ராகு, கேது ராகு, கேது
Page 1 of 1
ராகு, கேது ராகு, கேது
ராகு, கேது :
இவர்களுக்கு சொந்த வீடென்று எதுவும் கிடையாது. இவர்கள் எந்த வீட்டில் இருக்கிறார்களோ அந்த வீட்டுப் பலனையே கொடுப்பார்கள். யாருடன் சேர்ந்து இருக்கிறார்களோ அவருடைய பலனையே கொடுப்பார்கள். யாரால் பார்க்கப் படுகின்றனரோ அவருடைய பலனையே கொடுப்பார்கள். ஜெயிலுக்குக் காரகத்துவம் வகிப்பது ராகு தான். இவர்கள் இரண்டு பேரும் பாப கிரகங்கள். இவர்கள் எந்த வீட்டிலிருந்தால் என்ன பலனைக் கொடுப்பார்கள் எனப் பார்ப்போம்.
ராகு
1-ம் வீடு அல்லது லக்கினத்திலிருந்தால் : தழும்போ அல்லது மச்சமோதலையில் காணப் படும். நல்ல குணங்கள் குறைந்து காணப் படும். உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும்.
2-ம் வீட்டில் இருந்தால் பணத்தட்டுப் பாடு இருக்கும். சிலருக்கு மனைவி இரண்டு. ஏதாவது பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும்.
3-ம் வீட்டில் இருந்தால் தைரியசாலியாக இருப்பார். இளைய சகோதரத்துடன் ஏதாவது பிரச்சனை இருக்கும்.
4-ம் வீட்டில் இருந்தால் தாயாருக்கு உகந்தது அல்ல: வீட்டு விவகாரங்களில் அதிக அக்கரை காட்ட மாட்டார்.
5-ம் வீட்டில் இருந்தால் இதை சர்ப்ப தோஷம் என்பார்கள். குழந்தைப் பேருக்கு இடைஞ்சல் உண்டாகும். பூர்வ புண்ணிய மற்றவர்.
6-ம் வீட்டில் இருந்தால் எதிரிகளை வெற்றி கொள்வர். தாய் மாமனுக்கு ஆகாது.
7-ம் வீட்டில் இருந்தால் சிலருக்கு மனைவியர் இரண்டு. மனைவி வியாதி உள்ளவளாக இருப்பாள்.
8-ம் வீட்டில் இருந்தால் எப்போதும் கவலையுடன் இருப்பார். கஷ்டங்கள் இருந்து வரும்.
9-ம் வீட்டில் இருந்தால் தகப்பனாருக்கு ஆகாது. செய்யும் தருமங்களுக்குப் பெயர் இருக்காது. உயர் படிப்பில் தடை வரும்.
10-ம் வீட்டில் இருந்தால் தொழிலில் பல தொந்தரவு இருந்து வரும்.
11-ம் வீட்டில் இருந்தால் எத்தகைய குறையும் இல்லை. நல்லதே நடந்து வரும்.
12-ம் வீட்டில் இருந்தால் செலவுகள் இருந்து வரும். சிலருக்கு ஜெயில் தண்டனை கிடைக்கும்.
கேது
1-ம் வீடு முகத்தில் மச்சம் அல்லது வடு உண்டாகும். நல்ல கிரகங்களின் சேர்க்கை இருந்தால் நன்மை உண்டாகும்.
2-ம் வீடு அவர் நாக்கே அவருக்கு எதிரி. எப்போதும் கவலைகள் இருக்கும். சிலருக்கு இரண்டு மனைவிகள்.
3-ம் வீடு தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருக்க மாட்டார். நவீன நாரதர் என்றும் கூறலாம். இளைய சகோதரத்துடன் பிணக்கு.
4-ம் வீடு நல்ல கிரகங்கங்கள் சேர்க்கை இருந்தால் 4-ம் வீடு குறிக்கின்ற ஆதிபத்தியங்கள் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் நன்மை இல்லை.
5-ம் வீடு இஷ்ட தெய்வம் வினாயகர். புத்திர தோஷம் உண்டு. நல்லவர் சேர்க்கையோ பார்வையோ இருந்தால் நல்லது செய்வர்.
6-ம் வீடு:-எதிரிகளை வெற்றி கொள்வர். போட்டிகளில் வெற்றி பெறுவர். எல்லோர் நடுவிலும் பெயர் பெற்று இருப்பர்.
7-ம் வீடு சிலருக்கு 2 மனைவிகள் உண்டு. நல்ல கிரக சேர்க்கை இருப்பின் ஒரு மனைவிதான் உண்டு. சோம்பேரித்தனமாய் இருப்பர். கெட்ட கிரக சேர்க்கை இருப்பின் மனைவியால் துன்பம்.
8-ம் வீடு துன்பங்கள் தொடரும். வியாதிகள் வரக்கூடும். சிலருக்குப் பெண்கள் சம்மந்தமான நோய் வரக்கூடும்.
9-ம் வீடு தகப்பனாருடன் நல்ல உறவு இருக்காது. தற்புகழ்ச்சி உள்ளவர். தெய்வ நம்பிக்கை குறைந்தவர். சுறுசுறுப்புக் குறைந்தவர்.
10-ம் வீடு நண்பர்கள், சொந்தக்காரர்கள் நடுவில் பெயருடனும் புகழுடனும் இருப்பர். நம்பிக்கைக்குறிய வேலைக்காரர்கள் இருப்பார்.
11-ம் வீடு பணப்புழக்கம் உள்ளவர். பணச்சேமிப்பு இருக்கும். சாகசக் காரியங்களில் ஈடுபடுவர்.
12-ம் வீடு பாப காரியங்களில் ஈடுபடுபவர். பிதுரார்ஜித சொத்துக்கள் போய்விடும். கண்பார்வையில் கோளாறு இருக்கும். பெயர் புகழை இழப்பர்.
மற்றவைகளை அடுத்த பாடத்தில் பார்ப்போம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சூரியன்: to ராகு-கேது:
» ராகு கேது
» ராகு தசை கேது தசை
» ராகு -கேது ராகு -கேது
» ராகு - கேது வழிபாடுகள்
» ராகு கேது
» ராகு தசை கேது தசை
» ராகு -கேது ராகு -கேது
» ராகு - கேது வழிபாடுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum