முட்டை பொரியல்
Page 1 of 1
முட்டை பொரியல்
முட்டை உடலுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் அதில் அதிக அளவில் புரோட்டீன் உள்ளது. அந்த முட்டையை இதுவரை குழந்தைகளுக்கு வேக வைத்து தான் கொடுத்திருப்போம். ஆனால் இப்போது அந்த முட்டையை பொரியல் போன்று செய்து கொடுத்தால், அதை அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது அத்தகைய முட்டை பொரியலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
முட்டை – 8
சோம்பு – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 2 (நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்ற வேண்டும். பின் அதில் சிறிது உப்பை போட்டு, நன்கு அடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில் சோம்பை போடவும். சோம்பு வெடிந்ததும், அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு அதோடு கறிவேப்பிலை, தக்காளி மற்றும் பச்சை மிளகாய் போட்டு. 1-2 நிமிடம் வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து, 1-2 நிமிடம் கிளறவும்.
பின்பு அடித்து வைத்துள்ள முட்டையை அத்துடன் சேர்த்து 2-3 நிமிடம் கிளறி வேக விடவும். முட்டை வெந்ததும் அதில் கொத்தமல்லியை போட்டு, கிளறி இறக்கவும்.
இப்போது சுவையான முட்டை பொரியல் ரெடி!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum