கண்ணுக்கு மருந்தளிக்கும் கான்டாக்ட் லென்ஸ்
Page 1 of 1
கண்ணுக்கு மருந்தளிக்கும் கான்டாக்ட் லென்ஸ்
நாகரீகம் பெருகி விட்ட இன்றைய கால கட்டத்தில் கண் பார்வை குறைபாடுகளுக்கு வெளிப்புறக் கண்ணாடி அணிவதற்குப் பதிலாக கான்டாக்ட் லென்ஸ் (Contact lens) உபயோகப்படுத்துவது அதிகரித்து வருகிறது.
கான்டாக்ட் லென்ஸ் அணிவதால், பார்வைக் குறைபாடுகளை மற்றவர்களுக்கு வெளிப்புறமாகத் தெரியாமல் மறைத்து விடலாம். கண்ணாடி அணிவதால், தங்களின் முக அழகு பாதிக்கும் என்று கருதும் பெண்கள் உள்ளிட்டோருக்கும் கான்டாக்ட் லென்ஸ் ஒரு வரப்பிரசாதமாகும்.
கான்டாக்ட் லென்ஸைப் பொருத்தவரை அவற்றைப் பராமரிப்பது மிகவும் அவசியம்.
தற்போது அலபாமாவில் உள்ள அபும் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரசாயனப் பொறியாளர் மார்க் பைமி என்பவர் கண்ணுக்கு மருந்து அளிக்கக்கூடிய புதிய கான்டாக்ட் லென்ஸை உருவாக்கியுள்ளார்.
சற்றே கடினமானது என்றாலும், மற்ற கான்டாக்ட் லென்ஸ்களைக் காட்டிலும் புதிய லென்ஸ் ஆனது, மருந்தினை மெதுவாக கண்ணிற்குள் செலுத்தும் திறன் கொண்டது என்று மார்க் கூறினார்.
லென்ஸில் உள்ள மருந்தானது கண்ணீரால் வெளியேற்றப்பட்டு விடக்கூடும். கண்ணிற்கு வெளியே சென்று விடவும் வாய்ப்புண்டு. ஆனால் புதிய வகை கான்டாக்ட் லென்ஸில் அதுபோன்ற வாய்ப்பில்லை என்கிறார் மார்க்.
அதற்கேற்ற வகையில் புதிய லென்ஸின் மருந்துகள் அடர்த்தியாக வைக்கப்பட்டிருப்பதால், மெதுவாக அது கண்ணிற்குள் செலுத்தப்படும் என்றார் அவர்.
லென்ஸின் அணு வடிவமானது உடலுக்குள் மருந்தினை ஏற்கத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கண்ணுக்கு மருந்தளிக்கும் கான்டாக்ட் லென்ஸ்
» கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்களுக்கு சில எச்சரிக்கை
» இரத்தில் சர்க்கரை அளவை கண்டறிய கான்டாக்ட் லென்ஸ்
» இரத்தில் சர்க்கரை அளவை கண்டறிய கான்டாக்ட் லென்ஸ்
» சர்க்கரையின் அளவை லென்ஸ் மூலம் அறியலாம்… காணொளி இணைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum