தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முடி உதிர்தலை தடுக்க இயற்கையான வழிமுறைகள்

Go down

முடி உதிர்தலை தடுக்க இயற்கையான வழிமுறைகள் Empty முடி உதிர்தலை தடுக்க இயற்கையான வழிமுறைகள்

Post  ishwarya Fri May 10, 2013 2:43 pm

இன்றைய காலத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் பிரச்னையாக இருப்பது முடி உதிர்தல் தான்.

இதனை தடுக்க இயற்கையான பல்வேறு வழிமுறைகள் உள்ளன.

எண்ணெய் குளியல்

ஏதாவது ஒரு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அதனை தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பிறகு ஷாம்பு போட்டு கூந்தலை நன்கு அலச வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் கூந்தல் நன்கு வளர்வதோடு, உதிராமலும் இருக்கும்.

இயற்கையான சாறுகள்

பூண்டு, இஞ்சி அல்லது வெங்காயத்தின் சாற்றை எடுத்து இரவில் படுக்கும் முன் ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து, காலையில் எழுந்து குளித்து வர வேண்டும். இதனால் முடி உதிர்வதை தடுக்க முடியும்.

தலை மசாஜ்

தினமும் தலைக்கு எண்ணெய் தடவும் போது, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மயிர்கால்கள் நன்கு வலுவடையும்.

அதிலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் லாவண்டர் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை சிறிது சேர்த்து மசாஜ் செய்வது நல்லது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்

வெதுவெதுப்பான கிரீன் டீயை ஸ்கால்ப்பில் படும்படியாக தடவி, ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் நீரில் அலச வேண்டும்.

ஏனெனில் கிரீம் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால் கூந்தல் உதிர்தலை தடுத்து, கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

தியானம்

மனஅழுத்தம் இருந்தாலும், கூந்தல் உதிர்தல் ஏற்படும். எனவே மன அழுத்தத்தை குறைக்க தியானம் செய்தால், கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum