வெண்டைக்காய் புளி கறி
Page 1 of 1
வெண்டைக்காய் புளி கறி
வெண்டைக்காய் சத்தானது வளரும் குழந்தைகளின் நினைவாற்றலுக்கு ஏற்றது. எனவே வெண்டைக்காயை பலவிதமாக சமைக்கலாம். வெண்டைக்காயை பொரியலாகவும், புளி சேர்த்து கூட்டாகவும் தயாரித்து அளிக்கலாம். வெண்டைக்காய் புளி கறி செட்டிநாடு பகுதிகளில்
பிரசித்தி பெற்ற டிஸ் ஆகும்.
வெண்டைக்காய் – 1/4 கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளிப் பழம் – 2
பச்சை மிளகாய் – 6
புளி – எலுமிச்சம்பழம் அளவு
மஞ்சள்தூள் – அரை டீ ஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு தாளிக்க சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
வெல்லம் சிறிதளவு
எண்ணெய் – 50 மிலி
கறிவேப்பிலை – 2 கொத்து
அரிசி கழுவிய தண்ணீர் – 2 டம்ளர்
செய்முறை:
முதலில் வெண்டைக்காயை ஒரு அங்குல நீளத்திற்கு நறுக்கிக் கொள்ளவும். சிறிய வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும். மிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். புளியை அரை டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதனுடன் வெண்டைக்காய் பச்சை மிளகாய் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். பிறகு இரண்டு டம்ளர் அரிசித் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெண்டைக்காய் நன்கு வெந்ததும் மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய தக்காளி புளிக்கரைசல் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். சிறிது நேரம் கழித்து வெல்லத்தை பொடியாக்கி சேர்க்கவும். மண்டி நன்றாக கொதித்து கெட்டியாக வந்ததும் இறக்கி விடவும். பருப்பு சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சுவையான சைடு டிஸ் இது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெண்டைக்காய் புளி கறி
» வெண்டைக்காய் புளி குழம்பு
» சுண்டைக்காய் புளி கறி
» பாகற்காய் புளி கறி
» புளி உப்புமா
» வெண்டைக்காய் புளி குழம்பு
» சுண்டைக்காய் புளி கறி
» பாகற்காய் புளி கறி
» புளி உப்புமா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum