எடை திடீரென்று அளவுக்கு அதிகமாக அதிகரிப்பது அவர்களது மார்பகம் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஏற்படுத்துவது தெரிய வந்துள்ளது. அதனால், உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது அவர்களது உயிருக்கும், குழந்தைக்கும் நல்லது என்றார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum