தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அருள் தரும் அய்யப்பன்

Go down

அருள் தரும் அய்யப்பன் Empty அருள் தரும் அய்யப்பன்

Post  amma Fri Jan 11, 2013 6:10 pm



பாற்கடல் அமுதம் கடைந்து அதை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணு பகிர்ந்தளித்த லீலையின் போது சிவபெருமான் ஆழ்ந்த யோகத்தில் இருந்ததால் சிவபெருமானால் அந்த மோகினி அவதாரத்தினை தரிசிக்க இயலாமல் போனது. பின்னர் யோகம் களைந்து எழுந்த பொழுது நடந்த திருவிளையாடல் களை அறிந்த சிவபெருமான் விஷ்ணுவின் அந்த மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டினார்.

அவ்வாறு சிவபெருமானுக்காக மோகினி மீண்டும் அவதரித்த பொழுது சிவனும் மோகினியும் ஒன்று சேர்ந்து பிறந்தவரே ஐயப்பன் என்பது ஒரு புராணம். இதன் காரணமாகவே ஐயப்பனுக்கு ஹரி (விஷ்ணு) ஹரன் (சிவன்) என்ற பெயரும் உண்டு. ஐயப்பன் மதங்களுக்கு அப்பாற்பட்ட கடவுளாக பாவிக்கப் படுகிறார்.

இன்றும் ஐயப்பனின் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் எருமேலியிலுள்ள முன்னாளில் கொள்ளைக்காரனாக இருந்து அய்யப்பனின் அருளால் திருந்தி அவரது நண்பராக மாறிய வாவரின் தர்காவிற்கு சென்ற பின்னரே ஐயப்பனை தரிசிக்கின்றனர். சாதாரண மனிதன் ஒருவன் அவன் செய்த கர்ம வினையிலிருந்து மீள வேண்டுமானால்.

அவன் முதலில் அலைபாயும் நிலையில் இருந்து விடுபட வேண்டும். அதற்கு விரதம், அனுஷ்டானம், ஆச்சாரம், தர்ம சிந்தனை, செயல்பாடுகள் வேண்டும். இவை இருந்தால் முக்தி கிடைக்கும். அது கிடைக்க ஒரே இறைவழிபாடு அய்யப்பனே! இந்து மதத்தில் சைவம், வைணவம் என்று பிரிந்து தனித்து வழிபாடு செய்து வருகிறார்கள்.

மகாவிஷ்ணு மாதாவாகவும், சிவன் பிதாவாகவும் இருந்து பிறந்தவன்தான் அய்யப்பன். ஒருவர் சபரிமலைக்கு மாலைபோடும்போது இல்லறத் துறவை மேற்கொள்கிறார். உடல், பொருள், ஆவி அனைத்தும் ஐயனுக்கே என்று அர்ப்பணிக்க வேண்டும். மாலை போட்ட பிறகு எல்லா அய்யப்பமார்களும் ஒன்றே. அங்கே ஆத்மா ஒன்றே.

வேறுபாடு கிடையாது. விருப்பு, வெறுப்பு கிடையாது. அய்யப்பனுக்காக மாலை போட்டதும், எல்லாவற்றையுமே தியாகம் செய்ய வேண்டும். நான், எனது என்ற பற்று இங்கே அறுபடுகிறது. அய்யப்பனுக்கு விரதம் முக்கியம். 48 நாட்கள் விரதம் இருந்து மலைக்குப் போக முடியாதவர்கள், 14 நாட்கள் விரதம் எடுத்து பக்கத்தில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி ஏற்று சென்று வணங்கி வரலாம்.

ஒருவன் பிரம்மச்சரிய வாழ்க்கை நடத்தும்போது பற்று போகிறது. கொடுக்கும்போது பற்றி போகிறது. வாங்கும்போது பற்று போகிறது. பற்றற்ற வாழ்க்கையே பரமனடி சேர்கின்ற வழியாகும். அனைத்து தோஷங்களுக்கும், ராகு தோஷத்திற்கும் அய்யப்பன் தரிசனம்தான் பரிகாரமாகும்.

பிறப்பில் எப்படி வேறுபாடு இல்லையோ இறப்பில் எப்படி வேறுபாடு இல்லையோ அப்படியே அய்யப்ப பக்தர்களிடம் உடையில் வேறுபாடு இல்லை. பாவத்தில், ரூபத்தில் வேறுபாடு இல்லாமல் வணங்கக் கூடிய ஒரே கடவுள் அய்யப்பன்தான்.

இத்தகைய மகிமை வாய்ந்த அய்யப்பனை மனம் உருக வழிபட்டால், அவர் நமக்கு நினைத்ததை எல்லாம் தருவார். இந்த பிறவியில் இடையூறு இல்லாமல் இருக்க அவர் நமக்கு பாதுகாவலராக இருப்பார்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum