உணவுக்கு உயிர் கொடுக்கும் கண்கள்!
Page 1 of 1
உணவுக்கு உயிர் கொடுக்கும் கண்கள்!
உண்பது ஒரு கடமை அல்ல... அனுபவம்!’ என்றொரு பிரபல வாசகம் உண்டு. சமைப்பதில் தொடங்கி, சாப்பிடுகிற வரை அணு அணுவாக ரசிக்கப்பட வேண்டிய விஷயம் சாப்பாடு! உணவு ஒருவரை ஈர்க்க இரண்டு விஷயங்கள் முக்கியம். ஒன்று மணம்; இன்னொன்று அதன் அழகு! நெருங்கினால் மட்டுமே சாத்தியம், மணத்தை உணர்வது. நெருங்காமலே உணவை நேசிக்க வைக்கிற விஷயம் அதன் அழகு. உணவை அழகாகக் காட்டுவதில் ‘ஃபுட் போட்டோகிராபி’ எனப்படுகிற புகைப்படக்கலைக்குத் தனியிடம் உண்டு.
வெளிநாடுகளில் மிகப்பிரபலமான இந்தக் கலை, நம்மூருக்குப் புதுசு. புகைப்படக்கலையிலேயே மிகவும் கஷ்டமான பிரிவான இதில் விரல் விட்டு எண்ணக்கூடிய கலைஞர்களே ஈடுபடுகிறார்கள். அவர்களில் கவனிக்கத்தக்க இடத்தில் இருக்கிறார் கே.எல்.ராஜா பொன்சிங். இவர், ‘ஆம்பிஷன்ஸ் ஃபார் போட்டோகிராபி’ என்கிற புகைப்படக்கலை பயிற்றுவிக்கும் நிறுவனமும் நடத்துகிறார். தமிழகத்தின் முன்னணி நட்சத்திர ஓட்டல்கள், மசாலா பொடி மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்களின் ஆஸ்தான புகைப்படக்கலைஞர் இவர்!
வருஷங்களுக்கு முன்னாடி, அமராவதி குரூப் ஆஃப் ஹோட்டல்ஸுக்கு பண்ணினதுதான் ஃபுட் போட்டோகிராபில என்னோட முதல் அசைன்மென்ட். அப்ப புரிபடாத சவால்களும் சாதுர்யங்களும் போகப்போக கைவந்ததோட, ஒரு கட்டத்துல இந்தப் பிரிவின் மேல ஒருவித காதலையே உண்டாக்கிடுச்சு. இயற்கையை ரசிக்கிறவனாலதான் அது சம்பந்தப்பட்ட படங்களை எடுக்க முடியும். விலங்குகளையும் வனங்களையும் நேசிக்கிறவனாலதான் வைல்ட் லைஃப் போட்டோகிராபி பண்ண முடியும். அந்த மாதிரி சாப்பாட்டை ருசிக்கவும், அதைவிட அதிகமா ரசிக்கவும் தெரிஞ்சாதான் அதைப் படம் எடுக்க முடியும்’’ என்கிறார் ராஜா பொன்சிங்.
‘‘ஒரு மசாலா பொடி பாக்கெட்டுக்கான படமா இருக்கலாம். அத்தனை சின்ன பாக்கெட்ல, அதைவிடக் குட்டியா ஒரு போட்டோ... ஆனாலும் அந்த படம், அந்தப் பொருளை வாங்கத் தூண்டற வகைல இருக்கணும். துல்லியமான விஷயங்கள்கூட படத்துல பளிச்னு தெரியணும்னா பேஸ் ஒன் என்ற ஹை எண்ட் டிஜிட்டல் சென்சார் உள்ள மீடியம் ஃபார்மேட் கேமராதான் சரி. இருக்கிற லைட்டை வச்சு, இருக்கிற இடத்துல எடுக்கிறதெல்லாம் இதுல சரிவராது. ஒண்ணு சமையலறைக்குப் பக்கத்துல போட்டோ ஷூட் பண்ணணும். இல்லைனா, ஸ்டூடியோவுக்குள்ள ஒரு கிச்சன் இருக்கணும்’’ என்றபடியே அதற்கான அவசியத்தையும் புரிய வைக்கிறார்.
‘‘சாப்பாடுங்கிறது சாப்பிட மட்டுமில்லாம, போட்டோவுக்கும் ஃப்ரெஷ்ஷா, சூடா இருந்தாதான் நல்லது. எப்பேர்ப்பட்ட அயிட்டமும் சமைச்ச சில நொடிகள்லயே அழகை இழந்துடும். இருக்கிறதுலயே படமெடுக்கக் கஷ்டமான அயிட்டங்கள்னா இட்லி, இடியாப்பம், ஆப்பம்னுதான் சொல்லணும். காரணம், அதோட வெண்மை. பூரி, தோசை, பஜ்ஜி எதுவானாலும் ஃப்ரெஷ்ஷா சமைச்சு, உடனே படம் எடுக்கணும். அளவும் வடிவமும் ஒரே மாதிரி இருக்கணும். 2 பூரியை படம் எடுக்கணும்னா, கிட்டத்தட்ட 10, 12 பூரி தயாரா இருக்கணும். ஆங்கிள் எல்லாம் பார்த்து, டெஸ்ட் ஷூட் பண்ணி, எல்லாம் ஓ.கே&னு தோணறப்ப, ஏற்கனவே வச்சதை எடுத்துட்டு, ஃப்ரெஷ் அயிட்டத்தை வச்சு ஷூட் பண்ணிடணும்.
அந்த அயிட்டம் படத்துக்கு அழகா இருந்தா மட்டும் போதும். சுவை முக்கியமில்லைங்கிறதால, சிலதை பச்சையா வச்சும், சிலதை அரை வேக்காடு, கால் வேக்காடு சமைச்சும் வைச்சாதான் போட்டோல தத்ரூபமா இருக்கும்’’ சுவாரசியம் கூட்டுகிற ராஜா பொன்சிங், போட்டோக்களில் கண்களைப் பறிக்கிற உணவுகளின் பின்னணியில் என்ன வித்தைகள் ஒளிந்திருக்கின்றன என்றும் விளக்குகிறார்.
‘‘பழமோ, காயோ அப்ப பறிச்சது மாதிரி தெரிய, நீர்த்திவலைதான் அடையாளம். வெறுந்தண்ணீரைத் தெளிச்சா, வழிஞ்சிடும். கிளிசரினை பிரஷ்ல தொட்டு, பழம், காய் மேல துளித்துளியா வைப்போம். அது உருண்டு ஓடாம, அப்படியே நிக்கும். அப்புறம் ஆவி பறக்கிற மாதிரி சில உணவுகளை படம் எடுக்க வேண்டியிருக்கும்.
அடுப்பங்கரைலேர்ந்து கொண்டு வந்து படம் எடுக்கிறதுக்குள்ளயே ஆவி மாயமாயிடுமே... ஊதுவத்தியையோ, சாம்பிராணியையோ கொளுத்தி, தெரியாத இடத்துல வச்சுப் புகைய விட்டோ, ட்ரை ஐஸ் பயன்படுத்தியோ எடுப்போம். ஜூஸ் டம்ளர்ல ஐஸ் கட்டிகள் மிதக்கிற மாதிரி வேணும்னா, பிளாஸ்டிக்ல கிடைக்கிற செயற்கை ஐஸ்கட்டிகளை வாங்கிப் போட்ருவோம். இன்னும் இப்படி நிறைய...’’ ராஜா பொன்சிங்கின் விவரிப்பில் நேரடியாக ஒரு போட்டோ ஷூட்டே பார்த்த உணர்வு!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உடல் ஆரோக்கியத்தை காட்டிக் கொடுக்கும் கண்கள்!
» கண்கள் இரண்டால்... கண்கள் இரண்டால்... பார்வை குறைபாடு; விழிப்புணர்வு அவசியம்
» ஜீரணமான உணவுக்கு என்ன நேர்கிறது?
» ஜீரணமான உணவுக்கு என்ன நேர்கிறது?
» உண்ணும் உணவுக்கு என்ன நேர்கிறது?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum