அரி உருண்டை
Page 1 of 1
அரி உருண்டை
தரமான அரிசி எது? வெள்ளை வெளேர் அரிசியா? அது வெறும் சக்கை. அரிசியின் மேல் ஒட்டியிருக்கும் மேற்தோலில்தான் மாவுச்சத்து, வைட்டமின்கள், புரதம், இரும்பு, மக்னீசியம் எல்லாம் ஒட்டியிருக்கிறது. வேலை மெனக்கெட்டு மேற்தோலை தீட்டி எடுத்துவிட்டு வெறும் வெள்ளைச் சக்கையை தின்று வருகிறோம். அதனால்தான், மூட்டுவலியில் இருந்து நீரிழிவு வரை எல்லா நோய்களும் உடலில் உட்கார்ந்து கொள்கிறது. உலகத்தில் சத்துக்குறைவால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளில் ஒன்று இந்தியக் குழந்தை.
இங்குள்ள கர்ப்பிணிகளில் 60 சதவிகிதத்தினருக்கு ரத்தசோகை பாதிப்பு. இதற்கெல்லாம் காரணம், அன்றாடம் சாப்பிடும் சத்துகள் அகற்றப்பட்ட வெள்ளைச் சக்கைதான். அந்தக்காலத்தில், நீரிழிவு, ரத்தசோகையெல்லாம் ஆயிரத்தில் ஒருவருக்கு வந்தால் பெரிது. அப்போது உரல், உலக்கை இல்லாத வீடுகளே இருக்காது. நெல்லை அவித்து, உலர்த்தி, உரலில் இடித்து, உமியை அகற்றிவிட்டு அரிசியெடுத்துச் சமைப்பார்கள். 90 - 100 வயதெல்லாம் வாழ்ந்ததன் ரகசியம் இதுதான். இன்று, இந்திய சராசரி ஆயுள் 60 வயதுதான். 40 ஆண்டுகால வாழ்க்கையை உணவுப்பழக்கம் தின்றுவிட்டது.
உலகத்தில் வேறெங்குமே இல்லாத வகையில் நம்மிடம் 10 ஆயிரத்துக்கும் அதிக பாரம்பரிய அரிசி ரகங்கள் இருந்தன. கொட்டாரச்சம்பா, நவரா, மாப்பிள்ளைச்சம்பா, வெள்ளைச் சித்திரக்கார், வெள்ளைக்கார் எல்லாம் ஆறடி, ஏழடி வளர்ந்து நிற்கும். ஒவ்வொரு அரிசியும் ஒவ்வொரு நோய்க்கு மருந்து. உடல் சோர்ந்து கிடப்பவருக்கு தூயமல்லியில் சமைத்துப் போட்டால் எழுந்து நடக்கத் தொடங்கி விடுவாராம். இடுப்பு வலியெடுத்தவர்கள் இலுப்பைப்பூ சம்பா சாப்பிட்டால் வலி மறைந்துவிடுமாம். மூட்டு வலி, தொண்டைவலி இருந்தால் தவிட்டு லட்டு.
என்னென்ன தேவை?
புழுங்கல் அரிசி - 1 கப்,
வெல்லம் - 300 கிராம்,
தேங்காய் - 1,
ஏலக்காய் - 5 கிராம்.
எப்படிச் செய்வது?
வாணலியில் அரிசியைக் கொட்டி வறுத்துக் கொள்ளுங்கள். நன்கு பொரிந்த அரிசியில், ஏலக்காயைச் சேர்த்து ரவை பதத்துக்கு மிக்சியில் அரைத்துக் கொள்ளுங்கள். தேங்காயைத் துருவி பூவாக்கிக் கொள்ளுங்கள். வெல்லத்தை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சுங்கள். அடியில் தங்கும் தூசிகளை அகற்றிவிட்டு மாவை சிறிது சிறிதாகக் கொட்டி கட்டிபடாமல் கிளறுங்கள். மாவும் பாகும் கலந்து வெந்து வரும்போது தேங்காய்த் துருவலைக் கொட்டி கிளறி இறக்குங்கள். மிதமான சூட்டில் சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள். அரி உருண்டை ரெடி!
சளி இருந்தால் தடுமங்கஞ்சி. அசதிக்கு அம்மியில் அரைத்த அரிசிப்பொடி மாவு, மூலத்தொல்லையா, அரிசிப்பிரண்டை துவையல், இருமலுக்கு அரிசிப்பால் கஞ்சி... எல்லா மருந்துகளும் அப்போது அரிசிப் பானையிலேயே இருந்தன. ஏழெட்டுப் பிள்ளைகளைப் பெற்றுவிட்டு கம்பீரமாக நடந்தார்கள் பெண்கள். காரணம், உணவுதான்..! கருவுற்ற பெண் கொஞ்சம் வலுவிழந்து நடந்தால் உடனடியாக தவிட்டு உருண்டை பிடித்துக் கொடுப்பார்கள். அரிசிமாவில், வெல்லம் மஞ்சள் சேர்த்து லட்டுப் பிடித்துக் கொடுப்பார்கள். 8 மாதம் வரைக்கும் கர்ப்பிணிகள் குனிந்து நிமிர்ந்து இயல்பான வேலைகளைச் செய்வார்கள்.
பசிதான் மனிதனை நகர்த்துகிறது. எல்லா இயக்கங்களும் உணவுக்கானதாகவே இருக்கின்றன. நல்ல உணவு களைச் சாப்பிடுவதில் என்ன பிரச்னை? அந்த விஷயத்தில் கேரளா நமக்கு வழிகாட்டுகிறது. கேரளாவில் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்கள் அதி உன்னதமான முயற்சியில் இறங்கியிருக்கின்றன. அக்காலம் தொட்டு நடைமுறையில் இருந்த பாரம்பரிய நெல்ரகங்களை மீட்டு, இக்கால சாகுபடி முறைகளுக்குப் பொருத்தி, அதிக விளைச்சல் தரக்கூடிய ரகங்களின் விதைகளை விவசாயிகளுக்கு வழங்குகின்றன. அப்படி விளையும் நெல்லை அரிசியாக்கி உலகெங்கும் ஏற்றுமதி செய்கிறார்கள் கேரள விவசாயிகள்.
அரி உருண்டை, அற்புதமான பதார்த்தம். பேறுகாலத்தில் பெண்களுக்குச் செய்து தருகிறார்கள். சத்து நிறைந்தது. பூப்படைந்த பெண்களுக்கு அரி உருண்டை செய்து தருவதும் மரபாக இருக்கிறது. தெம்பு அதிகரிக்கும். மிகச்சுவையான இந்த அரி உருண்டையை குழந்தைகள் அதிகம் விரும்புவார்கள். கேரளாவில் எல்லா இனிப்பகங்களிலும் அரி உருண்டை கிடைக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum