வைகாசி விசாக பூஜை
Page 1 of 1
வைகாசி விசாக பூஜை
எமதர்மன் அவதரித்த நாளும் வைகாசி விசாகம்தான். இந்த நாளில் எமதர்மனுக்கு தனி பூஜை செய்கிறார்கள். அவ்வாறு பூஜை செய்வதால் நோய்கள் நீங்கும், நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது ஐதீகம். அரச வாழ்வையும், இல்லற வாழ்க்கையையும் துறந்த புத்தர் பிறந்ததும், போதி மரத்தடியில் அவர் ஞானோதயம் பெற்றதும், கடைசியாக மோட்சம் அடைந்ததும் இம்மாதத்தில்தான்.
வள்ளலார் ராமலிங்க அடிகளார், வடலூரில் சத்தியஞான சபை என்னும் அமைப்பை வைகாசி மாதத்தில்தான் தோற்றுவித்தார். ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்திருநகரியில் பிறந்தார். அவர் பிறந்ததும் வைகாசி விசாக நாளில்தான். வைகாசி பவுர்ணமி அன்று சிவபெருமானுக்கு மகிழம்பூ நிறத்தில் பட்டாடை சாற்றி, 108 பத்மராக கற்களால் ஆன மாலை அணிவித்து, எள் சாதம் நிவேதனம் செய்து வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
காஞ்சி மகா பெரியவர் அவதரித்ததும் வைகாசி மாதமே! சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள மாசிலா மணீஸ்வரர் கோவிலில் வைகாசி பவுர்ணமி அன்று இறைவனும், இறைவியும், லிங்கத்தில் ஐக்கியமாகும் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான அம்மன் கோவில்களில் இந்த வைகாசி மாதத்தில்தான் கொடை விழாக்கள் நடைபெறுகின்றன. ஆக, இறை வழிபாடுகளுக்கு உகந்த மாதமாக திகழ்கிறது வைகாசி.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» வைகாசி விசாக சிறப்புகள்
» வைகாசி விசாக விரதம்
» வைகாசி விசாக விரதம்
» வைகாசி விசாக விரதம்
» வைகாசி விசாக விரதம்
» வைகாசி விசாக விரதம்
» வைகாசி விசாக விரதம்
» வைகாசி விசாக விரதம்
» வைகாசி விசாக விரதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum