கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்களுக்கு சில எச்சரிக்கை
Page 1 of 1
கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்களுக்கு சில எச்சரிக்கை
contact_lense_001பிரிட்டனில் வசிக்கும் ஜாக்கி ஸ்டோன் என்ற 42 வயதுப் பெண்மணி பார்வைக் குறைபாட்டுக்காக கான்டாக்ட் லென்ஸ் பொருத்திக்கொண்டார்.
பிரிட்டனிலேயே இரண்டாவது பிரபலமான நிறுவனத்தின் தயாரிப்பைத்தான் அவர் பயன்படுத்தி இருக்கிறார். லென்ஸை அணிந்த மறுதினமே பார்வை மங்கலானதை அவர் உணர்ந்துள்ளார்.
இரண்டு நாட்கள் கழித்து வலி பொறுக்க முடியாமல் மருத்துவரிடம் சென்று விடயத்தைச் சொன்னபொழுது கண்களுக்கு சொட்டு மருந்து போட்டு வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார். ஆனால், எல்லை மீறிய வலியின் காரணமாக மீண்டும் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
வலியைக் குறைப்பதற்கான மருந்துகள் எதுவும் வேலை செய்யவில்லை. அவரது கண்ணில் ஃப்யூசாரியம்(fusarium) என்னும் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டு இருப்பதைக் கண்டுபிடித்தார்கள்.
அதற்குள் அவரது இடது கண்ணில் மூன்று படலங்களையும், 70 நரம்புகளையும் அந்தப் பூஞ்சை தின்று தீர்த்திருந்தது. மருத்துவமனையில் விழித்திரை மாற்று அறுவைசிகிச்சை உட்பட 22 அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், பலன் அளிக்கவில்லை.
17 வாரங்கள் அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற நேர்ந்தது. இருந்தும் அவரது இடது கண் பார்வை பறிபோனது. இந்தப் பூஞ்சைத் தொற்று, பார்வை நரம்புகள் மூலம் மூளையைத் தாக்கக்கூடிய அபாயம் இருக்கும் என்று மருத்துவர்கள் அஞ்சியதால் பாதிக்கப்பட்ட கண்ணையே அப்புறப்படுத்த வேண்டியதாயிற்று.
பூஞ்சைத் தொற்று ஏற்பட்டதற்குக் காரணம் அவர் கண்ணில் அணிந்திருந்த காண்டாக்ட் லென்ஸ்தான் என்று மருத்துவர்கள் உறுதி செய்தனர் அவர் தற்போது செயற்கைக் கண் பொருத்திக்கொண்டு இருக்கிறார்.
எனவே கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்களுக்கான சில எச்சரிக்கைகள்
# லென்ஸ்களை உரிய திரவத்தில்தான் சுத்தப்படுத்த வேண்டும். குழாய்த் தண்ணீரில் கழுவக் கூடாது. நீந்தும்போதோ, குளியல் தொட்டியில் குளிக்கும்போதோ, ஷவரில் நனையும்போதோ லென்ஸைக் கழற்றிவிடவும்.
# தொடர்ந்து கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தேவைப்படும்போது லென்ஸை மருத்துவரின் பரிந்துரைப்படி மாற்ற வேண்டும். கண்ணில் நீர் படும்படியான எந்தச் சூழலிலும் லென்ஸை அகற்றிவிடவும்.
# கண்ணில் லென்ஸைப் பொருத்துவதற்கு முன்னர் கைகளை நன்கு சோப் போட்டுக் கழுவவும். பிறகு சுத்தமாக ஈரம் போகத் துடைத்த பிறகே லென்ஸைத் தொடவும்.
# ஒவ்வொரு முறையும் லென்ஸைக் கழுவும் திரவம் புதிதாக இருக்கட்டும்.
# உப்பு நீரால் ஒருபோதும் லென்ஸைக் கழுவாதீர்கள்.
# லென்ஸைப் பாதுகாக்கும் குடுவையை உரிய திரவத்தில் முறையாகக் கழுவவும்.
# எட்டு மணி நேரத்துக்கு மேல் தொடர்ச்சியாக அணியக் கூடாது. இடையிடையே ஓய்வு அளிக்க வேண்டும். தூங்கும்போது லென்ஸைக் கழற்றிவிடவும்.
# பார்வை மங்கலானாலோ, வலி ஏற்பட்டாலோ, வீக்கம் அல்லது எரிச்சல் இருந்தாலோ, உடனடியாகக் கண் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.
# புகை மண்டிய இடங்களைத் தவிருங்கள்.
புதிதாக லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டியவை
# உரிய மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிறந்த நிறுவனத்தின் தரமான தயாரிப்பைப் பயன்படுத்த வேண்டும்.
# அணிவதற்கான பயிற்சியினைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
# முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று அணிய வேண்டும்.
# மின் விசிறியை அணைத்துவிட்டு அணிய வேண்டும். இல்லாவிட்டால் லென்ஸ் காற்றில் பறக்கும் வாய்ப்பு உண்டு.
# லென்ஸ் தவறி விழுந்தாலும் கீறல் ஏற்பட்டுவிடாதபடி கீழே ஒரு சுத்தமான துணி இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
# நகக் கீறல் லென்ஸில் ஏற்படாமல் இருக்க நகத்தை ஒட்ட நறுக்க வேண்டும்.
# கண்ணுக்குச் சொட்டு மருந்து போடும்போது லென்ஸைக் கழற்றிவிடவும்.
# லென்ஸ் அணிபவர்கள் கண்ணுக்கு மை போடக்கூடாது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கண்ணுக்கு மருந்தளிக்கும் கான்டாக்ட் லென்ஸ்
» கண்ணுக்கு மருந்தளிக்கும் கான்டாக்ட் லென்ஸ்
» இரத்தில் சர்க்கரை அளவை கண்டறிய கான்டாக்ட் லென்ஸ்
» வலி - உடல் தரும் எச்சரிக்கை மணி
» சர்க்கரையின் அளவை லென்ஸ் மூலம் அறியலாம்… காணொளி இணைப்பு
» கண்ணுக்கு மருந்தளிக்கும் கான்டாக்ட் லென்ஸ்
» இரத்தில் சர்க்கரை அளவை கண்டறிய கான்டாக்ட் லென்ஸ்
» வலி - உடல் தரும் எச்சரிக்கை மணி
» சர்க்கரையின் அளவை லென்ஸ் மூலம் அறியலாம்… காணொளி இணைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum