சிறுகீரை உருண்டை கறி
Page 1 of 1
சிறுகீரை உருண்டை கறி
தேவையான பொருள்கள்:
சிறுகீரை – 1 கட்டு
கடலை பருப்பு = 100 கிராம்
துவரம் பருப்பு = 100 கிராம்
பச்சரிசி = 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் = 2
மிளகாய் பொடி = கால் ஸ்பூன்
இஞ்சி = காலங்குலம்
சீரகம் = அரை ஸ்பூன்
தேங்காய் = அரை மூடி
மிளகாய் வற்றல் = 2
பூண்டு = 10 பல்
சின்ன வெங்காயம் = 50 கிராம்
எண்ணெய் = 3 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
சிறுகீரையை ஆய்ந்து நறுக்கிக் கொள்ளவும். கடலை பருப்பு, துவரம் பருப்பு, பச்சரிசி இவைகளை ஊற வைத்து இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
இதனோடு ஆய்ந்த கீரை, சீரகம், உப்பு சேர்த்து உருண்டையாக உருட்டி இட்லி தட்டில் வைத்து வேக விடவும் எல்லா மாவையும் உருண்டைகளாக்கி வேக விடவும்.
தேங்காயை துருவி மிளகாய் வற்றலோடு அரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம், பூண்டு பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் வெங்காயத்தையும், பூண்டையும், கறிவேப்பிலையோடு சேர்த்து வதக்கவும். அடுத்து தேங்காய் அரைத்ததைப் போட்டு உப்பு சேர்த்துக் கிளறவும்.
இதை நன்றாக வதக்கி நீர் பதம் வற்றி வந்ததும் வெந்த உருண்டைகளைப் போட்டு லேசாக வதக்கி கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.
சுவையான சிறுகீரை உருண்டை கறி தயார். இதை ரைஸ், சப்பாத்தியோடு பரிமாறலாம்.
மருத்துவக் குணங்கள்:
சிறுக்கீரையில் புரதம், மாவுப்பொருள், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் கலோரிகள் உள்ளது. இதனால் மலச்சிக்கல் குறையும். கண் எரிச்சல், கண் கட்டி, கண் காசம் போன்றவை குறையும். மலேரியா, டைஃபாய்டு, நீரிழிவு, உடல் பருமன், உடல் வீக்கம், உடல் சூடு போன்ற நோய்கள் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum