ஈஸியா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா!!!
Page 1 of 1
ஈஸியா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா!!!
எப்போதும் வீட்டில் உள்ளோருக்கு உப்புமா, தோசை, இட்லி என்று தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். அவ்வாறு செய்து சாப்பிட்டு வெறுத்திருப்பவர்கள், வீட்டில் இடியாப்பம் மற்றும் தேங்காய் பாலை செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருப்பதோடு, குழந்தைகளும் விரும்பு ஆசையோடு சாப்பிடுவர். இத்தகைய இடியாப்பம் மற்றும் தேங்காய் பால் செய்வது எப்படியென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 2 கப்
தேங்காய் – 1
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
சர்க்கரை – தேவையான அளவு
செய்முறை:
இடியாப்பம் செய்வதற்கு…
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி , அதை நன்கு கொதிக்க வைத்து இறக்கவும். பின் அந்த நீரை ஆற வைக்கவும்.
பின் ஒரு பாத்திரத்தில் மாவை போட்டு, அதில் உப்பு மற்றும் நீரை ஊற்றி, மென்மையாக பிசைந்து கொள்ளவும். (தண்ணீர் மிகவும் சூடாக இருக்க கூடாது. இல்லையெனில் மாவு மிகவும் கெட்டியாகிவிடும்.)
பிறகு பிசைந்த மாவை இடியாப்ப அச்சில் போட்டு, இட்லி தட்டில் வட்டமாக பிழியவும்.
இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, பிழிந்து வைத்துள்ள இட்லி தட்டை வைத்து, மூடி வேக வைத்து இறக்கவும்.
தேங்காய் பால் செய்வதற்கு…
தேங்காயை துருவி அதனை மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும். பின் அதனை ஒரு பாத்திரத்தில், சல்லடைக் கொண்டு தண்ணீர் ஊற்றி, வடிகட்டிக் கொள்ளவும். பின் அதில் சர்க்கரையை வேண்டுமென்றால் கலந்து வைத்துக் கொள்ளலாம், இல்லையென்றால் இடியாப்பம் சாப்பிடும் போது சர்க்கரையை தூவி, அதன் பின் தேங்காய் பாலை விட்டும் சாப்பிடலாம்.
இப்போது ஈஸியான இடியாப்பம் மற்றும் தேங்காய் பால் ரெடி!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஈஸியா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா!!!
» இடியாப்பம் பீட்சா
» பாதாம் கேக் செஞ்சு சாப்பிட வாங்க!!!
» ஆசையா செஞ்சு சாப்பிடுங்க, அயிரை மீன் குழம்பு
» இடியாப்பம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum