தீவிபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
Page 1 of 1

தீபாவளியன்று பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி? தீவிபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? என்று தீப்புண் மற்றும் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறை தலைவர் பொதுமக்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
வரும் சனிக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், நேற்று இரவில் இருந்தே பெரும்பாலான இடங்களில் பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்துவிட்டனர். பட்டாசுகளை வெடிப்பது மகிழ்ச்சிதான் என்றாலும் ஆபத்தும் நிறைந்துள்ளது. எனவே பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி என்றும், தீவிபத்து ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
பாதுகாப்பாக வெடிப்பது எப்படி?
பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி? என்பது குறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் தீப்புண் மற்றும் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறை தலைவர் எஸ்.ஆர்.விஜயலெட்சுமி கூறுகையில்,
வீட்டிலும் சரி, பட்டாசு வெடிக்க வெளியில் கொண்டு சென்றாலும் சரி, ஒரே இடத்தில் அனைத்து பட்டாசுகளையும் குவித்து வைக்கக் கூடாது.
பட்டாசு வெடிக்கும் இடத்தின் அருகில் எப்போதும் வாளி நிறைய மணலோ அல்லது தண்ணீரோ கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
பட்டாசு வெடிப்பின் காரணமாக தீவிபத்து ஏற்பட நேர்ந்தால் கோணியோ அல்லது கம்பளி ஆடை கொண்டு மூட கூடாது. தண்ணீர் ஊற்றி தான் அணைக்க வேண்டும்.
பெரியவர்களின் கண்காணிப்பின் கீழ்தான் சிறுவர்கள் பட்டாசு வெடிக்க வேண்டும்.
தற்போது பட்டாசுகளை பற்ற வைப்பதற்காக நீண்ட பத்திகள் வந்துள்ளன. இதனை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் விபத்துகளை பெருமளவில் தவிர்க்கலாம்.
சிறுவர்களுக்கு பெரிய ரக பட்டாசுகளை வாங்கி கொடுக்க கூடாது. இதனால் விபத்துகள் பெருமளவில் தவிர்க்கப்படும்.
பொதுவாக தீபாவளி முடிந்த மறுநாள் வீட்டில் இருக்கும் சிறுவர்கள் வெடித்த பட்டாசுகளை சேகரித்து அதில் இருக்கும் வெடிமருந்தை ஒரு தாளில் கொட்டி தீ வைத்து பற்ற வைப்பார்கள். இது மிகவும் ஆபத்தான செயலாகும். இதை பற்ற வைப்பதன் காரணமாக பெரும் தீவிபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக சிறுவர்களின் முகங்கள் மற்றும் கைகளில் தீக்காயம் ஏற்படுகிறது.
குழந்தைகளுக்கு தீவிபத்து ஏற்பட்டால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் கோணி, கம்பிளியை கொண்டு போர்த்தி வருகின்றனர். இதனால் தீப்புண்ணின் ஆழம் அதிகரித்து விடும். அடுத்தபடியாக சிலர் தீவிபத்து ஏற்பட்டால் பேனா மை, வாழைதண்டின் சாறு போன்றவற்றை பயன் படுத்துகின்றனர். இதுவும் தவறு. பேனா மையை பயன்படுத்துவதனால் தீயினால் ஏற்பட்ட புண்ணின் தன்மையை மருத்துவர்கள் கண்டுபிடிக்க முடியாமல் திணறவேண்டிய நிலைமை ஏற்பட்டு விடுகிறது.
எனவே, எப்படிபட்ட தீவிபத்து ஏற்பட்டாலும் தண்ணீரை வைத்து அணைத்து விட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுவிட வேண்டும். தீபாவளி அன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனைத்து மருத்துவர்களும் பணியில் இருப்பார்கள். மேலும் செவிலியர்களும், மருத்துவமனை பணியாளர்களும் கூடுதலாக பணியில் இருப்பார்கள் என்று அவர் கூறினார்.
குழந்தைகளா? எச்சரிக்கையாக இருந்து மகிழ்ச்சியாக இந்த தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். நாமும் பாதுகாப்பாக மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாட வேண்டியது அவசியமாகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ரத்தவாந்தி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
» சிவராத்திரியன்று என்ன செய்ய வேண்டும்?
» வலிப்பு நின்றவுடன் என்ன செய்ய வேண்டும்?
» என்ன செய்ய வேண்டும்? பாகம்-2
» நிம்மதியா தூங்க என்ன செய்ய வேண்டும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum