குழந்தை பிறப்பை தள்ளிப் போடுறீங்களா..?
Page 1 of 1
குழந்தை பிறப்பை தள்ளிப் போடுறீங்களா..?
இப்போதெல்லாம் திருமணம் செய்து கொள்ளும் இளம் ஜோடிகள், குழந்தை பெற்றுக்கொள்வதை சிறிது காலத்திற்கு தள்ளிப்போட்டுவிடுகிறார்கள். ஒன்றிரண்டு வருடத்திற்கு வாழ்க்கையை அனுபவித்துவிட்டும், எதிர்காலத்திற்கு தேவையானதை சேர்த்துவிட்டும் குழந்தை பற்றி பார்த்துக்கொள்ளலாம் என்பது அவர்களது கணிப்பாக இருக்கிறது.
இப்படி தள்ளிப்போடுவதில் தவறில்லை. குறிப்பிட்ட வயதையும் மீறித் தள்ளிப்போடுவது குழந்தையின்மைக்கு காரணமாகிவிடலாம் என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள். குழந்தையை தள்ளிப்போடுவது பற்றி யோசிப்பவர்களுக்கு டாக்டர்கள் கூறும் அறிவுரை:
முக்கியமான காரணம் என்றால் அதிகப்பட்சம் ஒரு வருடத்திற்கு மட்டும் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுங்கள். அதுவும் மருத்துவரின் ஆலோசனைப்படிதான் செய்ய வேண்டும். குழந்தையை தள்ளிப்போடுவதற்காக மருந்துகளையும், ஊசியினையும் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
உங்கள் கட்டுப்பாட்டையும் மீறி கர்ப்பம் தரித்துவிட்டால் கருக்கலைப்பு செய்ய வேண்டாம். அதிகப்பட்சம் 30-35 வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்வது நல்லது. இந்த வயதில்தான் பெண்களின் உடல் நிலை சீராக இருக்கும். கருமுட்டையின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும், இடுப்பு எலும்புகள் எல்லாம் நன்றாக வளைந்து கொடுத்து சுகப்பிரசவம் ஆகும் வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
காலம் தாழ்த்தி குழந்தை பெற்றுக்கொள்ளும்போது, அந்த குழந்தை வளர்ந்து ஆளாகும்போது, அதன் பெற்றோர் தாத்தா, பாட்டிபோல் ஆகிவிடுவார்கள். அந்த குழந்தைக்கு திருமணம் செய்து பேரன், பேத்தியை பார்ப்பது என்பது சாத்தியமற்று போகலாம். 35 அல்லது அந்த வயதுக்கு மேல் குழந்தையைப் பெற்றுக்கொள்வது, அந்த தாய்க்கும், குழந்தைக்கும் உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
சிலருக்கு குழந்தை பிறப்பதிலேயே பிரச்சினைகள் வரலாம். குழந்தை பாக்கியம் என்பது மிகப்பெரிய `கிப்ட்'. எல்லாவித வசதி வாய்ப்புகள் இருந்தும் அந்த `கிப்ட்' கிடைக்காமல் ஏங்கும் தம்பதியர் பலரை பார்க்கலாம். அதனால், குறிப்பிட்ட வயதிற்குள் குழந்தை பெற்றுக்கொள்வதுதான் ஆனந்தமான வாழ்க்கைக்கு வழிக்காட்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குறைபாடு உள்ள குழந்தை பிறப்பை தவிர்க்கலாம்
» தூக்க மாத்திரை போடுறீங்களா? புற்றுநோய் வரும்!
» கருத்தடை மாத்திரை போடுறீங்களா? முதல்ல இத படிங்க..!
» அதிகமா மேக்கப் போடுறீங்களா? உங்க சருமத்துக்கு ஆபத்து
» கருத்தடை மாத்திரை போடுறீங்களா? முதல்ல இத படிங்க…

Permissions in this forum:
You cannot reply to topics in this forum