தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பேரீச்சம்பழ பாயசம்

Go down

பேரீச்சம்பழ பாயசம்                     Empty பேரீச்சம்பழ பாயசம்

Post  ishwarya Fri May 10, 2013 5:33 pm

தேவையான பொருட்கள்:

பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) – 1 கப்
தேங்காய்ப் பால் – 1 கப்
வெல்லம் நறுக்கியது – 1/4 கப்
ஏலக்காய்த் தூள் – 1 சிட்டிகை
பச்சைக் கற்பூரம் – 1 சிட்டிகை
உப்பு – 1 சிட்டிகை

செய்முறை:

* கொட்டை நீக்கிய பேரீச்சம் பழத்தை பொடிப் பொடியாக அரிந்து கொண்டு தேங்காய்ப்பால் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

* வெல்லத்தை சிறிது தண் ணீர் ஊற்றி ஒரு கொதிவிட்டு கரைந்ததும், ஒரு உலோக வடிகட்டியில் தூசி நீங்க வடிகட்டிக் கொள்ளவும்.

* ஒரு வாணலி அல்லது நான்ஸ்டிக் தவாவில் தேங்காய்ப்பாலுடன் சேர்த்து அரைத்த பேரீச்சம்பழம் மற்றும் வெல்ல நீரை சேர்த்து ஒரு கொதி விடவும்,

* ஒரு சிட்டிகை பச்சை கற்பூரத்தை கட்டைவிரல் மற்றும் ஆட்காட்டி விரலுக்கு மத்தியில் வைத்து நன்கு நெரித்து கொதிக்கும் பாயசத்தில் போட்டு ஏலக்காய் பொடி தூவி ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைக்கவும்.

குறிப்பு:

* தேங்காய்த் துருவலை சிறிது சுடுநீருடன் சேர்த்து மிக்சியில் அரைத்து ஒரு உலோக வடிகட்டியில் போட்டு கசக்கி எடுத்து வடிகட்டிய முதல் தேங்காய்ப்பாலை உபயோகிக்க வேண்டும். சூப்பர் மார்க்கெட்டுகளில் ரெடியாகக் கிடைக்கும் தேங்காய்ப்பாலையும் உபயோகிக்கலாம்.

* ஒரு சிட்டிகை உப்பு சேர்ப்பதானது வெல்ல சுவையைத் தூக்கிக் காட்டும். வெல்லத்திற்கு பதிலாக தேவைப்பட்டால் சிறிது தேனும் உபயோகிக்கலாம்.

* மற்ற பாயசங்களில் இருந்து வேறுபட்ட சுவையுடன் இயற்கை இனிப்புடனும் கமகம மணத்துடனும் இருக்கும் பேரீச்சம் பழ பாயசம் சுவையும் ஆரோக்கியம் நிறைந்தது என்றால் சரிதானே





ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum