தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறைபாடு உள்ள குழந்தை பிறப்பை தவிர்க்கலாம்

Go down

குறைபாடு உள்ள குழந்தை பிறப்பை தவிர்க்கலாம் Empty குறைபாடு உள்ள குழந்தை பிறப்பை தவிர்க்கலாம்

Post  meenu Wed Jan 23, 2013 1:25 pm

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் மருத்துவம் படிக்கும் பெரும்பாலான பெண்கள், மகப்பேறு துறையினை தெரிவு ஆய்வு தெரிவிக்கிறது. "மேற்கத்திய சேதங்களை காட்டிலும் தெற்காசியர்களுக்கு குழந்தைகள் மீது தனி ஈடுபாடும், தணியாத ஆர்வமும் உண்டு. அத்துடன் குடும்பம் என்கிற சமூக அமைப்பின் மீதும் தெற்காசியர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு'' என்று விளக்கமளிக்கிறார்கள்.

இத்துறையை தெரிவு செய்து, மகப்பேறு மருத்துவர்களாக செயல்படுபவர்கள். இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் படித்த மற்றும் படிக்காத இளம் தலைமுறையினருக்கு மாறிவரும் கால சூழலுக்கேற்ப குழந்தை பெற்றெடுப்பதில் ஏராளமான சந்தேகங்கள் இருந்து கொண்டேயிருக்கின்றன. இவர்களது தற்கால சந்தேகங்களுக்கு தமது நீண்ட நெடிய அனுபவத்தின் மூலம் பதில் அளிக்கிறார் டாக்டர் ஜெயராணி.


கர்ப்பிணி பெண்களிடம் குரேமேசேம் சோதனை செய்து கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் எதற்காக பரிந்துரை செய்கிறார்கள்?

தாய் தந்தையருக்கு இயற்கையாகவே மரபணுவில் குறையிருந்தால், பிறக்கும் குழந்தையும் குறையுடன் பிறப்பதற்கு சாத்திய கூறு உண்டு. இதனை தவிர்க்கவே இந்த சோதனையை மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். உடல் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறந்தால், அக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இத்தகு சோதனைகள் அவசியமாகிறது.

மரபணுத் தாக்கத்தால் சில நோய்கள் ஆண் குழந்தைகளுக்கும், சில நோய்கள் பெண் குழந்தைகளுக்கும் ஏற்படுகிறது. இத்தகைய குறைபாடுகளுடன் குழந்தை பிறக்காமல் இருக்க, முன்கூட்டியே செய்யப்படுவது தான் இந்த குரேமேசேம் சோதனை. இதன் முடிவுகளை முன்வைத்து, கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏற்படும் குறைபாட்டை களையமுடியும்.

மிகச்சிலருக்குதான் குறையுடைய குழந்தை பிறப்பதை தவிர்க்க, கரு கலைப்பு செய்து கொள்ளுங்கள் என்று பரிந்துரை செய்கிறோம். இந்த சோதனை மூலம் "டவுண்கிண்ட்ரேம்'' முதலான குறைகளும் கண்டறியப்படுகிறது. இந்த சோதனை மூலம் குறைகளைக் கண்டறிந்து, குறைகள் ஏற்படும் வாய்ப்புகளையும் கூறி, குழந்தை உண்டாகாமல் இருக்க பெற்றோருக்கு வழிகாட்டவும் உதவுகிறது.

குழந்தைபேறு உண்டாவாதில் தைராய்டு சுரப்பியின் பங்களிப்பு குறித்து கெஞ்சம் விளக்குங்களேன்?

தைராய்டு பிரச்சினையால், மகப்பேறில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகின்றன. ஹைபேதைராடிஸம் தைராய்டு குறைவாகச் சுரத்தல் ஹைபர் தைராடிஸம் தைராய்டு அதிகமாகச் சுரத்தல் ஒருவர் கருவுற்றிருக்கிறார் என்று உறுதியாகத் தெரிந்தவுடன் தைராய்டு சோதனையை அவசியம் செய்து கொள்ள வேண்டும்.

கருவுற்ற தாய்க்கு தைராய்டு சுரப்பு படிப்படியாகக் குறைந்து, "ஹை போதைராய் டிஸம்'' பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகு மாற்றத்தை தாயால் உணர முடியாது. இந்த பிரச்சினையால் பிறக்கும்பேதே, மந்த புத்தியுடைய குழந்தையாகப் பிறக்க வாய்ப்புள்ளது. ஆரம்பத்திலேயே இக்குறையைக் கண்டறிந்தால், மருந்துகள் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம். ஆனால், "ஹைபர் தைராய்டிஸம்'' இருப்பது ஆபத்தானதாகும்.

அதிகப் படியாகச் சுரக்கும் தைராய்டினைக் குறைக்கச் சாப்பிடும் மாத்திரைகளால் குழந்தைக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. குழந்தைப்பேறு வேண்டும் என்ற ஆவலால், ஹைபர் தைராய்டிஸத்திற்கு மருந்து சாப்பிட்டு குழந்தை உண்டான பெண்கள், பிரசவத்தின்போது பல ஆபத்தான நிலையினை சந்திக்க வேண்டியதிருக்கும்.

எனவே, தைராய்டு அதிகரிக்கும் பிரச்சினையுள்ள மிகச்சில பெண்களுக்கு மட்டும், கருக்கலைப்பு செய்து கொள்வதுதான் சிறந்த வழி என்று பெரும்பாலான மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் கருக்கலைப்பை விரும்பாத சில பெண்களுக்கு ஏற்படும் இந்தப் பிரச்சினையை மருந்துகள் மூலம், குணப்படுத்துகிறோம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» குழந்தை பிறப்பை தள்ளிப் போடுறீங்களா..?
» வயதான அப்பாவிற்கு பிறக்கும் குழந்தை ஆட்டிசம் குறைபாடு ஏற்படும்: ஆய்வில் தகவல்
» வயதான அப்பாவிற்கு பிறக்கும் குழந்தை ஆட்டிசம் குறைபாடு ஏற்படும்: ஆய்வில் தகவல்
» கருவில் உள்ள குழந்தை ஆணா?, பெண்ணா? என்பதை அறிந்துகொள்ள. இதப் படிங்க!
» முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum