பெண்களும் மனநலமும்
Page 1 of 1
பெண்களும் மனநலமும்
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'' இன்றைய வாழ்வில் மனநலம் என்பது இன்றியமையாதது ஆகும். உடலை நாம் எவ்வாறு பாதுகாக்கின்றோமோ அது போலவே நம் மனநலத்தையும் பாதுகாத்து கொள்ளுதல் அவசியமாகிறது. உலக நலவாழ்வு அமைப்பே (who) படி வரையறுக்கப்பட்டவை நல்வாழ்வு என்பது எப்போது ஒரு மனிதன் உடல் ரீதியில் மட்டுமல்லாது மனம், சமூகம் இவையனைத்திலும் எவ்வித பிரச்ச்னையின்றி நோயற்று வாழ்வதே ஆகும்.
மனநலம் என்பது ஒரு மனிதன் சக மனிதரிடம் சுமூக உறவுக் கொள்வதும் சமூக மாற்றத்திற்கு ஒன்றாய் கூடி பாடுபடுவதேயாகும். இத்தகைய மனநிலை கொண்டவனே மனநலம் கொண்டவனாவான். இன்றைய பெண்கள் பெரும்பாலம் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றார்கள். அதற்கு காரணம் என்னவென்றால் நமது வாழ்க்கை முறையும், உணவு முறையும்.
மனநலபாதிப்பு என்பது நமது மூளையில் ஏற்படும் இராசாயன மாற்றமே, இது மட்டுமல்லாமல் குடும்ப பிரச்சனைகள் பரம்பரை, சூழ்நிலைகள் கூட இந்த மனநிலை பாதிப்பை ஏற்படுத்தும். இன்றைய வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகளவில் மன உலைச்சலுக்கு ஆளாகின்றார்கள். குறிப்பாக சொல்லப்போனால் IT நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் பலர் இந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இதற்கு காரணம் சரியான தூக்கமின்மை, உணவு பழக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள், இயந்திர வாழ்க்கை, அடுத்தவர்களிடம் உணர்ச்சிகளை பகிர்ந்த கொள்ள முடியாத நிலைமை, நேரமின்மை இரவு நேரங்களில் வேலை பார்த்தல். ஆயிரக்கணக்கான உடல்நல பாதிப்புகள் போலவே நூற்றுக்கணக்கான மன நோய்களும் இருக்கின்றன.
குறிப்பாக மனச்சிதைவு (schizodhernis), மனஎழுச்சி நோய் (Mania), மனசோர்வு (Depression), திரும்ப திரும்ப செய்தல் (obession) அதிகப்படியான பயம் (Phobia). இரவில் தூக்கமின்மை, கணவன் மனைவி இருவருக்குள் ஏற்படும் சந்தேகங்கள், காதில் ஏதோ குரல் கேட்பது போன்ற உணர்வு, தனிமையில் பேசுதல், ஒரே சிந்தனையில் அமர்ந்து இருத்தல் அதிகப்படியாக அடுத்தவர்களின் மீது வெறுப்படைதல், அதிகப்படியான கோபம், அதிகமாக கெட்ட வார்த்தைகளை உபயோகப்படுத்துதல் இவையும் மனநோயின் பாதிப்புகளே.
இவை மட்டுமல்ல வேலைகளில் கவனக்குறைவு, தினசரி அன்றாட வேலைகளை கூட சரியாக செய்யாமல் இருத்தல், நம்பிக்கையற்ற தன்மை, உதவியற்ற தன்மை, இவைகளும் ஒருவிதமான பாதிப்புகளே. கைகளில் ஏதோ இருப்பது போல் நினைத்துக் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்தல், அடுப்பை அணைத்து விட்டோமா? பூட்டு பூட்டி இருக்கிறதா போன்ற செயல்களை தொடர்ந்து பல முறை சரிபார்த்துக் கொண்டு இருத்தல், வீணாக குளியறையில் நின்று நேரத்தை செலவழித்தல் இவைகளும் மனநோய்களின் அறிகுறிகளே.
பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதனால் அவர்களின் மனநிலை பாதிப்படைகின்றது. இந்த நவீன காலத்தில் படித்தவர்கள் கூட மனநல மருத்துவர்களிடம் செல்ல பயப்படுகிறார்கள். ஆனால் இதுவும் சர்க்கரை வியாதியைப் போன்றே குணப்படுத்தக் கூடிய ஒரு நோயாகும்.
இந்த நோய்க்கும் மனநல மருத்துவத்தில் தீர்வு உண்டு. தகுந்த மருந்தினை உட்கொள்ளுதல் மூலம் தீர்வு காணமுடியும். ஒருசிலர் மருத்துவரிடம் செல்லாமல், இது செய்வினை காரணமாக இருக்கலாம் என்று கோயில், குளங்களை சுற்றி வருகின்றனர். இதுமட்டுமல்ல பேய், பிசாசு பிடித்து விட்டது என்று வேப்பிலை அடிப்பது, காலில் சூடு வைப்பது, மந்திரவாதியை வைத்து பேய் ஓட்டுவது, சாட்டையால் அடிப்பது போன்ற தவறான மூட நம்பிக்கையை செய்து வருகின்றனர்.
இதுமட்டுமல்ல திருமணம் செய்து வைத்தால் சரியாகி விடும் என்பதெல்லாம் கூட தவறான அணுகு முறையாகும். சில பெண்கள் தங்கள் உடல்நிலையில் அடிக்கடி பிரச்சினை ஏற்படுவதாக கூறுவார்கள். உதாரணமாக அடிக்கடி தலைவலி, நெஞ்சுவலி, மயக்கம் வருதல், நெஞ்சு எரிச்சல், கண் சரியாக தெரியவில்லை என பல மருத்துவர்களை அணுகி பல சிகிச்சை முறையை கையாளுகிறார்கள் அதுவும் ஒருவிதமான மனநிலை பாதிப்பே.
அதுமட்டுமில்லாமல் சில பெண்கள் காதல் தோல்வியால் தற்கொலை முயற்சி செய்வது (Suicide), கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்படுதல், கடன் தொல்லை, தனிமை இது போன்று சூழ்நிலைகளால் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். அதுவும் ஒருவிதமான மனநல பாதிப்பின் அறிகுறிகளே. சில வயதான பெண்கள் (Dementia) ஞாபக மறதியால் பாதிக்கப்படுகிறார்கள்.
நேரம், நாள், இடம் தெரியாமை பொருட்களை இடம் மாற்றி வைத்தல், 65 வயதிற்கு மேல் 5% பெண்களும், 80 வயதிற்கு மேல் 20% பெண்களும் இதனால் பாதிப்படைகின்றார்கள். மனநல மருத்துவத்தின் மூலம் தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டு நலமாக வாழ முடியும். தங்கள் பணிகளையும் சரியாக செய்ய முடியும்.
இன்றும் பல பெண்கள் ஆரம்பத்திலேயே தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டு தங்கள் பணிகளை சரிவர செய்து வருகின்றனர். மூளை வளர்ச்சி குறைந்த பெண்களும் சமுதாயத்தில் வாழ வழிகள் உள்ளன. அவர்களுக்கு தகுந்த பயிற்சி யினை கொடுப்பதன் மூலம் அவர்களே அவர்களின் (Independence) வேலைகளை செய்து கொள்ள முடியும்.
மனநல மருத்துவம் என்பது வெறும் மாத்திரையை மட்டும் கொடுத்து தூங்க வைப்பது அல்ல. மனநல வாழ்வில் மறுவாழ்வும் உண்டு மருந்து மட்டும் இல்லாமல் தகுந்த பயிற்சி பெற்ற செயல்முறை மருத்துவர்கள் சமூக நல பணியாளர்கள் மனநல நிபுணர்கள் தங்கள் பயிற்சிகளை அளித்து சமுதாயத்தில் வாழ வழி வகுக்கின்றனர்.
உதாரணமாக தொழிற்கல்வி, ஒருங்கிணைந்த சிகிச்சை முறை, கணிணி பயிற்சி, விளையாட்டு முறை, தன்முனைப்பு பயிற்சி, உணவு பழக்க வழக்கமுறை (ADL) அன்றாட பழக்க வழக்க முறைகள் போன்றவைகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. குடும்ப ஆலோசனைகள் மூலமாகவும், தனி ஆலோசனை மூலமாகவும், சமூக பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்தி வாழ வழி வகுக்கப்படுகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» யுத்தமும், பெண்களும்...........
» பருவப் பெண்களும், `பாய்பிரண்ட்' தொல்லைகளும்!
» பெண்களும், மன அழுத்தமும்....
» பெண்களும் பாய்பிரண்ட் பிரச்சனைகளும்!
» பெண்களும் அவர்களின் ஆண் தோழர்களும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum