கேது தசை கேது தசை
Page 1 of 1
கேது தசை கேது தசை
ராகுவைப் போலவே கேதுவும் நிழல் கிரகம் தான். ராகுவைப் போலவே ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டுகள் தங்கியிருப்பார் கேது. ராகுவைப் போலவே இவரும் பின்நோக்கிச் செல்பவர். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் போது அந்த ராசிக்கான பலன்களை 3 மாதங்களுக்கு முன்கூட்டியே காட்டி விடுவார்.
கேதுவின் ஆட்சிக்கு உட்பட்டது மீனராசி. கும்ப ராசியில் உச்சம் பெறுவார். சிம்ம ராசியில் நீச்சம் அடைவார். மற்ற கிரகங்களைப் போலவே இவர் 7 ஆம் பார்வை பார்ப்பார். அதாவது தான் நிற்கும் ராசியில் இருந்தபடியே 7வது ராசியைப் பார்ப்பார். பொதுவாக, செவ்வாய் தரும் பலன்களை இவரும் தருவார். எனவே, 4, 7, 8 பார்வை செவ்வாயைப் போலவே கேதுவுக்கும் உண்டு. கேது தசை 7 ஆண்டுகள் நடக்கும்.
கேதுவின் பலன்கள்......
ஒருவர் ராசியில் கேது நிற்கும் சமயம் நன்றாக இருக்காது. முயற்சிகள் தடைபடும், வீண்பகை உண்டாகும். உடல் ஆரோக்கியம் கெடும். ராசிக்கு 3-இல் கேது வரும் சமயம் கவலைகளும், கஷ்டங்களும் இருக்கும். பணத்தைக் கெட்டதற்காகவே செலவு செய்வான். ஆனால், ராசிக்கு 3-இல் வரும்போது நல்ல நிலைமை உருவாகும்.
எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். மன அமைதியும் உடல் ஆரோக்கியமும் உண்டாகும். ஆனால், ராசிக்கு 4-இல் வரும் சமயம் அப்படியே எதிர் மாறாக நடக்கும். தீயோர் சகவாசத்தினால் பொருள் சேர்ப்பும், இழப்பும் இருக்கும். பணம் கையில் புழங்கும். ராசிக்கு 4-இல் வரும்போதும் அப்படித்தான்.
பகை, நோய், துயரம் எல்லாம் இருக்கும். ராசிக்கு 6-இல் வரும் சமயம் எல்லா கஷ்டங்களும் விலகும். பொருள் வசதி பெருகும். ஆரோக்கியம், ஆனந்தம் நிலவும். கேது 7-இல் வரும்போது காரிய தாமதம், குடும்பத்தில் சச்சரவு, நோய், கவலைகள் இருக்கும்.
8-க்கு வரும்போது மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 9-க்கு வரும்போது தொல்லைகள் இருக்கலாம். ஆனால், 10-க்கு வரும்போது நல்ல பலன்கள் உண்டாகத் தொடங்கும். உடல் நலம் நன்றாக இருக்கும். ஆனால் கேது, ராசிக்கு 12-இல் வரும்போது நண்பர்களால் பொருள் விரயம் எல்லாம் இருக்கும்.
கேது தோஷ பரிகாரம்..........
கேது பகவானுக்கு ஏதாவது ஒரு கிழமையில் அபிஷேகம் செய்விக்கவும். பலவர்ண ஆடை, வைடூரிய மணி, செவ்வல்லி மலர் ஆகியவற்றால் அலங்காரம் செய்யவும். கேது மந்திரங்களைச் சொல்லி தர்ப்பையினால் யாகத்தீயை எழுப்பி, கொள்ளுத் தானியம், கொள்ளுப் பொடி ஆகியவற்றால் ஆகுதி பண்ணவும். தீபாராதனை செய்யவும். கற்பூர ஆரத்தி எடுக்கவும். ராகம் தெரிந்தவர்கள் சண்முகப் பிரியா ராகத்தில் கேது கீர்த்தனைகளைப் பாடி வழிபடவும்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum