தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கறிவேப்பிலை

Go down

கறிவேப்பிலை                       Empty கறிவேப்பிலை

Post  ishwarya Wed May 08, 2013 5:11 pm

கறிவேப்பிலை என்று நாம் குறிப்பிடுகிறோம். இது சமையலில் மணமூட்டும் இலையாக பயன்படுகிறது. இலைகளே அதிக மருத்துவப் பயன் கொண்டவை.லேசான காரச் சுவையும் வெப்பத்தன்மையும் கொண்டவை.மருந்தாகச் சாப்பிட்டுவர, பசியைத் தூண்டும்.உடலை வலுவாக்கும்.குடல் வாயுவை வெளியேற்றும்.

கண் பார்வை தெளிவடைய :

வேண்டிய அளவு கறிவேப்பிலையை நெய்யில் இளவறுப்பாக வறுத்து போடி செய்து கொள்ள வேண்டும்.ஒரு தேக்கரண்டி தூளை சூடான சாதத்துடன் சேர்த்து கொஞ்சம் உப்பு, நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவடைய வாய்ப்புண்டு.

மலச்சிக்கல் தீர:

கறிவேப்பிலை இலைகளுடன் சிறிதளவு இஞ்சி, மிளகு,சீரகம்,பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து,வெயிலில் கைய வைக்க வேடும்.பின்பு இடித்து தூள் செய்து பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டு இரவு உணவின் போது அரை தேக்கரண்டி அளவு தூளை பிசைந்து சாப்பிட வேண்டும்.

கறிவேப்பிலைத் துவையல்:

வாந்தி,குமட்டல்,சீதபேதி போன்றவற்றுக்கு, கறிவேப்பிலை,கொஞ்சம் மிளகாய் ஆகியவற்றை நெய்யில் வதக்கி கொஞ்சம் புளி உப்பு சேர்த்து அரைத்துதுவில் செய்ய வேண்டும்.இதனை சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum