ஆபத்து ஏற்பட்டால்
Page 1 of 1
ஆபத்து ஏற்பட்டால்
*மின்சாரக் கசிவினால் உண்டான தீயை அணைக்க தண்ணீரை ஊற்றக் கூடாது. மணலைக் கொட்ட வேண்டும்.யாரைத் தேடியும் எதற்காகவும் ஒருபோதும் தீ எரிகிற பகுதிக்கு உள்ளே செல்ல வேண்டாம்.
*தீ விபத்து ஏற்பட்டால் யார் பேச்சையும் கேட்காமல், யாருக்காகவும் காத்திருக்காமல் முதலில் வெளியே ஓடி வாருங்கள். முதியவர்கள், ஊனமுற்றவர்கள், குழந்தைகள் தீயில் மாட்டிக்கொண்டிருந்தால் பெரியவர்களிடம் தகவல் சொல்லுங்கள்.
*தீப்பற்றி எரியும்போது, ஸ்கூல் பேக், பொம்மை, புது டிரஸ் எதையும் எடுக்கக் கூடாது. பொருள் போனால் போகிறது, உயிர்தான் முக்கியம். எந்த இக்கட்டிலிருந்தும் முதலில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
*தீப்பிடித்த நேரத்தில் லிஃப்ட்டைப் பயன்படுத்த வேண்டாம். லிஃப்ட் பாதியில் நின்றுவிட்டாலோ, கதவைத் திறக்க முடியாமல் போனாலோ பிரச்னையாகிவிடும்.
*தீ பரவினால் பதற்றமடையாமல் உடனே அங்கிருந்து விலக வேண்டும். அங்குமிங்கும் ஓடி நெரிசலை உண்டாக்காமல் முறையாக அந்த இடத்தை விட்டுப் போகவேண்டும்.
*புகையில் சிக்கிக்கொண்டால், தரையில் மண்டியிட்டு சுவர் ஓரமாக வெளியேறுங்கள். ஈரத்துணியால் முகம், வாய் இரண்டையும் சேர்த்து மூடிக்கொண்டால் மூச்சுத் திணறல் ஏற்படாது.
*உடையில் தீ பிடித்தால் மூன்று விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் ஸ்டாப், ட்ராப் அண்ட் ரோல் அங்குமிங்கும் ஓடாமல் கீழே படுத்து உருள வேண்டும். தீ அணைப்பதற்கான வழி இது. முடிந்தால் உடைகளை அப்புறப்படுத்துங்கள். தண்ணீரை உடலில் ஊற்றியோ போர்வையாலோ தீயை அணைக்கலாம். றீதீப்புண்களில் ஒட்டியுள்ள உடையைப் பிய்த்து அகற்ற வேண்டாம். மருத்துவரின் உதவியை நாடுவது நல்லது.
*தீப்புண்ணில் எண்ணெய், ஆயின்ட்மெண்ட், இங்க் போன்றவற்றைக் கொட்டக் கூடாது. காயம்பட்ட இடத்தை மெல்லிய துணியால் மூடி மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
*ஷாக் அடித்துவிட்டால், உடனே பவர் சப்ளையை நிறுத்துங்கள். மரக்கட்டை, ஈரமில்லாத போர்வை அல்லது கயிற்றைக் கொண்டு விடுவிக்கவும். பாதிக்கப்பட்டவர் மயக்கமடைந்தால், உடைகளைத் தளர்த்தி, தலையை முன்னும் பின்னுமாக அசைத்துவிடுங்கள். பாதிக்கப்பட்டவர் மூச்சுவிட இது உதவும்.
இந்த எண்களை மறக்காதீர்கள்
*சின்னதாக ஒரு டெலிபோன் டைரி வாங்குங்கள். அதில் வீட்டு போன் நம்பர், முகவரியை எழுதி வையுங்கள். வீட்டில் போன் இல்லையெனில் பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்லது உறவினர் வீட்டு நம்பரை எழுதி வைக்கவும்.
*இது தவிர, ஸ்கூல் போன் நம்பர், சைல்ட் ஹெல்ப் லைன் 1098, அவசரப் போலீஸ் நம்பர் 100, தீயணைப்புப் படை எண் 101 மாதிரியான முக்கியமான போன் நம்பர்களை குறித்து வையுங்கள். டைரியை தினமும் மறக்காமல் எடுத்துச் செல்லவும்.
*பத்து ஒன்பது எட்டு (1098)இந்த எண்ணை மறக்கவே கூடாது. இது சுட்டிகளுக்கான டெலிபோன் நம்பர். சைல்ட் ஹெல்ப் லைன் என்று பெயர். வீட்டிலோ வெளியிலோ பள்ளியிலோ எங்கு என்ன பிரச்னை வந்தாலும் உடனே இந்த எண்ணுக்கு டயல் செய்து உதவி கேட்கலாம்.
*தீ விபத்து ஏற்பட்டாலோ குழியில் விழுவது, லிஃப்டில் மாட்டிக்கொள்வது மாதிரியான உயிருக்கு ஆபத்தான நிலையில் யாராவது சிக்கிக்கொண்டாலோ உடனே தீயணைப்பு மற்றும் மீட்புப் படையை (101) தொடர்பு கொள் ளுங்கள். நீங்களே மாட்டிக்கொண்டால் பதற்றப்படாமல், அதிலிருந்து தப்பும் வழியை யோசியுங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அரிப்பு ஏற்பட்டால் ஆராயுங்கள்…!
» மூச்சுத் திணறல் ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவி
» ரத்தவாந்தி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
» தீவிபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
» குழந்தைகளுக்கு இருதய நோய் ஏற்பட்டால்? : கண்டுபிடிப்பது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum