உலக அளவில் அதிகரிக்கும் பாதுகாப்பற்ற `உறவு'
Page 1 of 1

உலக நாடுகள் பலவற்றில் சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில், அதிக அளவிலான இளம் வயதினர் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவு வைத்துக்கொள்வது தெரிய வந்துள்ளது. புதிய நபருடன் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொள்ளும் இளவயதினரின் எண்ணிக்கை, கடந்த 3 ஆண்டுகளில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதில் பிரான்சில் 2 மடங்கும், அமெரிக்காவில் 40 சதவீதமும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ள இளம்வயதினரும் கூட தகுந்த கருத்தடை மற்றும் பாதுகாப்பான உடலுறவு குறித்த தகுந்த அறிவு இல்லாமல் உள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் 50 சதவீதம் இளம் வயதினர் பள்ளிகளின் மூலம் செக்ஸ் கல்வியை பெற்றுள்ளனர். தென் அமெரிக்கா, அமெரிக்கா மற்றும் ஆசியா பசிபிக் பகுதிகளில் 30 சதவீத மக்களே செக்ஸ் கல்வியை பெற்றுள்ளனர். ஆனால் அவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பல நபர்களுடன் பாதுகாப்பற்ற முறையில் செக்ஸ் உறவு கொள்ளும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வில் உலகிலேயே தாய்லாந்தில் 62 சதவீதம் மக்களும், அதற்கு அடுத்தப்படியாக சீனாவில் 58 சதவீத பேரும் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவை விரும்புவதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை 32 சதவீதம் இளம் வயதினர் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆய்வில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, `உலகளவில் பாதுகாப்பற்ற உறவுகளால் இளம் வயதினர் இடையே தேவையற்ற கர்ப்பமடைவது அதிகரித்து வருகிறது. கருத்தடை முறைகளை குறித்து கேட்பதற்கு சில நாடுகளில் மக்கள் வெட்கப்படுவதால், அது குறித்த சரியான அறிவு இல்லை.
மேலும், உலக அளவில் 15 சதவீதம் பேருக்கு கருத்தடுப்பு முறைகளில் விருப்பமே இல்லை' என்றனர். எகிப்தில் உள்ள 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட இளம் வயதினர் உறவு கொண்ட பின்பு, குளித்தால் கருத்தரிக்க மாட்டார்கள் என்று எண்ணுவதாக மேலும் குறிப்பிட்ட அவர்கள், இந்தியா மற்றும் தாய்லாந்தில் உள்ள 35 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் பெண்களின் மாதவிடாய் காலத்தில் உறவு கொள்வது மிகவும் பாதுகாப்பானது என கருதுவதாகவும் தெரிவித்தனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நடைமுறையில் பெண்களின் பாதுகாப்பற்ற நிலை
» மூளை பெரியதாக உள்ள நபர்களுக்கு அதிக அளவில் நண்பர்கள் இருப்பார்கள் ஆய்வில் தகவல்.
» ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

» உறவு பேணலாமா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum